ஈஸ்டர் முத்திரை 65-04-10 பீனிக்ஸ் 1. பீனிக்ஸிலுள்ள முழு சுவிசேஷ வர்த்தகர் குழுவின் ஆண்டு நிறைவின் போது இன்று காலை நான் இங்குள்ளது நிச்சயமாக பெரும்பேறு எனலாம். இக்குழுவில், கர்த்தர் எனக்கு ஒரு சிறு பாகத்தை அருளியுள்ளார் என்பதை அறியும் போது-! சகோ. கார்ல் வில்லியம்ஸ், அவருடைய மனைவி, சகோ. ஸ்ட்ரோமேயி, மற்றும் மேடையின் மேல் அமர்ந்துள்ள சகோ.ஷோர், சகோ. அவுட்லா, போதகர்கள், மற்றெல்லா அருமையானவர்களுக்கும் என் வாழ்த்துதல்களைக் கூற விரும்புகிறேன். 2. கடந்த வாரத்தில் எனக்கும் பிறந்த நாள் வந்தது. நான் இக்குழுவை விட சற்று வயதானவன். இக்குழு இங்கு தொடங்கி 5-ஆண்டுகள் நிறைவடைந்தன என்று அவர் சொன்னார் என்று நினைக்கிறேன. 3. அன்றொரு நாள் ஒருவர் என்னிடம், "சகோ. பிரன்ஹாமே, உங்களுடைய வயதென்ன?' என்று கேட்டார். நான், ''இருபத்தாறு. தேவனுக்கு சரிவர சேவை செய்யாத முதல் இருபத்தைந்து ஆண்டுகளை என் மொத்த வயதிலிருந்து கழித்து விட்டேன். அவரும் அந்த ஆண்டுகளை கணக்கிலிருந்து எடுத்து விடுவார் என்று நினைக்கிறேன்'' என்று பதிலுரைத்தேன். இங்கு நான் வந்து உள்ளது நல்லது. 4. உங்கள் நேரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. இங்கு அருமையான சில சாட்சிகளையும், இங்கு நடந்தவைகளையும், பாடல்-களையும் கேட்ட பின்னர், அதை பாழாக்கி விடுவேனோ என்னும் பயம் எனக்குண்டு. அதனுடன் எதையாவது சேர்க்க முடியுமானால், அப்படி சேர்க்கவே நான் விரும்புகிறேன். 5. இன்று காலை அந்த கறுப்பு நிற சகோதரன் பாடின, ''அவருடைய கண் அடைக்கலான் குருவியின் மேல் உள்ளது'' என்னும் பாடலை நான் மெச்சுகிறேன். அந்த சகோதரிகள், நான் முதன் முறையாக இங்கு வந்த போது பாடின, "அவருடன் நான் பேசித் தீர்மானிக்க விரும்புகிறேன்'' என்னும் பாடலை நான் இசைத்தட்டில் பதிவு செய்தேன். அன்று முதல் அப்பாடல் எனக்கு மிகவம் உதவியாக இருந்து வந்துள்ளது. இம்முறையும் அவர்களை இங்கு கொண்டு வந்து, அப்பாடலை மறுபடியும் பாடச் செய்யமுடியுமா என்று சகோ.தாசன்-ரைலியைக் கேட்டுக் கொண்டேன். டெர்ரி, அந்த இசைத் தட்டை வைத்திருக்கிறார் என நினைக்கிறேன். அதை மீண்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். ஏனெனில் அப்பாடல் எனக்கு அதிக பிரியம். அவருடன் பேசுவதே என் வாஞ்சையாயுள்ளது. நாமெல்லாரும் அவ்வாறே செய்ய விரும்புகிறோம் என்று நினைக்கிறேன். அதற்காகவே இன்று காலை நாம் இங்கு வந்துள்ளோம். 6. அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் கூட்டங்கள் - அதை அறிவிக்கலாமா-? அடுத்த ஞாயிறு, ஈஸ்டர் ஆராதனைக்காக நான் வீடு திரும்ப வேண்டும். சனி இரவு, ஞாயிறு, ஞாயிறு இரவு அங்கிருப்பேன். பின்பு நான் கலிபோர்னியா செல்கிறேன். கலிபோர்னியாவின் சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்கள், அக்கூட்ட ங்களில் பங்கு கொள்ள முடியுமானால், அது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பில்லி தவறான விளம்பரத்தை உங்களுக்கு அனுப்பி விட்டான் என்று நினைக்கிறேன். அவன் 'பீல்ட்மோர் ஓட்டல்" என்றான். அங்கு தான் கூட்டங்கள் நடந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு அந்த இடம் கிடைக்கவில்லை. அது எம்பசி ஓட்டலில் நடைபெறும். அங்குள்ள முழு சுவிசேஷகர்கள் எவரும், நீங்கள் அங்கு வரநேரிட்டால், அது எங்குள்ளது என்று உங்களுக்கு அறிவிப்பார்கள். 7. அங்கிருந்து நாங்கள் திரும்பி வந்த பிறகு, நான் தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறேன். இன்றிலிருந்து சரியாக ஒரு மாத காலத்தில், நாங்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு கப்பல் பயணம் செல்லவிருக்கிறோம். அங்கு ஆண்டவரு-க்குள் ஒரு மகத்தான தருணத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அங்கு மூன்று நாட்டினர் உள்ளனர். உங்கள் ஜெபங்களை நாங்கள் கோருகிறோம். ஒருக்கால் நாங்கள் தென்-ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பி வரும் வரை, உங்களை மறுபடி- யும் பார்க்கமுடியாமல் போகலாம். நாங்கள் திரும்பி வரும்போது, உங்களுக்கு ஒரு பெரிய அறிக்கையை கொண்டு வருவோம் என்று நம்புகிறோம். 8. போன முறை, நான் அங்கு சென்றிருந்த போது, கர்த்தர் நடத்தின கூட்டங்களிலேயே மிகவும் மகத்தான கூட்டத்தை எனக்குத் தந்தார். பீட அழைப்பை ஒரு முறை நான் விடுத்த போது - அதாவது அங்கிருந்த சுதேசிகளுக்கு - எனக்குத் தெரிந்தவரை, 30,000 பேர் கிறிஸ்துவை ஒரே சமயத்தில் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் சரீர சுகம் பெற்றதன் அறிகுறியாக பீட அழைப்பை ஏற்றுக் கொண்டு முன் வருகின்றனர் என்று நாங்கள் எண்ணினோம். ஏனெனில் ஒரே சமயத்தில் 25,000 பேர் சுகம் பெற்றனர். அடுத்த நாள் டர்பனின் நகராண்மைத் தலைவரான சிட்னி-ஸ்மித் என்னிடம், 'ஜன்னலருகில் சென்று தெருக்களில் வருபவர்களைப் பாருங்கள்'' என்றார். அப்பொழுது கக்க-தண்டம் நிறைந்த லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. அவைகளுக்கு முன்னால் சுதேசிகள் (முன்பெல்லாம் அவர்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொள்வது வழக்கம்) பட்டினத்தின் தெருக்களில் “நம்பிடுவாய்” என்னும் பல்லவியை தங்கள் சுதேசி மொழியில் பாடிக் கொண்டு வந்தனர். அதை கண்ட போது, என் இருதயம் மகிழ்ச்சியால் பொங்கினது. அப்படிப்பட்ட ஒன்றை நீங்கள் காணும் போது, உங்கள் ஊழியம் வீணாய் போய் விடவில்லை என்பதை அது காண்பிக்கிறது. பாருங்கள், நாம் முயற்சி செய்கிறோம். 9. தேவன் அதை மறுபடியும் செய்வாரென நம்புகிறேன். நாங்கள் அங்கு செல்கிறோம் என்பதனால் அல்ல; நாம் கர்த்தருடைய வருகையை எதிர் நோக்கியிருக்கிறோம் என்பதனால். அப்பாடல் கூறுவது போல், நாம் காணாமற் போன அந்த சிறு ஆட்டைத் தேடிக் கொண்டிருக்கிறோம். அந்த ஆடு உள்ளே வரும் வரைக்கும், அவர் வர மாட்டார். (முன் குறிக்கப்பட்ட) எல்லோருமே மந்தைக்குள் வர வேண்டும். அந்த கடைசி ஆடு உள்ளே வரும் வரைக்கும், அவர் கதவை அடைக்க மாட்டார். 10. எனவே ஊழியக்கார சகோதரரே, உங்களுடன் சேர்ந்து நானும் இன்று காலை அந்த கடைசி ஆட்டைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒருக்கால் இன்று காலை அது பீனிக்ஸில் இருக்கலாம். எனக்குத் தெரியாது. அந்த கடைசி ஆடு உள்ளே வந்தவுடன், மேய்ப்பர் கதவை அடைத்து விடுவார். 11. நான் பேச வேண்டியவைகளை குறிப்பு எழுதி வைத்துக் கொள்ள வேண்டியதாயுள்ளது. எனக்கு வயதாகிக் கொண்டே போவதால், என்னால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. எனவே வேதவாக்கியங்களையும், மற்றவைகளையும் நான் எழுதி வைக்க வேண்டியதாயுள்ளது. முன்பெல்லாம் ஒரே நேரத்தில் 50 வேதவாக்கியங்களை என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் அந்நாட்களில், கடினமான காலத்தை நான் கடக்க வேண்டியதாயிருந்தது. 12. பரிசுத்த வேதாகமத்திலிருந்து மூன்று பாகங்களை வாசிக்க விரும்புகிறேன். நீங்கள் குறித்துக்கொள்ள விரும்பினால்... மேலும் விபரங்கள் அறிய அவைகளைத் தொடர்ந்து படிக்க விரும்பினால், நீங்கள் குறித்துக் கொள்ளுதல் எனக்கு மகிழ்ச்சியைத் தரும். நான் படிக்க எத்தனித்துள்ள மூன்று பாகங்கள்: மத்.28:1-10; வெளி.1:17-18; ரோமர்.8:11. 13. நாம் ஈஸ்டர் பண்டிகையை அணுகிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் வேதாகமத்தை திருப்பிக் கொண்டு, அல்லது குறித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில்; வரப்போகும் வாரம், ஆண்டிலுள்ள வாரங்கள் அனைத்திலும் மகத்தான வரலாறு கொண்ட ஒரு வாரமாகும். வரப்போகும் வாரத்தில், மகத்தான சம்பவம் ஒன்றை நாம் கொண்டாடப் போகிறோம். அது பூமியில் நிகழ்ந்த சம்பவங்கள் அனைத்திலும் மிகவும் மகத்தான சம்பவம். வேறெதுவும் அதைக் காட்டிலும் மகத்தானதாக இருக்க முடியாது. நீங்கள், "சிலுவை மரணம் எனலாம். அது மகத்தான சம்பவம் தான். அநேகர் மரித்தனர். இயேசுவின் காலத்தில் அநேகர் சிலுவை மரணம் எய்தினர். ஆனால் அவர்களில் ஒருவர் மாத்திரமே மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார். அது அதை முத்தரித்து விட்டது. 14. இப்பொழுது நான் வேத வாக்கியங்களைப் படிக்க விரும்புகிறேன். இது ஈஸ்டர் தினத்திற்கு முந்தின ஒரு வகை செய்தி, கர்த்தருக்கு சித்தமானால், 40- நிமிடம் எடுத்துக்கொள்கிறேன். இப்பொழுது மத்தேயு சுவிசேஷம், 28-ம் அதிகாரம்: ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகை, மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின் மேல் உட்கார்ந்தான். அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழயைப் போல வெண்மையாகவும் இருந்தது. காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள். தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: 'நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார். கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார். அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான். அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள். அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிற போது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்ட வந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்து கொண்டார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார். இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 1-ம் அதிகாரம், 17-ம், 18-ம் வசனங்கள்: நான் அவரைக் கண்டபோது செத்தவனைப் போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலது கரத்தை என் மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன். மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவு கோல்களை உடையவராயிருக்கிறேன். இப்பொழுது ரோமருக்கு எழுதின நிரூபம், 8-ம் அதிகாரம் 11ம் வசனம்: 15. ரோமர்-8;11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில்வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். வாசிக்கப்பட்ட இந்த வார்த்தைகளுடன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக! 16. ஈஸ்டரைப் பார்க்கும் போது... அதுவே ஆண்டின் மிக மகத்தான சம்பவம் என்னும் உண்மையை என் இருதயத்தில் பதித்து வைத்துள்ளேன். இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால்... வேதம் கூறியதை அவர் நிரூபித்தார். அவர் என்ன செய்வாரென்று அவரைக் குறித்து வேதாகமம் எழுதி வைத்துள்ள அனைத்தையும் அவர் நிரூபித்து, அவர் உயிரோடெழுந்த போது அவருடைய மேசியாத்துவத்தை அவர் முத்தரித்தார் - ஈஸ்டர் முத்திரை. 17. முத்திரைகள் அதிகமாக இன்று நம்மிடையே உள்ளது. ஈஸ்டர் முத்திரைகளை வாங்கப் போவதாக நாம் பேசிக்கொள்கிறோம். சரி, இன்று காலை ஈஸ்டர் முத்திரையைக் குறித்து பேச விரும்புகிறேன். 18. நாம் பணம் கொடுத்து வாங்கும் முத்திரையைக் காட்டிலும் இது வித்தியாசமானது. நாம் வாங்கும் முத்திரைகளை கடிதங்களின் மேல் ஒட்டி அனுப்புகிறோம். அது காச-நோய் சங்கத்தின் நிதிக்காக அப்படி செய்யப் படுகிறது. ஆனால் இந்த முத்திரையோ வித்தியாசமானது. ஈஸ்டர் என்பது ஆண்டிலேயே மிகவும் முக்கியமான நாள். தேவனுடைய பிள்ளைகளென்று உரிமை கோரும் கிறிஸ்தவர்களாகிய நாம்; அதை நான் விவரித்து, கிறிஸ்து நமக்காக புரிந்த அந்த மகத்தான செயலுடன் நாம். எப்படி ஐக்கியங் கொள்ள முடியுமென்று காண்பிக்க விரும்புகிறேன். - 19. கிறிஸ்து இவ்வுலகில் தோன்றுவதற்கு அநேக நூற்றாண்டுகள் முன்பே, தேவனுடைய வசனம் அவருடைய பிறப்பு, சிலுவை மரணம், பாடுகள், அவருடைய உயிர்த்தெழுதல் இவைகளைக் குறித்து தெளிவாக முன் உரைத்தது. ஈஸ்டர் ஆராதனைகள் அடுத்த வாரம் நடைபெறும். நாம் வானொலி நிகழ்ச்சிகளை அப்பொழுது கேட்போம். சபையில் நடைபெறும் ஆராதனைகளில் நாம் கலந்து கொண்டு, போதகர்கள் கூறுவதைக் கேட்போம். ஆனால் எல்லா நாட்களைக் காட்டிலும், இயேசு செய்த கிரியைகள் அனைத்திலும்..... தேவனுடைய வார்த்தை உறுதிபடுத்தப்பட்டு வருவதை நான் பாராட்டுகிறேன். அதை நிறைவேற்ற அவர் செய்தவை - பிணியாளிகளை சுகப்படுத்துதல், மரித்தோரை உயிரோடெழுப்புதல், பிசாசுகளைத் துரத்துதல், தரித்திரருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல், அவர் வரும் போது என்ன செய்வார் என்று எழுதியுள்ளதோ, அதன் ஒவ்வொரு வார்த்தையையும் நிறைவேற்றுதல். அது மாத்திரமல்ல, நம்முடைய பாவங்களுக்காக அவர் பாடுபட்டு, அதற்குப் பரிகாரமாக சிலுவையில் அறையப்படுதல், அவரைத் தவிர வேறு யாரும் அதை செய்திருக்க முடியாது. 20. ஆனால் இவையெல்லாவற்றிலும் மேலாக, ஈஸ்டர் எல்லாவற்றையும் முத்தரித்து விட்டது. அவருக்கு முன்பிருந்த அநேக தீர்க்கதரிசிகள் இவ்- வுலகில் தீர்க்கதரிசனம் உரைத்தனர். அநேக தீர்க்கதரிசிகள் பிணியாளிகளை சுகப்படுத்தி, மரித்தோரை உயிரோடெழுப்பி, இயேசு செய்த அதே அடையாளங்-களையும் செய்தனர். ஆனால் ஈஸ்டர் அதை நிரூபித்து விட்டது. 21. உண்மையான விசுவாசிக்கு அது தேவனுடைய வார்த்தையை சதா காலத்திற்கும் முத்தரித்து விட்டது. எல்லா அந்தகாரமும் சந்தேகமும் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட காலை அன்று தவிடு பொடியாகி விட்டது. மனிதன் சிறையில் அடைபட்டு இருந்தான் - அந்த நாட்களுக்கு முன்பிருந்த பக்தி உள்ள ஜனங்களும் கூட. அவர்கள் பெரிய பக்தியுள்ள அசைவைக் கண்டனர்; பரிசுத்தாவியின் அசைவை அவர்கள் கண்டனர். ஆனால் அந்த மனிதன் மரித்த போது, அத்துடன் எல்லாமே முடிந்து விட்டது போன்றிருந்தது. ஆனால் இவர் வந்த போது, "என் ஜீவனைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும்: எடுத்துக் கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு'' என்றார் (யோவான்-10:18). அவர் கூறினதை அவர் நிரூபித்துக் காண்பித்தார். என்னைப் பொறுத்தவரை, அதுதான் அதன் முத்திரை ஏதாகிலும் ஒன்று கூறப்பட்டு அது பிறகு நிருபிக்கப்படுதல். . 22. உலகம் உருண்டையாயுள்ளது என்று கொலம்பஸ் நம்பினார். அவர் கப்பலை கவனித்துக் கொண்டேயிருந்தாராம். அவர் கப்பலைக் காண்பதற்கு முன்பே, பாய்மரத்தை அவர் கண்டார். உலகம் உருண்டை வடிவம் கொண்டது என்று இது தான் அவருக்கு நிரூபித்துக் காண்பித்தது. அந்த நாளில் ஜனங்கள் அதை நம்பவில்லை. ஆனால் அவரோ ஒரு நோக்கத்தைக் கொண்டவராய் இருந்தார் அவருடைய நோக்கத்தை அவர் நிரூபிக்க முனைந்தார். அது உண்மையென்று நிரூபிக்கப்பட்டது. தேவனும் தமது வார்த்தை உண்மை என்று நிரூபிக்க நோக்கம் கொண்டார். அப்படி செய்ய ஒருவரால் மாத்திரமே முடியும், அவர் தான் இயேசு. அவர் இவ்வுலகில் வந்து அது உண்மையென்று நிருபித்தார். 23. அது அதை முத்தரித்து விட்டது. அது அந்தகாரத்தின் முத்திரைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து, மற்ற மார்க்கங்களின் பாரம்பரியங்கள் அனைத்தையும் சிதறடித்து விட்டது. அநேக மகத்தான மதத்தலைவர்கள் எழும்பி, பெரிதும் அதிசயமான காரியங்களைக் கூறினர். ஆனால் அவர்கள் எல்லோரும் இன்றும் கல்லறையில் உள்ளனர். வெறுமையான கல்லறை என்பது கிறிஸ்தவ மார்க்கம் ஒன்றில் மாத்திரமேயுள்ளது. அவர் மரித்தோரின் தேவனும் ஜீவனுள்ளோரின் தேவனுமாயிருக்கிறார் என்பதை அது நிருபிக்கிறது. அவர் மரித்தோரை உயிரோடெழுப்ப முடியும். அவருடைய இந்த உயிர்ப்பிக்கும் வல்லமை - உயிர்ப்பிக்கும் ஆவி... அவரால் மரித்தோரை உயிரோடெழுப்ப முடியும் என்பதனை இத்தனை ஆண்டு காலமாக நிருபித்து வருகின்றது. 24. ஈஸ்டர் தினத்தன்று, அவருடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினதன் மூலம், இந்த வெற்றி சிறக்கும் வல்லமையை அவர் நிருபித்துக் காண்பித்தார். அவர் மரணம், பாதாளம், நரகம் இவைகளை மேற்கொள்ள முடியும் என்பதை நிருபித்தார். ''மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன். நான் மரணத்திற்கும் பாதளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்'' (வெளி.1:18). என்னே ஒரு வாக்கு மூலம்-! அவர் அந்த வாக்குமூலத்தை கூறுவதுடன் நின்று விடவில்லை. அவரிடம் என்ன உள்ளது என்று அவர் உரிமை கோரினாரோ, அதை அவர் ஏற்கனவே நிருபித்துவிட்டார். ' 25. வேதத்தை விசுவாசிக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம், நாம் "பேசிக் கொண்டு இருப்பதை நிருபிக்க முடியுமானால், தேவன் அப்பொழுது காலத்தை துரிதப்படுத்துவார் என்று நினைக்கிறேன். அந்த சகோதரி சற்று முன்பு கூறின விதமாக, அது தான் பூமிக்கு உப்பாக அமைகின்றது. அது உண்மை. இவ்வுலகமும் அந்த உப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது. நமது வாழ்க்கை தேவனுடைய வார்த்தையை உறுதிபடுத்தி, அது இன்றைக்கும் ஜீவன் உள்ளதாயிருக்கிறது என்று நமது வாழ்க்கையின் மூலமாகவும் வேதத்தின் மூலமாகவும் நாம் நிருபிக்கக்கூடுமானால், அந்த நாளைத் தான் நாம் எதிர் நோக்கியிருக்கிறோம். 26. வார்த்தை - இந்த ஆவி. "இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களை அது உயிர்ப்பிக்கும்." என்று ரோமர் 8:11 உரைக்கிறது. அவர் யேகோவா மீட்பர் என்றும், அவருக்கு மரணம், பாதாளம், நரகம் இவற்றின் மேல் அதிகாரம் உண்டு என்றும் அவர் நிருபித்தது மாத்திரமல்ல, நமக்கும் அந்த ஆவியை அவர் அளித்து, அந்த ஆவியின் மூலம் நாமும் உயிர்ப்பிக்கப்பட்டோம் என்னும் உறுதியை அவர் நமக்கு தந்திருக்கிறார். இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களை அது உயிர்ப்பிக்கும். 'உயிர்ப்பிக்கும்' என்னும் சொல், 'மரணத்திற்கு பின்பு மீண்டும் உயிரடைதல்' என்னும் அர்த்தங்கொள்ளும் - மரித்த பின்பு உயிரோடெழும்புதல். 27. வெகு காலங்களாக இவ்வுலகம் சந்தேகத்தினால் அடைபட்டிருந்தது. ஆனால் இப்பொழுது அது நிருபிக்கப்பட்டுவிட்டது என கூறப்பட்டது மாத்திரம் அல்ல, நிருபிக்கப்பட்டும் விட்டது. ஏதாவதொரு முக்கியமான காரியம்.... 28. இயேசு, ''நீங்கள் உலகமெங்கும் போய், சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, தேவனுடைய வல்லமையை அவர்கள் மத்தியில் காண்பித்து, அவர்களுக்கு நிருபித்துக் காண்பியுங்கள். விசுவாசிக்-கிறவர்களை இன்னின்ன அடையாளங்கள் தொடரும்'' என்றார். யாருக்கு இந்த அடையாளங்கள் வாக்களிக்கப்பட்டது? விசுவாசிப்பதாக அறிக்கை செய்பவர்-களுக்கு. ''விசுவாசிக்கிற அவர்களை இன்னின்ன அடையாளங்கள் தொடரும்." என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். அப்படியானால் இவை அவர்களுடைய சாட்சியை நிருபிப்பதாக அமைந்திருக்கவேண்டும். 29. “நாங்கள் விசுவாசிக்கிறோம்'' என்று நீங்கள் கூறலாம். விசுவாசிக்கி-றவர்களை தொடருவதாக அவர் கூறின அடையாளங்கள் நம்மிடையே உள்ளன என்று நாம் நிருபிக்கும் வரை, நாம் விசுவாசிகள் என்று வெறும் நாவினால் அறிக்கை செய்கிறவர்களாக மாத்திரம் நாம் இருப்போமேயன்றி, விசுவாசிகள் சுதந்தரித்துக் கொள்ள வேண்டியவைகளை நாம் சுதந்தரித்துக் கொள்ளவில்லை. 30. இதை நினைவில் கொள்ளுங்கள்... சில நாட்களுக்கு முன்பு வானொலி நிகழ்ச்சியொன்றை கேட்டேன். அப்பொழுது பிரசங்கம் செய்த போதகர் நமக்கு விரோதமாய் பேசினார். பெந்தெகொஸ்தே மார்க்கம் என்பது ஒன்றுமில்லை என்றும், அதற்கு செவி கொடுக்க வேண்டாமென்றும், அது நிலையற்றது என்றும் அவர் போதித்தார். அவர், "அந்நிய பாஷை பேசி, ஜெபத்தின் மூலம் வியாதியஸ்தர்களை சுகப்படுத்துவதாக. கூறும் எவரும் அதை கைவிட்டு, இந்த ஏழை ஜனங்களுக்கு ஜெபிக்க வேண்டும். இவர்கள் தவறான நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களிடம் ஏதோ கோளாறு உள்ளது'' என்றார். ஓ, அந்த சகோதரனிடம் சற்று நேரம் பேச எனக்குத் தருணம் கிடைத்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! 31. அந்த போதகர், "அது பெந்தெகொஸ்தே காலத்திலிருந்த அப்போஸ்தலர்-களுக்கு மாத்திரமே அருளப்பட்டது. அவ்வளவு தான்'' என்றார். ஆனால் அதற்கு பின்பு 30-ஆண்டுகள் கழித்து. இந்த வரங்களை பவுல் நிறுவினதாக நான் அறிகிறேன் (1-கொரி.15). அவன் சபையில் அந்நிய பாஷை பேசும் வரத்தையும், அற்புதங்களையும், மற்றெல்லா வரங்களையும் நிறுவினான். அவை சபையில் நிறுவப்பட்டன. . இயேசு, “நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத் தைப் பிரசங்கியுங்கள்” என்றார். "எவ்வளவு தூரம்?'' உலகம் பூராவும். "யாருக்கு?'' சர்வசிருஷ்டிக்கும். அவர்கள் இன்னும் அதை. பெற்றுக் கொள்ள-வில்லை. “விசுவாசிக்கிறவர்களை இன்னின்ன அடையாளங்கள் தொடரும்.” “எவ்வளவு காலமாக?'' உலகமெங்கும். ''யாருக்கு?'' சர்வ சிருஷ்டிக்கும். இந்த அடையாளங்கள் உலகெங்கிலும் சர்வ சிருஷ்டியையும் தொடரும். 32. ''என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக் கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதி-யஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தம் ஆவார்கள்." (மாற்கு 16:17-18). அதுவே அவர் சபைக்கு அளித்த கடைசி கட்டளை. 33. (30 ஆண்டுகள் கழித்து பவுல் இவ்வரங்களை சபையில் நிறுவின போது, "நீங்கள் ஏற்றுக் கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேசத்தை வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்'' என்று கலா. 1:8ல் கூறினான். 34. பெந்தெகொஸ்தே எந்த முடிவுமின்றி தொடங்கினது என்று நான் நம்புகிறேன். அது சர்வ சிருஷ்டிக்கும். எல்லா காலங்களுக்கும், எல்லா இடங்களுக்கும் உரியது என்று நான் நம்புகிறேன். பெந்தெகொஸ்தே என்றென்றைக்கும் நிலைத்திருக்க வேண்டும். பெந்தெகொஸ்தே ஆசீர்வாதம் ஜனங்களின் மேல் தங்கியிருக்க வேண்டும். பெந்தெகொஸ்தே ஆசீர்வாதம் என்பது என்ன? அது உயிர்த்தெழுதலை: உறுதிப்படுத்துகிறதாயுள்ளது. 35. 'சுவிசேஷம்' என்னும் சொல் 'நற்செய்தி' என்று பொருள்படுவதில் வியப்பொன்றுமில்லை. அந்த நற்செய்தி என்ன? அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து விட்டார் என்பதே. "நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்” (யோவான்-14:19). முன்பு அக்கிரமங்களினாலும் பாவங்களி-னாலும் மரித்தவர்களாயிருந்த நம்மை தேவன், இயேசுகிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய அந்த ஆவியின் மூலமாய் ஒருமித்து உயிர்ப்பித்து விட்டார். இப்பொழுது நாம் அவரோடு கூட உன்னதங்களில் உட்கார்ந்து, அவருடன் ஐக்கியங்கொண்டு, அவருடன் உரையாடிக் கொண்டிருக்கிறோம். இது உண்மையென்று விசுவாசிப்பவர்கள் இடம் இதை எடுத்துக் கூறுவதில் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி! 36. இன்று நடைபெறுபவைகளைக் காணும் போது எனக்கு வியப்பு தோன்றுகிறது. நாம் உண்மையாகவே ஜனங்களை தேவனிடம் கொண்டு வருகிறோமா, அல்லது சபைகளுக்கு வழி நடத்துகிறோமா? உயிர்ப்பிக்கும் வல்லமை கொண்டுள்ள கிறிஸ்துவினிடம் அவர்களை நாம் கொண்டு வரவேண்டும். சபைக்கு செல்வது நல்லது தான், நிச்சயமாக. அவ்வளவு தூரம் தான் நாம் செல்ல முடியுமானால், அது போதாது. நாம் இன்னும் தூரம் போக வேண்டியவர்களாயிருக்கிறோம். நீங்கள் சபைக்கு செல்வது நல்லது. ஆனால் சபையிலிருந்து கிறிஸ்துவினிடம் செல்லுங்கள், ஏனெனில் உயிர்த்தெழுதலில் நாம் பங்கு கொள்ள வேண்டுமமென்று எதிர்பார்த்தால், அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையை நாம் நிச்சயம் பெற்றிருக்க வேண்டும். அது ஒன்று மாத்திரமே நம்மை மரித்தோரிலிருந்து உயிரோடு எழச்செய்யும். "இயேசுவை மரித்தோரில் இருந்து எழுப்பினவருடைய ஆவி' உங்களில் வாசமாய் இருந்தால், சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களை அது உயிர்ப்பிக்கும்-உயிரோடு கொண்டு வரும்.'' என்னே ஒரு வாக்குத்தத்தம்! 37. கவனியுங்கள், இந்த உயிர்த்தெழுதலின் சாராம்சமே, இயேசு மரித்தோரில் இருந்து உயிரோடெழுந்தார் என்பதை நிருபிப்பதே. அவர் மரிக்கவில்லை, உயிரோடிருக்கிறார். அவர் இங்கிருக்கிறார். அவர் நமக்குள் இருக்கிறார். “நான் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பேன்'' (யோவான்-14:17). "இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்" (யோவான்-14:19). "உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பேன்.'' 38. கிறிஸ்தவர்கள் என்னும் முறையில், நாமனைவரும் அவர் உயிரோடு இருக்கிறார் என்று உரிமை கோருகிறோம். ஏனெனில் நாம் அவருடைய ஆவியினால் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறோம். நாம் அவ்வாறு உயிர்ப்பிக்கப்படாவிடில், நாம் உயிரடையவில்லை என்று அர்த்தம். 39. கர்த்தருக்கு சித்தமானால், இந்த பொருளின் பேரில் சில நிமிடங்கள் போதிக்கலாம் என்று கருதுகிறேன். எவ்வாறு நாம் உயிர்ப்பிக்கப்பட்டு இருக்கிறோம் என்றும், இது உண்மை என்னும் நிச்சயத்தை நாம் உடையவர்-களாயிருக்க முடியுமா என்றும். இது உங்கள் சொந்த வாழ்க்கை. இது என்னுடைய வாழ்க்கை. அங்கு தான்......... 40. நான் கூறப்போவது உண்மையாயிராவிடில், இவ்வுலகிலுள்ள மூடர்களில் ஒருவனாக நான் கருதப்பட வேண்டும். ஏனெனில், அப்படியானால் ஒன்றுமற்ற ஒரு காரியத்திற்காக என் வாழ்க்கையை நான் அர்ப்பணித்திருக்கிறேன் என்று அர்த்தமாகிறது. அது போன்று நீங்களும்கூட. ஆனால் இது உண்மையாய் இருக்குமானால், அந்த நோக்கத்திற்காக, நாமனைவரும் எடுத்துக் கொண்டு இருக்கும் இந்த நோக்கத்திற்காக நாம் முற்றிலும் கடன்பட்டவர்களாய் இருக்கிறோம். நம்முடைய உற்சாகத்தை நாம் எக்காரணத்தைக் கொண்டும் இழந்து விடக்கூடாது. 41. ஈஸ்டர் தினம் நெருங்குவதை நாம் காணும் போது, அது எனக்குள் ஒரு உணர்ச்சியை உண்டாக்குகிறது. ஏனெனில் அந்த நாளில் தான் அந்த காரியம் தேவனுடைய பார்வையில் என்றென்றைக்கும் முத்தரிக்கப்பட்டு விட்டது என்று நானறிவேன். 42. கல்லறையிலிருந்து அவரை எழுப்பின அதே ஆவி நமக்குள் வாசமாய் உள்ளது என்று நாம் காண்கிறோம். அது எப்படி இருக்க முடியும்? இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவி எப்படி நமக்குள் வாசமாயிருக்க முடியும்? ஆவியே உயிர்ப்பிக்கிறது, வார்த்தை உயிர்ப்பிக்கவில்லை. ஆவி தான் வார்த்தையை உயிர்ப்பித்து, வார்த்தைக்கு ஜீவனையளித்து, அது பறப்பதற்கு சிறகுகளைத் தருகின்றது. ஆவி தான் அப்படி செய்கின்றது. 43. கோதுமை மணி கோதுமை மணியாகவே உள்ளது. ஆனால் உயிர்ப்பிக்கும் ஜீவன் அதற்குள் நுழையும் போது, அது அதற்கு ஜீவனை அளிக்கின்றது. தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட நாம், ஒரு காலத்தில் அக்கிரமங்-களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்தோம். ஆனால் இந்த உயிர்ப்பிக்கும் ஜீவன் சாவுக்கேதுவான உங்கள் சரீரத்துக்குள் எப்படியாவது நுழைவதற்கு தேவன் ஒரு வழியை வகுக்க வேண்டியதாயிருந்தது. 44. நான் உங்கள் சரீரத்தைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன். இயேசுவே வார்த்தை. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் அல்லவா-? “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.” அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்.'' (யோவான் 1:1, 14) என்று யோவான் உரைக்கிறான். 45. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா என்னும் முறையில் அவரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு வார்த்தையையும் அவர் உயிர்ப்பித்தார். அவர் வியாதியஸ்தர்களை சுகமாக்கினார். அவர் கன்னிகையின் வயிற்றில் பிறந்தார். அவையனைத்தும் உண்மையாக நிறைவேறின. அவர் இவ்வுலகில் வெளிப்பட்ட வார்த்தையாயிருந்தார். ஆனால் அவர் ஒரு மனிதனாக இவைகளை செய்ய முடியவில்லை. அவருக்குள் வாசமாயிருந்த தேவ ஆவியானவர் இந்த வாக்குத்தத்தங்களை அவருக்கு உயிர்ப்பித்து தர வேண்டியதாயிருந்தது. 46. இதை நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன். இயேசு மனிதனாயிருந்தார். அவருடைய சரீரம். ஆனால் அவருக்குள் வாசம் செய்த ஆவி. ''நான் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. எனக்குள் வாசமாய் இருக்கிற பிதாவே இவைகளைச் செய்கிறார்.'' இயேசுவே வார்த்தை. ஏனெனில் அவர்... தேவனுக்கு முன்பாக.... ஒரு பெரிய கூட்டத்தின் மத்தியில் இந்த வார்த்தையை உபயோகிப்பது நல்லதல்ல. ஆனால் அவர் தேவனுடைய முன்னறிவின்படி முன்குறிக்கப்பட்டவர். தேவன், ஒரு மீட்பரை அனுப்ப வேண்டுமென்றும், அவருடைய சொந்த குமாரனையே அவர் மீட்பராக அனுப்ப வேண்டுமென்றும், அவர் திட்டமிட்டிருந்தார். எனவே, இயேசு இவ்வுலகில் தோன்றுவாரென்று ஏதேன் தோட்டம் காலம் முதற் கொண்டே தேவன் வாக்களித்து வந்தார், 47. அந்த வாக்குத்தத்தத்தின்படி இயேசு கன்னிகையின் வயிற்றில் மனிதனாகத் தோன்றினார். ஆனால் அந்த வார்த்தையை அவருக்கு உயிர்ப்பிப்பதற்கு தேவனுடைய ஆவி அவசியமாயிருந்தது. அவர் அவருடைய காலத்திற்கு உயிர்ப்பிக்கப்பட்ட வார்த்தையாயிருந்தார். 48. நாம் மீட்பரைப் பெற்றுக் கொள்ள வேண்டிய காலம் வந்தது. நியாயப் பிரமாணம் தவறினது. மற்றெல்லாமே தவறி விட்டன. மீட்பர் ஒருவர் அவசியமாய் இருந்தது. அவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்த மீட்பர். தேவனுடைய வார்த்தையினால் அவர் உயிர்ப்பிக்கப் பட்டார். 49. அக்காலத்தில் மீட்பராகத் தோன்றுவதற்காக அவர் மேல் தங்கியிருந்த அந்த ஆவி; அவரை நாம் ஏற்றுக் கொண்டோம்... இப்பொழுது, இக்கடைசி நாட்களில் என்ன நடக்குமென்று வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளதோ.... நீங்கள் அந்த வார்த்தையின் ஒரு பாகமாக இருப்பீர்களானால், அவரோடு கூட நீங்களும் மீட்கப்படுகின்றீர்கள். ஏனெனில் கிறிஸ்துவுக்குள் வாசமாயிருந்த அதே ஆவி உங்களுக்குள்ளும் வாசம் செய்து, இக்காலத்திற்கென உங்கள் ஜீவனை உயிர்ப்பிக்கிறது. அது மாத்திரமல்ல, கடைசி காலத்தில் அது சாவுக்கு எதுவான உங்கள் சரீரங்களை உயிர்ப்பித்து, அவைகளை உயிரோடெழுப்பி, உயிரோடு கொண்டு வரும். அந்த விதமாக நாம் இதை பார்த்தால், அது எல்லா பயத்தையும் அகற்றி விடும். அது தான் உண்மை . 50. ரோமர் நிருபத்தில் பவுல் அதை நிருபித்து உள்ளான்! ''இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாய் இருந்தால் சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களை அது உயிர்ப்பிக்கும். அவரை உயிரோடெழுப்பின அதே ஆவி தான் உண்மையான விசுவாசியை நித்திய ஜீவனுக்கு உயிர்ப்பிக்கிறது. விசுவாசிக்குள் வாசமாயிருக்கும் இயேசுவை உயிரோடெழுப்பின அந்த ஆவி, அவனை நித்திய ஜீவனுக்கு உயிர்ப்பிக்கிறது. 51. ஒரே ஒரு ஜீவன் மாத்திரமேயுண்டு, ஒரே நித்திய ஆவி, ஒரே நித்திய ஜீவன். அது தான் தேவன். தேவன் மாத்திரமே நித்தியமானவராயிருக்கிறார். நாம் அவருடைய பிள்ளைகளாயிருப்பதால், அவருடைய ஒரு பாகமாக நாமிருக்கிறோம் - அவருடைய சிந்தையின் தன்மைகள் (attributes), சிந்தை வெளிப்படையாக பேசப்படும் போது, அது வார்த்தையாகி விடுகிறது. அப்படி ஆனால், நித்திய ஜீவனைப் பெற்றுள்ள இங்குள்ள ஒவ்வொரு நபரும், உலகத் தோற்றத்துக்கு முன்பே தேவனுடைய சிந்தையில் இருந்தனர். 52. அப்படித்தான் அது இருந்திருக்க வேண்டும். ஏனெனில் நீ ஒரு தன்மை. சிந்தை வெளிப் படையாய் பேசப்படும் போது, அது வார்த்தையாகி விடுகிறது. அந்த வார்த்தை ஜீவனைப்பெற்றுக் கொள்கிறது. அது நித்தியமானது. அதனால் தான் நாம் நித்தியஜீவனை உடையவர்களாயிருக்கிறோம். அதே கொள்கை- யின்படி, மகத்தான தேவனுடைய குமாரன், மீட்பர்...அதே ஆவியினாலே, தேவனுடைய முன்னறிவின்படி, நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளு-மாகிறோம், 53. இயேசு இவ்வுலகில் இருந்த போது, அதை ஏற்றுக்கொள்ளாத லட்சக் கணக்கானவர்களைக் குறித்து சற்று சிந்தித்து. பாருங்கள்-! ஆனால் வரப் போகும் அந்த மகத்தான உயிர்த்தெழுதலின் காலையில் நமக்கும் பங்குண்டு என்பதற்கு நேரடியான அத்தாட்சியும் வேத ஆதாரமும் உள்ளன என்று நாம் அறிந்திருப்பதில், இன்று காலை நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும்! இப்பொழுதே, சாவுக்கேதுவான நமது சரீரங்களில் ஆவியின் அச்சாரத்தை நாம் பெற்றுள்ளோம். பரிசுத்தாவியானவர் தமக்குச் சொந்தமா-னவர்களை கொண்டு செல்ல வரும் போது, முன் குறிக்கப்பட்டவர்கள் முதலாவதாக உயிர்ப்பிக்கப்படுவார்கள். 54. அது ஒரு பெரிய வாக்கு மூலம் தான். என் ஊழியக்கார சகோதரர் இதை புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். ஆதியிலே தேவன், அந்த மகத்தான ஆவியானவர். அப்பொழுது அவர் தேவனாக இல்லை. அவர் நித்தியமானவராக இருந்தார். 'தேவன்' என்னும் சொல் தொழுகைக்குரிய ஒரு பொருளைக் குறிக்கிறது. அப்பொழுது அவரைத் தொழுது கொள்ள எவருமே இல்லை. அப்பொழுது தேவ தூதர்கள் எவருமேயில்லை, ஒன்றுமேயில்லை. அவர் மாத்திரம் தனிமையில் வாழ்ந்து வந்தார். அவர் ஒருவரே நித்தியமானவர். அவர் தேவனாக ஆக வேண்டுமென்றால், அவரைத் தொழுது கொள்ள ஏதாவதொன்று இருக்க வேண்டியதாயிருந்தது. எனவே அவர் தேவ தூதர்களையும், கேரூபின்களையும் மற்றவைகளையும் சிருஷ்டித்தார். அவருடைய மகத்தான திட்டம் படிப்படியாக நிறைவேறத் தொடங்கினது. 55. இதை ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் அவருடைய சிந்தையில் முன்பு இல்லையென்றால், இப்பொழுதும் நீங்கள் இல்லை. உங்களுக்குள் இருக்கும் ஒரு பாகம் நித்தியமாயுள்ளது. நித்தியம் என்பது தேவனுக்கே சொந்தமானது. 56. இப்பொழுது நீங்கள் எங்கு அமர்ந்துள்ளீர்களோ, அது தேவனுடைய சிந்தையில் இருந்தது. இன்று காலை நான் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு இருப்பது அவருடைய சிந்தையில் இருந்தது. ஏனெனில் அவர் முடிவற்றவர். அவர் எல்லாம் அறிந்தவர். எனவே தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் அவரால் கூறமுடியும். ஏனெனில் அவர் நித்தியமானவர். நீ தேவனுடைய குமாரனாக அல்லது குமாரத்தியாக இருப்பதால், ஆதியிலேயே அவருடைய சிந்தையில் நீ இருந்திருக்கின்றாய்.. 57. பரிசுத்தாவியானவர் வந்தபோது.... நீ பூமியில் நடமாடிக்கொண்டிருக்கிறாய். உன் வாழ்க்கையில் ஏதோ ஒன்று காணப்படுகிறது. என்ன நடக்கிறதென்று உனக்குத்தெரியவில்லை. ஆனால் நீ ஆத்தும பசி கொண்டவனாயிருக்கிறாய். 58. பிரஸ்பிடேரியன் சகோதரன் ஒருவர் செய்த பிரசங்கத்தை நான் கேட்டேன். அங்கு பாப்டிஸ்டு சகோதரன் ஒருவர் பிரசங்கித்ததை நான் கேட்டேன் அவர் சுயாதீன சிந்தை 'பாப்டிஸ்டு (Freewill Baptist)-ஊழியத்தில் என் சகோதரர். உனக்குள் ஏதோ ஒன்றுள்ளது- உன்னால் வெளிப்படையாக பே சமுடியாத ஒன்று, அங்கிருக்க உனக்குப் பிரியமில்லை. உன்னுடைய சுபாவத்திற்கு அது முரணாயுள்ளது. தேவனுடைய முன்னறிவு அங்கு கிரியை செய்கிறது. 59. தேவனுடைய வார்த்தை இயேசு என்னும் உருவில் தேவனுடைய குமாரனாகப் பிறந்து, இம்மானுவேலானார். தேவன் தம்மை முழுவதுமாக ஒரு மனிதனில் வெளிப்படுத்தினார். அவர் முற்றிலும் கீழ்ப்படிந்து, யோர்தான் நதியில் தீர்க்கதரிசியினால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் ஞான ஸ்நானத்தில் தேவனுக்குக் கீழ்ப்படிந்து தண்ணீரிலிருந்து வெளியேறினவுடன், யோவானுக்குப் பரலோகம் திறக்கப்பட்டது. பரிசுத்தாவி பரலோகத்திலிருந்து இறங்கி "இவர் என்னுடைய நேசகுமாரன்" என்று கூறுவதை அவன் கண்டான். பரிபூரண கீழ்ப்படிதல். பரிசுத்த ஆவியானவர் அதை தேடிக் கண்டு பிடித்தார் - கீழ்ப்படிதல். 60. ஓ, இன்று காலை வழி தவறிக் கொண்டிருக்கும் மனிதனே, ஸ்திரீயே, நீ இங்கு அமர்ந்திருக்கும் இந்நேரத்தில், உனக்குள் இருக்கும் ஏதோ ஒன்று நீ கேட்டுக் கொண்டிருப்பது உண்மை என்று கூறுமானால், நாம் வாழும் இக்காலத்துக்குரிய சத்தியத்தின் அறிவுக்குள் உன்னைக் கொண்டு வர பரிசுத்தாவியானவர் விழைகிறார் என்று அறிந்து கொள். ஏற்கனவே கடந்து விட்ட காலமல்ல, தற்பொழுது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலம். 61. இயேசுவின் காலத்திலும் கூட ஆயிரக்கணக்கானோர் கடந்த கால சத்தியத்திற்கு கீழ்படிந்திருந்தனர். ஆனால் அப்பொழுதும் நிகழ்காலம் ஒன்று இருந்தது. அது தான் இயேசு தோன்றின காலம். அங்கு வார்த்தை நின்று கொண்டிருந்தார். அங்கு ஜனங்களும் நின்று கொண்டிருந்தனர். அது சத்தியம் என்பதை உறுதிப்படுத்த தேவன் தம்மை வெளிப்படுத்தினார். இன்றைய பெந்தெகொஸ்தேயினருக்கு இதை கூற விரும்புகிறேன். நாம் வாழும் இக்கடைசி நாட்களில், மாம்சமான யாவர் மேலும் தேவன் தமது ஆவியை ஊற்றுவார் என்றும், அப்பொழுது குமாரரும் குமாரத்திகளும் தீர்க்க தரிசனம் சொல்லுவார்கள் என்றும் தேவன் வாக்களித்துள்ளார். விசுவாசிக்கிறவர்களை இன்னின்ன அடையாளங்கள் தொடரும். இதுவே அந்த நேரம். அது தான் உனக்குள் புது சிருஷ்டிப்பை உண்டாக்குகிறது. 62. அண்மையில் இங்கு நான் கூறினது போல (அது அவபக்தி போல் தென்பட்டது. அப்படி இக்காலை உங்களுக்கு தென்படாது என்று நம்புகிறேன்), பண்ணையாளன் ஒருவன் கழுகு முட்டையின் மேல் ஒரு பெட்டைக் கோழியை அடைகாக்க வைத்தான். இந்த பெட்டைக்கோழி எவ்வாறு தனது செட்டைகளின் கீழ் கழுகு குஞ்சைப் பொறித்தது என்னும் கதையை உங்களில் அநேகர் ஞாபகம் வைத்திருப்பீர்கள். பாருங்கள். அது பொறிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை. பிரஸ்பிடேரியன் சபை, மெதோடிஸ்டு சபை, பாப்டிஸ்டு சபை போன்ற எந்த சபையும் கழுகுகளைத் தோன்றச் செய்யக் கூடும். அந்த சூழ்நிலை தான் அவ்விதம் செய்கிறது. கோழி முட்டையை ஒரு நாய்க் குட்டியின் கீழ் வைத்து, நாயைக் கட்டிப்போட்டு அடைகாக்கும்படி செய்தால், நாய்க்குட்டி கோழிக்குஞ்சைப் பொறிக்கும் என்று டாக்டர் பாஸ்வர்த் கூறுவது வழக்கம். ஏன்? அது பொறிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை. எந்த ஒரு சபையும், எந்த ஒரு குழுவும் ஒன்றாகக்கூடி, தங்கள் கோட்பாடுகளையும் மற்ற காரியங்க-ளையும் அகற்றி விட்டு, தேவனுடைய முகத்தை நோக்கி தங்கள் ஜெபங்களை ஏறெடுத்தால், நான் இங்கு நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அது கழுகுகளை பிறப்பிக்கும். 63. அதை தான் இந்த முழு சுவிசேஷ வர்த்தகக்குழு செய்கிறது என்று எண்ணுகிறேன். அவர்கள் எல்லா பாகுபாடுகளையும் அறவே அகற்ற முயல்கின்றனர். நாம் அதிகமாக நம்மை பாகுபடுத்திக் கொள்கிறோம். ஒருவர், ''நான் இதைச் சேர்ந்தவன்,' மற்றவர், ''நான் அதை சேர்ந்தவன்'' என்கிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையை நாம் உடைத்தெறிந்து, பரலோக ஆராதனைக்கேற்ற சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வோமாக-! அந்த சரியான சூழ்நிலைக்குள் நாம் வருவோம். 64. கழுகுகள் எந்த சபையிலும், எங்கும் தோன்ற வழியுண்டு. இந்த கழுகுக் குஞ்சு சிறிது காலம் பெட்டைக்கோழியுடன் நடந்து கொண்டிருந்தது. ஆனால் கோழியின் சத்தம் அதற்கு வினோதமாயிருந்தது. தானியக் களஞ்சிய முற்றத்திலுள்ள எருக்குவியலை கோழி தோண்டுவதன் அர்த்தம் அதற்கு புலப்படவில்லை. ஏனெனில் அது கழுகுக் குஞ்சின் ஆகாரமல்ல. கோழி புழுக்களையும் மற்றவைகளையும் தின்பது போல் கழுகு தின்பதில்லை. எனவே கழுகுக் குஞ்சுக்கு இது விசித்திரமாயிருந்தது. காண்பதற்கு அது விகாரமான வாத்துக் குஞ்சைப் போல் இருந்தது. ஒருக்கால் அது சுயாதீன சிந்தை பாப்டிஸ்டாக இருந்திருக்கலாம், அல்லது பிரஸ்பிடேரியனாக இருந்து இருக்கலாம் - இதை நான் அவபக்தியாக கூறுவதாக கருதவேண்டாம். 65. ஒரு நாள் தாய் கழுகுக்கு, தான் ஒரு முட்டையிட்டது ஞாபகம் வந்தது. அதற்கு கணக்கு எங்காவது இருக்க வேண்டும். எனவே அது தன் பிரம்மாண்டமான செட்டைகளை விரித்து பறந்து சென்று, உரக்க சத்தமிட்டு, அதை தேடி எல்லா இடங்களும் சென்றது. ஒரு நாள் அது தானியக்களஞ்சிய முற்றத்தை கடந்து செல்ல நேர்ந்தது. அப்பொழுது கழுகுக் குஞ்சு தாயின் சத்தத்தைக் கேட்டது. அதற்கு முன்பு அது அந்த சத்தத்தைக் கேட்டதில்லை. அதை கேட்டபோது, கையுடன் கையுறை பொருந்துவது போல், அந்த சத்தம் அதனுடன் பொருந்துவதை அது உணர்ந்து கொண்டது. அது தான் தாய் என்று கழுகுக்குஞ்சு அடையாளம் கண்டு கொண்டது. அவ்வாறே தாயும் அது தனது மகன் என்பதை உணர்ந்து கொண்டது. அதற்காகத்தான் அது தேடி அலைந்தது. 66. எனவே தேவன் ஒவ்வொரு காலத்திலும், அக்காலத்துக்குரிய சபையை நியமித்திருக்கிறார். ஸ்தாபனங்கள் எந்த வித சட்டதிட்டங்களையும் வைத்து இருக்கலாம். ஆனால் அந்த நேரம் வரும் போது, தேவனுடைய பரிசுத்த ஆவியானவர், ஆதியிலேயே தமது சிந்தையில் நினைத்து, அந்த காலத்திற்கு என்று நியமிக்கப்பட்ட நபரை வெளிப்படையாய் உரைத்திருக்கிறபடியால், பரிசுத்தாவியானவர் அந்த முட்டையைத் தேடி அலைவார். அவனும் செய்தியைக் கேட்கும் போது, எந்த ஸ்தாபனமும் அவனைத் தடுத்து நிறுத்த முடியாது. அது உயர பறந்து செல்லும். அது அவ்வாறு பறந்து செல்ல வேண்டும். 67. அது வித்தியாசமான பறவை. அது வித்தியாசமான சிருஷ்டி. அது ஒரு கழுகு. அது சத்தத்திற்கு செவி கொடுக்கும். “என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கிறது.''(யோவான்-10:27). யாரோ ஒருவர் கூறினது போல் (சகோ. வில்லியம்ஸ்), "ஆட்டின் ஆகாரம்.” “என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கிறது. அவைகள் அந்நியனுக்குப் பின் செல்வதில்லை.'' 68. சபை எவ்வளவு தான் உத்தமமாக இருந்தாலும், அதற்கு எவ்வளவு புகழ் வாய்ந்த பெயர் இருந்தாலும், "என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கும் போது - அதாவது வார்த்தைக்கு - ''அவைகள் அந்நியனுக்குப் பின் செல்வதில்லை.'' அவர்கள் நேரடியாக அந்த வார்த்தைக்குச் சென்று விடுகின்றனர். அவர்களால் வேறொன்றும் செய்ய முடியாது. அது காந்தம் போல் அவர்களை இழுத்துக் கொள்ளும். 69. ஒரு நாள் இந்தியானாவிலுள்ள எஃகு ஆலை ஒன்றிற்கு சென்றிருந்தேன். அப்பொழுது ஊதல் ஊதப்பட்டது, எல்லோரும் தங்கள் பணி ஆடைகளை கழற்றி விட்டு, தாங்கள் பணிபுரிந்த இயந்திரங்களில் ஒட்டிக் கொண்டிருந்த இரும்புத் துண்டுகள் அனைத்தையும் கூட்டி, தரையின் நடுவில் குவித்தனர். என்னை அழைத்து சென்ற மனிதனுடன் நான் நடந்து கொண்டிருந்தேன். அவர், "இதை கவனியுங்கள்'' என்றார். எல்லோரும் பணி ஆடைகளை மேசையின் மேல் வைத்து விட்டு சென்று விட்டனர். அவர் ஒரு பொத்தானை தட்டினார். அப்பொழுது ஒரு பெரிய காந்தம் இறங்கி வந்தது. அது கூட்டி வைக்கப்பட்டிருந்த இரும்புத் துண்டுகளை தன் வசம் இழுத்துக் கொண்டு சென்று விட்டது. பின்பு அது ஒரு பெரிய உருக்கும் சட்டிக்குள் அந்த இரும்புத் துண்டுகளைப் போட்டது. அங்கு அது உருக்கப்பட்டு, இயந்திரங்களின் பாகங்களாக வார்க்கப்பட்டது. நான் என்னையே மறந்து அதை கவனித்துக் கொண்டிருந்தேன். 70. நான் அவரிடம், "எனக்கு ஒரு சந்தேகம்” என்றேன். "என்ன, ஐயா?" என்று அவர் கேட்டார். ''சில துண்டுகள் மேலே செல்லவில்லையே?'' என்றேன். "அவை அலுமினியத் துண்டுகள். காந்தம் அலுமினியத்தை இழுக்காது'' என்றார் அவர். “அப்படியா?'' என்று நான் கூறிவிட்டு, "அங்கு ஒரு இரும்புத் துண்டு இருக்கிறதே” என்றேன். 71. அவர், “பாருங்கள் ஐயா, அது ஆணியால் முடுக்கப்பட்டிருக்கிறது'' என்றார். ''அப்படியா? காந்தத்தால் இழுக்கப்பட்ட துண்டுகள் என்னவாகின்றன?' என்று கேட்டேன். 72. அவர், “அது ஆலைக்குச் சென்று,' உருக்கும் சட்டியில் உருக்கப்பட்டு, மீண்டும் வேறொரு சக்கரமாக வார்க்கப்பட்டு வெளி வருகிறது” என்றார். நான், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்றேன். 73. அது தான், பாருங்கள்? ஆகாயத்தில் பெரிய காந்தம் ஒண்றுண்டு. ஒரு நாளிலே அவர் தமது விரலினால் அந்த பொத்தானை தட்டுவார். அவர் வரப் போகும் "நேரத்தை எவருமே அறியார்- பரலோகத்திலுள்ள தூதர்களும் கூட. தேவன் மாத்திரமே அறிவார். ஆனால் வேதத்திலிருந்து சில துண்டுகள் விழுந்துள்ளன. வேத கிறிஸ்தவர்கள், இக்காலத்து விசுவாசிகள். அவர்களில் ஒருவர் இதற்கு முன்பு வாகனத்தின் சக்கரம் சுற்றும் தண்டாகவோ (axle) அல்லது வேறெந்த பாகமாகவோ இருந்திருக்கலாம், அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தேவனுடைய ஆதிக்கத்தை உண்டாக்கப் போகின்றனர். ஆனால் அவர்கள் தேவனுடைய பெரிய உருக்கும் சட்டியில் உருக்கப்பட்டு, தேவனுடைய சாயலில் வார்ப்பிக்கப்பட வேண்டும். கர்த்தரால் இழுக்கப்பட்ட- வர்கள் மாத்திரமே மேலே எடுத்துக்கொள்ளப்படுவார்கள். ஓ, உயிர்த்தெழுத- லுக்கும் நமக்கும் தொடர்புண்டு என்று அறிந்து கொள்வது எவ்வளவு பெரிய சிலாக்கியம்! 74. இப்பொழுது கவனியுங்கள். தேவனுடைய வார்த்தையின் அழைப்பை அறிந்து கொள்ளுதல் என்பது... அது ஒரு கழுகுக்கும் மற்றொரு கழுகுக்கும் உள்ள விஷயம். தாய் கழுகு பருந்தைப் போல் சத்தமிட்டிருந்தால், கழுகு குஞ்சு அதை அடையாளம் கண்டு கொண்டிருக்க முடியாது. அது தானியக் களஞ்சிய முற்றத்திலேயே இருந்திருக்கும். ஆனால் அது கழுகின் சத்தமாக இருந்தது. கழுகுக்குஞ்சுக்குள்ள ஏதோ ஒன்று, தான் கழுகு என்னும் உணர்வை அளித்தது. அப்படித்தான் ஒவ்வொரு விசுவாசிக்கும் நேரிடுகிறது. 75. தேவனுடைய வார்த்தை பிரசங்கிக்கப்பட்டு, அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் உறுதிபடுத்தப்பட்டு, அது இக்காலத்துக்குரிய தேவனுடைய வார்த்தை என்று நிருபிக்கப்படும் போது, விசுவாசியின் உள்ளத்தில் ஏதோ ஒன்று - அவனுடைய தந்தை அல்லது தாயார், அல்லது பாட்டனார், பாட்டியார் எவ்வளவு தான் அந்த ஸ்தாபனத்திற்கு உத்தமமாய் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அந்த ஸ்தாபனம் இக்காலத்துக்குரிய பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்னும் செய்திக்கு முரணாக போதித்தால், அந்த விசுவாசியின் உள்ளத்தில் ஏதோ ஒன்று அதற்கு விரோதமாக சப்தம் இடும். அவன் தானிய களஞ்சிய முற்றத்தை விட்டு சென்று விடுவான். அவன் அப்படித்தான் செய்ய வேண்டும். ஒரு காலத்தில் கோழிக்குஞ்சுகள் சரியாக இருந்திருக்கும். ஆனால் இது கழுகின் காலம். இது வித்தியாச-மானது. அவன் அதை விட்டு விட்டு, உயர நீல வானத்தில் பறக்க வேண்டும். பூமிக்குரிய இந்த சரீரம் உயிர்ப்பிக்கப்பட்டு, உயிர்ப்பிக்கும் ஆவியினால் தேவனுடைய வார்த்தையின் கீழ்ப்படிதலுக்கு கொண்டு வரப்படுகிறது. 76. பரிசுத்தாவியானவர் கழுகாக தேசத்தின் மேல் பறந்து வரும் போது, விசுவாசியைக் கண்டு பிடிக்கிறார். ''ஒருவனும் என்னிடத்தில் வர முடியாது. ஒருவன் விரும்பினாலும் என்னிடத்தில் வர முடியாது. பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். ஆனால் ஒருவனும் தானாகவே என்னிடத்தில் வர முடியாது.'' உங்களுடைய யோசனையல்ல, உங்களுடைய இழுப்பு அல்ல. தேவன் உங்களை இழுக்கிறார். "பிதாவா-னவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்'' (யோவான் 6:37). 77. இப்பொழுது பரிசுத்தாவியானவர் உலகில் இருந்து கொண்டு, தேவன் இக்காலத்திற்கென ஜீவனுக்கு நியமித்த நபர்களை தேடிக் கொண்டு இருக்கிறார். அவர்களைக் கண்டு பிடித்தவுடனே, நம்மெல்லாரையும் மீட்ட அந்த மகத்தான தேவனுடைய குமாரனுக்கு அவர் என்ன செய்தாரோ, அதையே இவர்களுக்கும் செய்கிறார். அதாவது அவர் அவர்களுக்குள் வந்து, அவருக்குரிய இடத்தை எடுத்துக் கொண்டு, அவர்களுக்குள் வாசம் செய்கிறார். 78. இப்பொழுது கவனியுங்கள். '...உயிர்ப்பிக்கும் வல்லமையைக் கொண்டு வந்தது. இயேசுவின் மேல் தங்கின அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை, அவருடைய காலத்திற்கென வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருந்த ஒவ்வொரு வார்த்தையையும் வெளிப்படுத்த, அவரை உயிர்ப்பித்தது. இக்காலத்தில் நம் மேல் தங்கியுள்ள பரிசுத்தாவியும் அதையே செய்கிறது. அது பரிசுத்தாவியை கேலி செய்வதல்ல...பரிசுத்தாவியை கேலி செய்ய நீங்கள் பிசாசல்ல. அது உண்மையான பரிசுத்தாவியாக இருக்குமானால், இக்காலத்துக்குரிய வாக்குத் தத்தத்தை அது வெளிப்படுத்தும். 79. அது லூத்தரின் மேல் விழுந்தபோது, அக்காலத்துக்குரிய வாக்குத்தத்தத்தை அது வெளிப்படுத்தினது. அது வெஸ்லியின் மேல் விழுந்த போது, அந்த காலத்துக்குரிய வாக்குத்தத்தத்தை அது வெளிப்படுத்தினது. அவ்வாறே அது இந்நாளில் விழும் போது, இந்நாளுக்கு உரிய வாக்குத்தத்தத்தை அது வெளிப் படுத்தும். அது நோவாவின் மேல் விழுந்த போது அக்காலத்துக்குரிய வாக்குத்தத்தத்தை அது வெளிப்படுத்தினது. 'அது இயேசுவின் மேல் விழுந்த போது, அவர் காலத்துக்குரிய வாக்குத்தத்தத்தை அது வெளிப்படுத்தினது. பாருங்கள்? பரிசுத்தாவி இறங்கி வந்து, எடுத்துக்கொள்ளப்படுதலுக்கென்று முன்குறிக்கப்பட்ட ஜனங்களை உயிர்ப்பிக்கிறது. அவன் உண்மையாக கழுகாக இருந்தால், அவனுடைய காலத்துக்குரிய செய்தியை அவன் புரிந்து கொள்வான். அவன் உண்மையாக கழுகாக இருந்தால்... 80. தானியக்களஞ்சிய முற்றத்திலிருந்த கழுகுக்குஞ்சு நன்றாகத்தான் ஆகாரம் தின்றது. ஆனால் அது சரியான ஆகாரம் அல்ல என்று அது உணர்ந்து கொண்டது. அவன், சத்தியத்தை கேட்ட மாத்திரத்தில் அதை ஏற்றுக் கொண்டான். ''என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிற வனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்" என்று இயேசு யோவான்-5:24ல் கூறியுள்ளார். அது எவ்வளவு எளிது என்று யோசித்துப் பாருங்கள்-! ''விசுவாசிக்கிறவனுக்கு. அதை சரியான விதமாகக் கூறினால், ''புரிந்து கொள்கிறவனுக்கு." நீங்கள் தெருவில் சென்று ஒரு விலை மாதுவினிடம், “நீ விசுவாசிக்கிறாயா?'' என்று கேட்டால். 81. ''நிச்சயமாக” என்பாள். ''அவர் தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக் கிறாயா?'' "நிச்சயமாக.” "ஞானஸ்நானம் பெற்றிருக்கிறாயா? ''நிச்சயமாக நீங்கள் குடிகாரனிடம் சென்று, "அந்த போதகருடைய பிரசங்கத்தைக் கேட்டாயா?'' என்று கேட்டால், "ஆம்" என்பான். "அதை விசுவாசிக்கிறாயா?" ''நிச்சயமாக.'' 82. ஆனால் பாருங்கள், "புரிந்து கொள்கிறவனுக்கு". இக்காலத்தில் அவனுடைய ஸ்தானத்தை அறிந்திருக்கிறவனுக்கு. "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு''. இறந்த காலம் (ஆங்கிலத்தில், hath eternal life என்று எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) "அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.'' 83. இந்த புதிய நித்திய ஜீவன் உங்களுக்குள் வாசம் செய்யும் போது, சாவுக்எஉ எதுவான நீங்கள் சாவாமைக்கு உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதற்கு அது அச்சாரமாயுள்ளது. அதை மறுபடியும் கூறுகிறேன். ஆவியானவர் உன்னைக் கண்டு பிடித்து, உனக்குள் வரும்போது அது, உலகத்தோற்றத்துக்கு முன்பு நீ தேவனுடைய சிந்தையில் இருந்து அவர் உனக்காக வைத்த நித்திய சுதந்திரத்தின் அச்சாரமாக உள்ளது. அதுவே உன் மறைந்துள்ள சக்தி (potential). நீங்கள் ஓக் மரத்தை கேட்டு, ஓக் மரத்தின் பழத்தை (acorn) உங்களுக்குத் தந்தால், ஓக் மரத்தின் சத்து அதன் பழத்தில் உள்ளது. அது வளருவதற்காக நீங்கள் காத்திருக்கவேண்டும். 84. நாமும் அவ்வாறே காத்திருக்க வேண்டும். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்போது, அது உங்களைக் கண்டு கொண்டு, உங்கள் மேல் தங்கியுள்ள தேவனுடைய மறைந்துள்ள சக்தியாக உள்ளது. நீங்கள் வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட தேவனுடைய ஆவியினால் கிறிஸ்துவின் சரீரத்துக்குள் முத்தரிக்கப்படுகின்றீர்கள். தேவன் கீழே நோக்கி கல்வாரியில் இயேசு மரிப்பதைக் கண்டபோது, அவர்... அவர் சரீரமாகிய மணவாட்டிக்காக மரித்தார். அதுவே 'வார்த்தை சபை' - அதாவது அந்த காலத்துக்குரிய தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கும் சபை - அது பாதங்கள், சரீரம் தலை எதுவாய் இருந்தாலும். கிறிஸ்து இரத்தம் சிந்தி மரித்தார். தேவன் அவரை நோக்கிப் பார்த்து, அவருடைய உயிர்த்தெழுதலையும், அவருடன் கூட சபை ஈஸ்டரன்று உயிரோடெழுவதையும் கண்டார். 85. இவையனைத்தையும் நான் ஒன்று சேர்த்து கூற விரும்புகிறேன். ஏனெனில் கர்த்தருக்குச் சித்தமானால், ஒரு சில காரியங்களை கூற எண்ணியுள்ளேன். கவனியுங்கள், அது அச்சாரம் அல்லது மறைந்துள்ள வல்லமை. நீங்கள் பரிசுத்தாவியைப் பெறும் போது, உங்கள் உயிர்த்தெழுதலுக்கு அது உயிர்ப்பிக்கும் வல்லமையாய் அமைந்துள்ளது. அந்த மறைந்துள்ள வல்லமை உங்களுக்குள் வாசம் செய்கிறது. நீங்கள் இப்பொழுது வளர்ந்து வருகின்றீர்கள். முடிவில் முழு உயிர்த்தெழுதலுக்கு வளர்ந்து விடுவீர்கள். 86. எந்த மரமும் ஒரே இரவில் வளர்ந்து விடுவதில்லை. அது படிப்படியாக வளரவேண்டும். நாம் தேவனுடைய கிருபையிலும் அறிவிலும் வளருகிறோம். நீங்கள் பரிசுத்தாவிக்குள் அபிஷேகம் பண்ணப்படுகிறீர்கள். பெந்தெகொஸ்தே சபை பரிசுத்தாவிக்குள் அபிஷேகம் பண்ணப்படும் போது, அது வளரத் தொடங்குகிறது. ஏற்கனவே செத்துப் போன கிளைகளை அவர் வெட்டி சுத்தம் செய்கிறார். ஆனால் மரமானது வளர்ந்து கொண்டே செல்கிறது. அது இப்பொழுதும் வளர்ந்து கொண்டு இருக்கிறது. ஏனெனில் அது உயிர்த்தெழுதலின் கட்டத்தை அடையவேண்டும். 87. விசுவாசிகளாகிய நீங்கள் பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகின்றீர்கள். அது வார்த்தையை உங்களுக்கு உயிர்ப்பிக்கிறது. நீங்கள் முதலாம், இரண்டாம், மூன்றாம் கிளை இப்படி படிப்படியாக வளர்ந்து கொண்டே வரும்போது, வார்த்தை உங்களுக்கு உயிர்ப்பிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. பரிசுத்த ஆவியானவர் அதை உங்களுக்கு உயிர்ப்பித்துத் தருகிறார். பெந்தெகொஸ்-தேயை கவனியுங்கள். அவர்கள் பெற்றுக் கொண்ட புது ஜீவனால் அவர்களுடைய சரீரங்கள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. அது என்னை பக்தி பரவசம் கொள்ளச் செய்கிறது! யோசித்துப் பாருங்கள். 88. மீன் பிடிப்பவர்கள், சுங்கவரி வசூலிப்பவர்கள், எளிய சிறுபெண், சாதாரண இல்லால்கள், சிறு கன்னிப் பெண்கள். இவர்கள் விசுவாசிகளாயிருந்தனர். இது சத்தியமென்று அவர்கள் விசுவாசித்தனர். இயேசு மரித்தபோதிலும், அவரை அவர்கள் விசுவாசித்தனர். அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்றும் அவர்கள் விசுவாசித்தனர். அது முற்றிலுமான தேவனுடைய சாட்சியென்றும், அவர் இயேசுவை உயிர்ப்பித்து, உயிரோடெழுப்பினார் என்றும் அவர்கள் விசுவாசித்தனர். 89. அவர்கள் தங்கள் உரிமைப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள பெந்தெகொஸ்தே நாளன்று மேலறைக்குச் சென்றனர். உரிமைப் பத்திரம் என்றால் என்ன தெரியுமா? மரண சாசனம் ஒன்று எழுதப்பட்ட பின்பு அது அமுல்படுத்தப் படுவது. அவர்கள் உரிமைப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள மேலறைக்குச் சென்றனர். அங்கே அவர்கள் உயிர்ப்பிக்கப்பட்டனர். என்னே ஒரு மயிர் கூச்செறியும் சம்பவம்-! அவர்களுக்காக அந்த நிலம் வாங்கப்பட்டது. அவர்கள் அதை பெற்றுக்கொண்டு, அதற்கு உரிமையாளர்களாகி விட்டனர். 90. அது உண்மையா இல்லையா-?" அவர் உயிரோடெழுந்ததை நாங்கள் கண்டோம். அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்-? "அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அந்த மனிதன் சிலுவயில் அறையப்படுவதாகக் கண்டோம்.'' அப்பொழுது மேகங்கள் எழும்பி ஆகாயத்தை இருளடையச் செய்தன. பூமி பயந்து போய் அதிர்ந்து முகங்குப்புற விழுந்ததால், பூமியதிர்ச்சி உண்டானது. அவரைக் கல்லறையில் வைப்பதற்கு முன்பு அவருடைய இருதயத்தை அவர்கள் ஈட்டியால் குத்தினர். அதன் பின்பு அவருடைய சரீரத்தை அவர்கள் அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பின் கல்லறையில் வைத்தனர். அவர் மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தாரென்று நாம் காண்கிறோம். ''அவர் மறுபடியும் உயிரோடெழுந்தார். அதற்கு நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம். அவர் உயிரோடிருக்கிறாரென்று நாங்கள் அறிவோம்'' என்று சீஷர்கள் கூறினர். 91. அது அவர்களுக்கு என்ன செய்தது? எல்லா பயத்தையும் அவர்களை விட்டுப் போக்கினது. இயேசு ''பயப்படாதே, மரித்தேன், ஆனாலும் சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன்'' என்றார். அது அவர்களுடைய பயத்தையெல்லாம் போக்கினது' அவர்கள் பெந்தெகோஸ்தே நாளன்று மேலறைக்குச் சென்ற போது, அங்கு உயிர்ப்பிக்கும் வல்லமையை அவர்கள் பெற்றனர். அவர்களை உயிரடையச் செய்த அந்த வல்லமை. 92. பிரஸ்பிடேரியன், மெதோடிஸ்டு சகோதரர்களாகிய நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் போதே, மறைந்துள்ள வல்லமையாக அதைப் பெற்றுக் கொண்டதாக கருதுகின்றீர்கள். ஆனால் உரிமைப் பத்திரம் உங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லையே-! அது தான் மரண சாசனத்தை அமுல்படுத்துகின்றது. 93. தேவன் ஆபிரகாமுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை கொடுத்திருந்தார். ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆனால் அவர் விருத்தசேதனம் என்னும் முத்திரையின் மூலமாக அந்த உடன்படிக்கையை முத்தரித்தார். அவ்வாறே தேவன் வாக்குத் தத்தம் ஒன்றை உங்களுக்குக் கொடுத்து, நீங்கள் மறைந்துள்ள வல்லமையாக அதை பெற்றுக்கொள்வீர்கள் என்றும், நீங்கள் உயிரோடெழும்புவீர்கள் என்றும், கடைசி காலத்தில் அவருடன் கூட இந்த சரீரம் மகிமையடையும் என்றும் கூறினார். ஆனால் அந்த உரிமைப்பத்திரம் அமுலாக வேண்டும். அது எப்பொழுது அமுலாகுமென்றால், அதற்கு எதிராக உள்ள எல்லாம் அகற்றப் பட்டு, உங்கள் கையில் அது கிடைக்கும்போது, உங்களிடம் முத்திரையுள்ளது. அது உங்களுடையது. உரிமை பத்திரத்தில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொன்றும் உங்களுக்கு சொந்தமாகி விடுகிறது. ஆமென், 94. நாம் இயேசு கிறிஸ்துவை நமது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்று, அவரை விசுவாசிக்கத் தொடங்கும் போது, தேவன் நமது மனந்திரும்புதலையும், அவர் மேல் நாம் வைத்திருக்கும் விசுவாசத்தையும் அங்கீகரித்து, அந்த உரிமை பத்திரத்தை நமக்கு அனுப்புகிறார். அது நமக்கு ஒரு உறுதி. அதாவது, நீங்கள் செய்த தவறான காரியங்களுக்காக மனந்திரும்பி விட்டீர்கள் என்னும் உத்தரவாதத்தை அது அளிக்கிறது. அல்லேலூயா-! அந்த நிலம். விலை கொடுத்து வாங்கப்பட்டு விட்டது. அதன் உரிமைப்பத்திரம் உங்கள் கையில் உள்ளது. 95. அந்த உரிமைப் பத்திரம் உங்கள் கையிலுள்ள போது, அந்த நிலம் உங்களுக்குச் சொந்தமல்ல என்று யாராவது கூறட்டும் பார்க்கலாம்-! நாட்டிலுள்ள எந்த சட்ட திட்டமும் அவ்வாறு கூற முடியாது. ஏனெனில் உரிமைப்பத்திரம் உங்கள் கையிலுள்ளது. பிசாசோ, சபையோ, அல்லது வேத சாஸ்திரமோ, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் நம்மை இயேசுகிறிஸ்துவுக்குள் அங்கீகரித்து நமக்குக் கொடுத்திருக்கும் உரிமைப் பத்திரத்தின் எல்லையைத் தாண்டி வரவே முடியாது. 96. நாம் உயிரோடெழும்புவோம் என்னும் உறுதி நமக்களிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நாம் ஏற்கனவே அவருக்குள் உயிரோடெழும்பி விட்டோம். ஆமென். 97. முழு காரியமும்... சாவுக்கேதுவான நமது சரீரத்திற்கு அது என்ன செய்கிறது-? நமது கருத்தை அது மாற்றி, நமது எண்ணங்களை அது மாற்றி, மேலானவைகளின் மேல் நமது அன்பை செலுத்தத் தூண்டுகிறது. புகை பிடித்தல், மது அருந்துதல், சூதாடுதல் போன்றவை மரித்து விடுகின்றன. அது உங்களுக்குள் ஆழமாகச் சென்று, நீங்கள் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் உயிர்ப்பிக்கப்படுகின்றீர்கள். அது உங்கள் சரீரங்களை எடுத்துக் கொள்ளப்படுத- லுக்கேற்ற நிலைக்கு ஏற்கனவே கொண்டு வந்து விடுகிறது. 98. கவனியுங்கள், மேலறையிலிருந்த பெந்தெகொஸ்தே ஜனங்கள் பரிசுத்த ஆவியினால் உயிர்ப்பிக்கப்பட்ட போது நான் கூறுவதற்கு செவி கொடுங்கள்-! பெந்தெகொஸ்தே நாளன்று மேலறையில் கூடியிருந்த அந்த பெந்தெகொஸ்தே-குழு, அவர்களுடைய உரிமைப்பத்திரத்தை தேவனிடமிருந்து பெற்றுக்கொண்ட போது... அது உண்மையாக அவர்களுடைய ஆத்துமாக்களை மகிமைப்படுத்தினது. அக்கினி நாவுகள் பிரிந்து அவர்கள் மேல் தங்கின. அவர்கள் கூச்சலிட்டனர். அது அவர்களுடைய சரீரங்களை உயிர்ப்பித்த-தானால், உலகில் பேசப்படும் எந்த பாஷையையும் அவர்களால் பேச முடியவில்லை. பரலோக பாஷைக்கு அவர்களுடைய சரீரங்களை அது உயிர்ப்பித்தது. அவர்கள் போக வேண்டிய அந்த இடத்திற்குரிய பாஷை. 99. தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமை சாவுக்கேதுவான அவர்களுடைய சரீரங்களை குலுக்கி அசைத்ததன் விளைவாக, மரித்துப் போகக் கூடிய மானிடருடைய பாஷையை, என்றென்றும் மரிக்காதவர் பேசும் பாஷையாக அது மாற்றி அமைத்தது. என்னே ஒரு உயிர்ப்பிக்கும் வல்லமை-! இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களை அது உயிர்ப்பிக்கும். 100. ஜீவனுள்ள தேவனுடைய வல்லமையினால் நாம் உயிர்ப்பிக்கப்படுகி-றோம். அந்நிய பாஷைகள்... பரலோக-பாஷைக்கு உயிர்ப்பிக்கப்படுதல்... அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இருந்து வேறொரு சூழ்நிலைக்கு கொண்டு செல்லப்படுதல். அவர்களுக்குள் உயிர்ப்பிக்கும் ஜீவன் வந்த போது, அது அவர்கள் மொழியையும் கூட உயிர்ப்பித்தது. அவர்கள் அந்நிய பாஷையில் பேசத் தொடங்கினர். ஓ, ஆமாம். 101. இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் உரிமைப்பத்திரத்தை பெற்றுக் கொண்ட பின்பு, தேவனுடைய வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு அளிக்கப்பட்ட ஒவ்வொரு வாக்குத்தத்தமும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட உயிர்ப்பிக்கும் வல்லமை, வேதத்தில் காணப்படும் ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் அவர்களுக்கு உயிர்ப்பித்துத் தந்தது. எனவே, வியாதியஸ்தர் மேல் அவர்கள் கைகளை வைத்தனர், அப்பொழுது அவர்கள் சொஸ்தமடைந்தனர். அவர்கள் அந்நிய பாஷை பேசினர், அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தனர். ஏனெனில் அவையனைத்தும் தேவனுடைய வாக்குத்தத்தங்களாயிருந்தன. அவர்களுக்கு. அதை மீட்டுக் கொடுப்பதற்காக இயேசு மரித்த போது தேவனுடைய புத்திரர்களுக்கு சொந்தமான இடத்தை தேவன் யாரென்பதை அவர் அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அதை நாம் சமுதாய மயமாக்கி, ஒரு ஸ்தாபனத்தில் நுழைப்பதற்கு நமக்கு என்ன துணிச்சல்-! அப்படி செய்வதற்கு நமக்கு எவ்வித உரிமையும் கிடையாது. 102. இன்று பரிசுத்தாவியானவர், இந்த செய்தியை விசுவாசிக்கும் உத்தம இருதயங்களை தேடிக் கொண்டிருக்கிறார். வேதத்தில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் விசுவாசிக்கு உரியது. நீங்கள் அதை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளும்போது - நீங்கள் அப்படி செய்வீர்கள் என்று தேவனுக்குத் தெரியும். அவர் அதற்கான உரிமைப்பத்திரத்தை உங்களிடம் தருகிறார். அப்பொழுது அளிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் உங்களுடைய உரிமையாகி விடுகின்றது. பரிசுத்தாவியானவர் அதை உங்களுக்கு உயிர்ப்பித்துத் தர வேண்டியவராயிருக்கிறார். ஒ, என்னே! நாம் எவ்வளவு சிலாக்கியம் பெற்ற ஜனங்கள்-! தேவனுடைய மகத்தான பரிசுத்த ஆவியானவர் அந்த வல்லமையை நமக்களிப்பதை காண்பது எவ்வளவு அற்புதமாயுள்ளது-! யோசித்துப் பாருங்கள். 103. இக்காலத்துக்குரியவைகளைக் குறித்து சாட்சி பகர பரிசுத்தாவியானவர் தாமே இங்குள்ளார். இயேசு அவ்வாறு கூறியுள்ளார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அதை புறக்கணிக்க எந்த மனிதனுக்கு துணிச்சல் வரும்-? ''நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.'' (யோவான் 14:12). "விசுவாசிக்கிறவர்களால் இன்னின்ன அடையாளங்கள் நடக்கும். அது தான் நமக்களிக்கப்பட்டுள்ள உறுதி. 104. அமர்ந்திருக்கும் ஒரு கூட்டம் ஜனங்கள் மத்தியில் அந்த அடையாளங்கள் காணப்பட்டால், அது தேவனுடைய சொத்து என்பதை அறிவிக்கும் உரிமைப் பத்திரமாக உள்ளது என்பதற்கு அதுவே அத்தாட்சி. நமது ஈஸ்டரும் அவ்வாறே உள்ளது. ஆமென். நாம் ஈஸ்டரில் இருக்கிறோம். நாம் ஏற்கனவே உலககாரியங்களிலிருந்து தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு எழுப்பப்பட்டு விட்டோம். அல்லேலூயா-! நாம் எழும்புவோம் என்றல்ல. நாம் ஏற்கனவே எழும்பி விட்டோம். அது மறைந்துள்ள வல்லமை. அவர் கடைசி நாட்களில் தமது ஆவியை ஊற்றுவார் என்றும், இதை தான் அவர்கள் செய்வார்கள் என்றும் தேவனுடைய வாக்குத்தத்தமாயுள்ளது. கவனியுங்கள், அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்தார்கள். எல்லாமே தேவனுடைய வாக்குத்தத்தத்தில் காணப்பட்டது. “கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். உங்கள் வயோதிபர் சொப்பனம் காண்பார்கள். உங்கள் வாலிபர் தரிசனங்களைக் காண்பார்கள். இப்படியாக வெவ்வேறு வாக்குத்தத்தங்களை அவர் அளித்து இருந்தார். இவையனைத்துமே தேவனுடைய வாக்குத்தத்தமாக அமைந்து இருந்தது. 105. இயேசு நமக்காக அதை மீட்டுக் கொடுத்தார். நாம் அப்பொழுது... அதன் அடிப்படையில் நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் நாம் இருக்கவேண்டுமென்று நியமிக்கப்பட்டிருப்போமானால் (கோழிக் குஞ்சுகளின் கூட்டில் கழுகு குஞ்சு இருந்தது போல), உங்களைக் கண்டு பிடிக்க பரிசுத்த ஆவியானவர் இங்குள்ளார். அவர் உங்களைக் கண்டு பிடிக்கும் போது, அவருடைய அழைப்பை நீங்கள் அடையாளம் கண்டு கொள்வீர்கள். நீங்கள் வாழும் நேரத்தை அறிந்து கொள்வீர்கள். நீங்கள் எவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று அறிவீர்கள். நீங்கள் வேகமாக அவரைச் சந்திக்க எடுத்துக் கொள்ளப்படுவீர்கள். இப்பொழுதே நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஓ, என்னே ஒரு வாக்குத் தத்தம்-! இவைகளை நமக்குத் தந்தருளின நமது பரலோகப் பிதா எப்படிப் பட்டவர்-! 106. அவர்கள் தேவனுடன் கொண்டுள்ள ஐக்கியத்தை ஆவி உயிர்ப்பிக்கிறது. அதன் விளைவாக அவர்கள், அவர்களுடைய காலத்தில், மரித்தோரை உயிரோடெழுப்ப முடிந்தது. அவர்கள் மரித்தோரின் மேல் தங்கள் சரீரங்களை கிடத்தின போது மரித்தோர் உயிர் பெற்றனர். 107. கூர்ந்து கவனியுங்கள். இயேசு செய்த அதே கிரியைகளை அவர்களும் செய்தனர். ஏனெனில் அவர் மேல் தங்கியிருந்த அதே ஆவி தான் அவர்கள் மேலும் தங்கியிருந்தது... ஆவி ஒரு மனிதனை ஒரு விதமாக கிரியை செய்யத்தூண்டினால், அதே ஆவி வேறொருவனின் மேல் தங்கியிருக்கும் போது, அவனையும் அதே விதமாக கிரியை செய்யத் தூண்டும். 108. நீ தேவனுடைய ஆவியைப் பெற்றிருப்பதாக உரிமை பாராட்டிக் கொண்டு, அதே சமயத்தில் தேவனுடைய கிரியைகளை நீ மறுதலிப்பாயானால், அது எப்படி உன் மேல் வந்திருக்க முடியும்-? முடியவே முடியாது.' 109. கவனியுங்கள், தேவனுடைய ஜீவன் - கிரேக்க மொழியில் 'Zoe' என்று அழைக்கப்படும் அந்த ஜீவன் - அவர்கள் மூலமாகவும் அவர்களுக்குள்ளும் அசைவாடி, அவர்களுடைய சிந்தையை தேவனுடைய வார்த்தைக்கு உயிர்ப்பிக்கிறது. இதை மறுபடியும் மெல்ல கூற விரும்புகிறேன். ஜனங்களின் மத்தியில் அசைவாடும் தேவனுடைய ஆவி, நபரின் சிந்தையை தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு உயிர்ப்பிக்கிறது. பாருங்கள், அது அப்படி செய்கிறது. 110. உங்களுக்கு நான் காண்பிக்க முயல்வது என்னவெனில் "நான் சபையைக் குறித்தும், அவருக்குள் ஜீவன் உயிர்ப்பிக்கப்படுவதைக் குறித்தும் பேசிக் கொண்டு இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். தொடக்கத்தில் இவையனைத்தும் அவருடைய தன்மைகளாகவே (attributes) இருந்தன. ஆனால் அப்பொழுது, "ஜான்டோ என் ஊழியக்காரனாயிருப்பான்” என்று கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அவர் கூறியிருப்பார் ஆனால்... ஜான்டோ பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய்யைப் பேசுகிறவனாய் இவ்வுலகில் பிறந்தான். ஏனெனில் அவன் மரித்து போகக் கூடிய ஒரு மனிதன் (mortal). ஒருக்கால் அவனுக்கு பக்தி உணர்ச்சி ஏற்பட்டிருக்கலாம். அவன் ஒரு சபையை சேர்ந்து கொள்வான். அவன் பெந்தெகொஸ்தே சபை ஒன்றை சேர்ந்து கொள்ளலாம். எனக்குத் தெரியாது. அவன் எந்த சபையை வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் அவன் தேவனுடைய சூழ்நிலையில் வரும் போது, ஜான்டோ அவனுடைய பிதா யாரென்று அடையாளம் கண்டு கொள்வான் - கழுகுக்குஞ்சு தன் தாயை அடையாளம் கண்டு கொண்டது போல். 111. அவன் அதை அறிந்து கொள்ள வேண்டும். ஜான்டோ, தேவனின் தன்மையாக இருந்து, உரைக்கப்படும் வார்த்தை ஆகிறான். பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தையை வெளிப்படையாய் பேசுகின்றார். அது தான். அவர் அவனை அழைத்து, அவனுக்கு நித்திய ஜீவனையளித்து, தேவனுடைய வார்த்தைக்கு அவனைக் கொண்டு வருகிறார். 112. பாருங்கள், தேவன் இயேசுவை நோக்கின போது, அவனையும் நோக்க வேண்டியதாயிருந்தது, இயேசு, "முடிந்தது" என்று சிலுவையில் மொழிந்த போது, தேவன் இயேசுவில் முடித்த கிரியைகளை அது எடுத்துக் காட்டினது. எல்லா திட்டமும் முடிவுற்றது. தேவனுடைய ஆவி உன் மேல் வருமானால், நீ உண்மையாகவே அவர் உரைத்த தேவனுடைய தன்மைகளில் ஒருவனாய் இருக்கிறாய்... அப்படி நீ இல்லையென்றால், நீ வியப்புற்று, ஏமாற்றமடைந்து, இங்கும் அங்கும் ஓடி, எல்லாவற்றையும் செய்து, சத்தியத்தை அறியும் அறிவுக்கு வராமலே இருப்பாய். 113. ஆனால் அவர்களில் ஒருவனாக நீ இருப்பாயானால், பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோம், நீ புதிதாகி விடுகிறாய். இரட்சிப்பின் திட்டம் உன்னில் முடிவடைகிறது. உன்னைக் குறித்து தேவன் உரைத்துள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்ப்படிய நீ ஆயத்தமாகி விடுகிறாய். நீ அவருடைய வார்த்தைக்கு அடங்குகின்றாய்.. 114. அந்த ஒப்பந்தத்துக்குரிய உரிமை பத்திரம் உன்னுடையதாகி விடுகிறது. எல்லா கடன்களும் செலுத்தப்பட்டு விட்டன. அவை யாவும் கணக்குப் புத்தகத்திலிருந்து அடிக்கப்பட்டு விட்டன - பெந்தெகொஸ்தே நாளன்று நடந்தது போல். 115. இப்பொழுது உயிர்ப்பிக்கும் ஆவியைக் கவனிப்போம்... இந்த உயிர்ப்பிக்கும் ஆவி மற்றவர் மேல் தங்கியிருந்தது. என்னால் அதிக நேரம் பேச முடியாது. என் வார்த்தையை நான் காத்துக்கொள்ள வேண்டுமானால், இன்னும் 20-நிமிடங்கள் தான் எனக்கு அவகாசம் உண்டு - நான் சொன்ன ஒரு மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டுமானால். 116. இந்த உயிர்ப்பிக்கும் ஆவி... அதைக் குறித்து அநேக பரிகாசங்கள். உண்டு. அநேகர் அதை பெறாமலேயே" பெற்றுக்கொண்டதாக எண்ணியுள்ளனர். மற்ற கிறிஸ்தவர்கள் செய்வதை கண்டு, அநேகர் தவறான அபிப்பிராயம் கொண்டு உள்ளனர். 117. சாத்தான் அவையனைத்தையும் பாவனை செய்ய முடியும் அது நமக்குத் தெரியும். மிஷனரிகளாகிய நீங்கள் அது செய்யப்படுவதைக் கண்டிருப்பீர்கள் - கூச்சலிட்டு. அந்நிய பாஷை பேசுதல் போன்றவை. இயேசு தேவனுடைய குமாரன் என்று முற்றிலுமாக மறுதலிக்கும் அஞ்ஞானிகளும்கூட இவைகளை பாவனை செய்வதை நீங்கள் கண்டிருப்பீர்கள். 118. இவையனைத்தையும் அவர்கள் தாங்களாகவே செய்கின்றனர். ஆனால் உண்மையான உயிர்ப்பிக்கும் ஆவி ஒரு விசுவாசியின் மேல் வரும் போது, அது தேவனுடைய வார்த்தைக்கு அவனை உயிர்ப்பிக்கிறது. அவன் மீண்டும் கழுகின் ஆகாரத்திற்கு செல்கிறான் - அவன் வாழ வேண்டிய இடத்திற்கு. "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்." (மத் 4:4) 119. மற்றவர்கள் மேல் உயிர்ப்பிக்கும் ஆவி வரும் போது, அது என்ன செய்கிறதென்று கவனிப்போம் - பெந்தெகொஸ்தே நாளில் நிகழ்ந்தது போல. பெந்தெகொஸ்தே நாளில் நடந்ததை கவனிப்போம் - அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்று. நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த உயிர்ப்பிக்கும் ஆவியினால் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட்டார்களா என்று கவனிப்போம். 120. பெந்தெகொஸ்தே நாளன்று அவர்கள் எல்லோரும் மேலறையில் காத்திருந்தனர். அவர்கள் பயந்து போயிருந்தனர். அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனவே அவர்கள் திகில் கொண்டிருந்தனர். ஆனால் என்ன நேர்ந்தது-? அந்த உயிர்ப்பிக்கும் ஆவி பரலோகத்திலிருந்து விழுந்த மாத்திரத்தில், அவர்கள் தைரியம் கொண்டனர். சில மணி நேரத்துக்கு முன்பு நிச்சயமற்றவர்களாக இருந்த அவர்களுக்கு நிச்சயம் பிறந்தது. அவர்களுக்கு புரிந்து கொள்ளும் தன்மை உண்டானது. 121. அவர் மரித்து போனாரென்று அவர்களுக்குத் தெரியும். அவர் உயிரோடு எழுந்து விட்டார் என்றும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் அவருடன் வழியில் பேசிக் கொண்டு சென்றனர். ஆனால் அது அவர்களுக்காக நேர்ந்ததா, அல்லது இயேசுவுக்கா-? பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி விசுவாசிகளின் மேல் விழுந்த போது. அது உயிர்த்தெழுதலில் அவர்களை ஒரு பாகமாக்கினது. அது அவருடைய ஐக்கியத்தில் அவர்களை ஒரு பாகமாக்கினது. பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கி அவர்களும் உயிரோடெழும்புவார்கள் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்தினார். ஏனெனில் அச்சமயமே, பயந்தவர்களாகிய அவர்கள் தைரியமுள்ளவர்களாக எழுப்பப்பட்டனர். அவர்கள் மனதில் கொண்டிருந்த வார்த்தையாகிய இயேசுவைக் குறித்தே அவர்கள் பயந்திருந்தனர். இது கடந்து செல்ல அனுமதிக்க வேண்டாம். அவர்கள் பயந்திருந்தனர். 122. அவரே வார்த்தை என்று அவர்கள் அறிந்திருந்தனர். யூதர்களும் கூட அதை ஆமோதிக்க வேண்டியதாயிருந்தது. நிக்கொதேமு, “ரபீ. நீர் தேவன் இடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால், நீ செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்ய மாட்டான். அது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அதை ஆமோதிக்கிறோம்” என்றான். 123. ஆகவே சீஷர்கள்... பேதுரு அவருக்கு முன்பாக சத்தியம் கூட செய்தான். அவர் சிலுவையில் அறையப்பட்ட போது, எல்லோரும் அவரைக் கை விட்டனர். ஆனால் இப்பொழுதோ அவர்கள் மேலறையில் தேவனுடைய சமுகத்தில் வந்தனர். அப்பொழுது சடுதியாக பரிசுத்தாவி பரலோகத்திலிருந்து இறங்கி வந்து அவர்களை உயிர்ப்பித்தது. அவர்கள் உயிர்ப்பிக்கப்பட்ட போது, அவர்கள் சத்தியம் என்று அறிந்து விசுவாசித்த செய்திக்கு சாட்சியாக இருக்க பயப்படவே இல்லை. அதற்கு முன்பு அவர்கள் பயந்திருந்தனர். 124. இன்றைக்கு உலகிலுள்ள எத்தனை பிரஸ்பிடேரியன்கள், எத்தனை மெதோடிஸ்டுகள், எத்தனை பாப்டிஸ்டுகள், எத்தனை பெந்தெகொஸ்தேயினர் சத்தியத்தை அறிந்தும் அதற்காக தைரியமாக நிற்க பயப்படுகின்றனர்-? அவர்கள் மேல் விழுந்தது என்னவென்பதைக் குறித்து வியப்புறுகிறேன். நீங்கள் அவருடைய உயிர்த்தெழுதலின் ஒரு பாகமாக இருக்கின்றீர்களா-? மனிதருடைய கருத்துக்களுக்கு நீங்கள் பயந்து விலகியோடுவீர்களா-? அல்லது தைரியமாக நின்று சரியானதை சரியானதென்றும், தவறை தவறென்றும் எடுத்துக் கூறும் அளவிற்கு உங்களுக்கு ஆண்மைத்தனம் உண்டா? 125. நீங்கள் அவருடைய உயிர்த்தெழுதலின் ஒரு பாகமாக இருக்கின்றீர்களா-? அல்லது ஒரு கொத்து கோட்பாடுகளை ஆராதிக்கின்றவர்களாய் இருக்கிறீர்-களா-? நீங்கள் சபைக்குச் செல்பவர்களா-? அங்கு உங்கள் பெயர் எழுதப்பட்டு, அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருக்கின்றீர்களா-? தேவனுடைய வார்த்தையை முழுவதுமாக விசுவாசியாதவன் பாவியே. 126. அக்காலத்து பரிசேயர்கள் அநேக காரியங்களை சத்தியம் என்று விசுவாசித்தனர். "நாங்கள் தேவனுடைய பிள்ளைகள்'' என்று அவர்கள் உரிமை கோரினர். வார்த்தை பிரசங்கிக்கப்பட்டு, அற்புதங்களினாலும் அடையாளங்-களினாலும் உறுதிப்படும் வரை அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாகத்தான் இருந்தனர். ஆனால் சத்தியம் என்று அவர்கள் அதை அறிந்து, “நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்ய மாட்டான்'' (யோவான்-3:2) என்று அறிக்கை செய்த பின்பும் அதை புறக்கணித்ததன் விளைவாக அவர்கள் பாவிகளாயினர். 127. இன்றைக்கு நாம் எந்நிலையில் உள்ளோம் என்று வியப்புறுகிறேன். இந்த உயிர்த்தெழுதல் நம்மை எங்கு கண்டுபிடிக்கிறது'' நீங்கள் தைரியமாக வெளிவர முடியுமா-? நீங்கள் தைரியமாக தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ள முடியுமா-? நீங்கள் நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டு இருந்தால், நிச்சயம் அப்படி செய்வீர்கள். நீங்கள் கழுகாக இருந்தால், அப்படி செய்யாமல் உங்களால் இருக்க முடியாது. ஏனெனில் ஏதோ ஒன்று உங்களுக்குள் உள்ளது. 128. நீங்கள் ஒரு கோட்பாட்டை சேவித்து, “நான் சபைக்குச் செல்கிறேன். உங்களைப் போலவே நானும் நல்லவனாக இருக்கிறேன்” என்று கூறுகின்றீர்-களா-?... அப்படியானால் நீங்கள் அதை அறிந்து கொள்ளவே மாட்டீர்கள். உங்களால் அதை அறிந்து கொள்ளவே முடியாது. ஆனால் நீங்கள் பிறப்பு உரிமையைப் பெற்றிருப்பீர்களானால், உங்களால் அதை அறிந்து கொள்ளாமல் இருக்கவே முடியாது. ஏனெனில் அது உங்களுடைய ஒரு பாகமாய் உள்ளது; நீங்களும் அதன் ஒரு பாகமாக இருக்கிறீர்கள். 129. என்னைப் பெற்றெடுத்த தாயை நான் எப்படி மறுதலிக்க முடியும்? அவருடைய சொந்த இரத்தம் எனக்குள் ஓடும் என் தந்தையை நான் எப்படி மறுதலிக்கமுடியும்? சார்லஸ் பிரான்ஹாம் என் தந்தை அல்ல என்று நான் எப்படி கூற முடியும்? என்னால் முடியாது. அவருடைய மகன் என்னும் முறையில், அவருக்கு வரும் நிந்தையை நான் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாய் உள்ளேன். அல்லேலுயா! அப்படியிருக்க, தேவனுடைய குமாரனை - அவரே தேவனுடைய வார்த்தை -நான் எப்படி மறுதலிக்க முடியும்-? வேதத்திலுள்ள சத்தியங்களையும், இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்பதையும் நான், எப்படி மறுதலிக்க முடியும்-? நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தை நாம் காணும்போது, சபையில் ஒரு ஈஸ்டர் உயிர்த்தெழுதல் அவசியமாயுள்ளது. விசுவாச வல்லமைக்கு நாம் உயிரோடு எழுந்து இருத்தல் அவசியமாய் உள்ளது. தேவனால் உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தைக்கு ஆண்களும் பெண்களும் இன்றைக்கு தைரியமாய் நிற்க வேண்டியவர்களாயிருக்கின்றனர். 130. ''நாங்கள் கிறிஸ்துவுக்கு வாலிபர் சங்கத்தை, (Youth for Christ) நிறுவி உள்ளோம் எனலாம். அது சரி தான், "எங்கள் சபை ஒரு கூட்டம் நடத்தப் போகின்றது. அதற்கு எங்களுக்கு இத்தனை அங்கத்தினர் தேவையாயுள்ளது. அதற்கு விரோதமாக நான் ஒன்றும் கூற முற்படவில்லை. அது சரி தான். அது ஒரு சூழ்நிலை மாத்திரமே. அது ஒருக்கால் பெட்டைகோழியின் செட்டைகளாய் இருக்கலாம். ஆனால் நீ கழுகு முட்டையாயிருப்பாயானால் ஏற்ற சூழ்நிலையில் நீ கழுகு குஞ்சாக பொறிக்கப்படுவாய். இதை அறிந்து கொள்ள நீ தேவனால் முன் குறிக்கப்பட்டிருந்தால், அதை நீ அறிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. நீ உயிர்த்தெழுதலில் வெளி வந்து கொண்டு இருக்கிறாய். 131. ''அப்படித் தான் ஒரு பாப்டிஸ்டு பிறந்தான். அப்படித் தான் ஒரு மெதோடிஸ்டும், அவன் காலத்தில் நேர்ந்த உயிர்த்தெழுதலில் பிறந்தான். ஆனால் அவர்கள் கழுகினிடம் சேர்வதற்கு பதிலாக பெட்டைக்கோழியிடம் சேர்ந்து விட்டனர். 132. அண்மையில் நான் கூறின விதமாக; நான் டூசானிலிருந்து சென்று கொண்டிருந்தபோது, வினோதமான சம்பவம் ஒன்றைக் கண்டேன். ஒரு பருந்து (hawk) கம்பியின் மேல் அமர்ந்துள்ளதைக் கண்டேன். பருந்து அதன் தன்மை அனைத்தையும் இழந்து விட்டது. ஒரு காலத்தில் கழுகுக்கு அடுத்த படியாக அது இருந்தது. அதனால் கழுகைப் பின்தொடர முடியாது. எக்காரணத்தைக் கொண்டும் முடியாது. எதுவுமே கழுகைப் பின் தொடர முடியாது. ஆனால் அது ஒரு பருந்து. கிறிஸ்து ஒரு கழுகு அப்படியானால் சபையானது பருந்தாகவாவது இருக்க வேண்டும். இவ்விரு பறவைகளும் மற்ற பறவைகளைக் காட்டிலும் உயர. பறக்க முடியும். ஆனால் பருந்துதோ மிருதுவாகி விட்டது. அதன் தன்மையை அது இழந்து விட்டது. அது தொலை பேசி கம்பிகளின் மேல் அமர்ந்து கொண்டு, செத்துப் போன முயலுக்காக காத்துக் கொண்டு இருக்கிறது. அது பறப்பதற்கு பதிலாக வல்லூறைப் போல் (Vulture) தாவிச் செல்கின்றது. 133. என் சகோதரனே, சகோதரியே... பெந்தெகொஸ்தே ஜனங்களே, நீங்கள் எனக்கு அருமையானவர்கள். சபையானது தன் தன்மையை இழந்து கொண்டு வருகிறது. அது உயர பறந்து புதிய மன்னாவை வேட்டையாடுவதற்கு பதிலாக, செத்துப் போன கோட்பாடுகளின் மேல் அது சார்ந்துள்ளது. 134. பருந்து தன் இரையை வேட்டையாடித் தின்பது வழக்கம். ஆனால் இன்று அது வாகனங்களில் அடிபட்டு செத்த இரையைத் தின்கிறது - வல்லூறுகள் தின்பதையே அதுவும் தின்கிறது. அது வல்லூறைப் போல் தாவிச் செல்கிறது. காண்பதற்கும், அது போன்றே உள்ளது. 135. இந்த நவீன உலகத்தில் நம்மை அதிகமாக அலங்கரித்துக் கொள்கிறோம். நமது பெண்கள் தலைமயிரைக் கத்தரித்து, குட்டை கால்சட்டை அணிகின்றனர். நமது ஆண்களுக்கு பிரசங்க பீடத்தில் சத்தியத்தை எடுத்து உரைக்கும் அளவுக்கு முதுகெலும்பு (தைரியம்) இல்லை. நாம் வெகு நாட்களாகவே தேவனுடைய வார்த்தையின் பேரில் மிருதுவாகி விட்டோம். 136. ஓ தேவனே, பரிசுத்த ஆவியை அனுப்பி, என்ன நேர்ந்த போதிலும் தேவனுடைய வார்த்தைக்கு உறுதியாய் நிற்க ஆயத்தமாயுள்ள கழுகுகளைத் தேடுவீராக. அவர்கள் காணக் கூடாத இடத்திற்கு உயர பறப்பார்கள். அவர்கள் தொலைபேசி கம்பிகளின்மேல் அமர்ந்து கொண்டு அச்சடிக்கப்பட்ட ஞாயிறு பள்ளி பாடங்கள் கையில் கிடைப்பதற்காக காத்திருக்க மாட்டார்கள். நான் தேவனுடைய வார்த்தையை பெற்றுக்கொள்வேனாக. ஏனெனில் அது பரிசுத்த ஆவியின், கிரியைகளை வெளிப்படுத்தும் விலையுயர்ந்த, வல்லமை நிறைந்த வார்த்தையாய் உள்ளது. 137. நமக்கு ஒரு ஈஸ்டர் - உயிர்த்தெழுதல் - அவசியமாயுள்ளது. என் நண்பனே, இவ்வுலகின் அழுகின பிணத்தின் இறைச்சியை கொண்டு நீ திருப்தியடைவாயானால், ஏதோ கோளாறு உள்ளது. என் சகோதரியே, என் சகோதரனே, வேறொரு ஈஸ்டரைக் காண நான் உயிர் வாழ மாட்டேன் என்று அறிந்தவனாய், இதை தேவ பயத்துடன் உங்களிடம் கூற விரும்புகிறேன். ஒன்று மாத்திரம் உறுதி. அதாவது தேவனால் முன் குறிக்கப்பட்ட உண்மையான தேவனுடைய புத்திரன், தேவனுடைய வார்த்தையின் மூலம் தேவனுடைய சத்தத்தைக் கேட்கும் போது, அவன் எழும்பி நம்மை சந்திப்பான். அவன் உண்மையுள்ள ஜீவ வார்த்தையை சந்திக்கப் போகிறான் என்பதற்கு அதுவே மறைந்துள்ள வல்லமையாக உள்ளது. அவர்.., மணவாட்டி மணவாளனைச் சந்திப்பாள். அவள் அவருடைய சரீரத்தின் ஒரு பாகமாக இருக்கிறாள். 138. கவனியுங்கள். வெகு நாட்களாக நாம் நமது தன்மையை இழந்து வருகிறோம். நம்மில் சிலர் புதன் இரவு கூட்டத்திற்கு வருகிறோம். மற்றவர்களோ வீட்டில் இருந்து கொண்டு, “சுசியை காதலிப்பது யார்?'' என்னும் படத்தை தொலைகாட்சியில் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எல்லாவிதமான உலக காரியங்களும், எல்லாவிதமான கேளிக்கைகளும், நீங்கள் சபைக்கு வராதபடி உங்களை தடை செய்கின்றன. நாம் அதை இழந்து போய் அநேக நாட்களாகின்றன. 139. நமது வேதாகமக்கல்லூரிகள் ஒரு கூட்டம் 'ரிக்கி'களையே: தோன்றச் செய்கின்றன. வேத சாஸ்திரம், கேளிக்கை இவையனைத்தும் சபையில் ஜெபக் கூட்டத்தின் ஸ்தானத்தை பறித்து விட்டன. 140. நவீனர்கள் (Modernists) போன்று நாம் உடையுடுத்தி அவர்களை உள்ளே கொண்டு வர முயல்கிறோம். அம்முறையில் அவர்களை நீங்கள் வெல்ல முடியாது. உங்களிடம் உள்ளதைக் காட்டிலும் அவர்களிடம் அதிகம் உள்ளது. அவர்களுடைய விவகாரங்களில் தலையிட உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. வேண்டுமானால் அவர்கள், உயிர்த்தெழுதலின் வல்லமையும், உண்மையான ஞானஸ்நானமும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் உங்களிடம் வரட்டும். 141. அவர்களுடைய ஆலயத்தைப் போன்ற ஒரு ஆலயத்தை நீங்கள் கட்ட வேண்டாம். அவர்களுடைய போதகரைப் போன்ற ஒரு போதகரைப் பெற முயல வேண்டாம். உலகத்துடன் ஒத்துழைக்க முயற்சி செய்ய வேண்டாம். அவர்கள் ஹாலிவுட்டுடன் பிரகாசிக்கின்றனர். ஆனால் உண்மையான சுவிசேஷமோ வல்லமையைப் பிரகாசிக்கச் செய்கிறது. கழுகுகள் அதற்கு செவி கொடுக்கின்றன. அவர்கள் பகட்டை விரும்புவதில்லை. அவர்கள் பிரகாசத்தை விரும்புகின்றனர். எளிமையுடன் பிரகாசித்தல், அன்புடன் பிரகாசித்தல், வல்லமையுடன் பிரகாசித்தல். அதை தான் உண்மையான கழுகுகள் தேடிக் கொண்டிருக்கின்றன, நீங்கள் தானியக் களஞ்சிய முற்றத்தில் கிளறிக் கொண்டு கழுகை பிரியப்படுத்த முடியாது. அவன் அதில் திருப்தி கொள்ள மாட்டான். அது அவனைத் தொடவும் கூட செய்யாது. ஏனெனில் அவன் அதை நம்புவதில்லை. ஆனால் ஆகாயத்திலிருந்து "மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்,'' என்னும் சப்தம் எழும்பட்டும், உடனே அவனுக்குள் ஏதோ சம்பவிக்கிறது. ''நான் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறேன்.'' ''கடைசி நாட்களில் நான் மாம்சமானயாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்,'' தேவனுக்கு மகிமை-! "உன் மானிடபாஷையை உயிர்ப்பிப்பேன், உன் மானிட நாவை உயிர்ப்பிப் பேன். உனக்கு பரலோக பாஷையை அளிப்பேன். என்னோடு கூட உன்னை உயிர்த்தெழுதலில் கொண்டு வருவேன். பசியுள்ள கழுகுகள் வேகமாய் ஓடி அதை பெற்றுக் கொள்ளும். அது விலையுயர்ந்த முத்து என்பதனால், இவர்கள் எல்லாவற்றையும் விற்று அதை கொள்வார்கள். நண்பர்களே, தேவன் உதவி செய்வாராக-! நமது சபைகள் தன்மையை இழந்து வருகின்றன. இப்பொழுது வேகமாக பார்ப்போம். 142. சீஷர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பாருங்கள். ஆவி... இயேசுவே சத்தியம் என்று அவர்கள் அறிந்திருந்தனர். அது அக்காலத்திலிருந்த பிரபல கருத்துக்களுக்கு, பிரபல மார்க்கத்திற்கு முரணாயிருந்தது. அந்த மார்க்கம் மிகவும் கண்டிப்பாக இருந்தது. பரிசேயர், சதுசேயர் போன்றவர்கள் (மற்ற ஸ்தாபனங்கள் போன்று). அவர்கள் 'மார்க்க-பேதம்' என்று அவர்கள் கருதினதற்கு விரோதமாயிருந்தனர். ஆனால் இயேசுவோ அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட வார்த்தை. ஆவியின் வடிவில் இயேசுவே பரிசுத்த ஆவி. “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது. நீங்களோ என்னைக் காண்பீர்கள்" (யோவான்.14:19). சரீரமல்ல, அவருக்குள் இருந்த ஜீவன். 143. தேவன் இப்பொழுது சபையின் மேல் அசைவாடி, அன்று போல் இன்றும் கீழ்ப்படிதலுள்ள புத்திரரை அழைக்கிறார். "என் பிதாவுக்கு பிரியமானவை-களையே நான் செய்கிறேன்'' “என்னில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்?'' (யோவான் 8:46). பாவம் என்பது அவிசுவாசம். என்னைக் குறித்து வார்த்தை கூறின எதை நான் செய்யாமல் இருந்தேன்? நான் செய்வேன் என்று வார்த்தை கூறினதை நான் செய்யாமல் உருந்ததை எனக்குக் காண்பியுங்கள் உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்-? என் பிதாவின் வார்த்தையை நான் நிறைவேற்றாமல் இருந்தேன் என்று உங்களில் யார் என்னை நோக்கி விரலைச் சுட்டிக்காட்ட முடியும்-?'' 144. ஓ, பெந்தெகொஸ்தே சபை அந்த இடத்திற்கு வரும் போது, ''எனக்கு அவிசுவாசம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்-?'' 145. ஓ, கிறிஸ்தவர்களே, நீங்கள் பருந்தாக அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டாம். கழுகாக அடையாளம் கண்டு கொள்ளப்படுங்கள். பருந்து மிருதுவான அமைப்பைக் கொண்டது. அது கீழே இறங்கி வந்து விடும். ஆனால் கழுகு அவ்விதம் செய்வதை நீங்கள் காண முடியாது. அது நீல வானத்திலிருந்து தன் இரையைத் தேடுகிறது. அங்கிருந்து தன் இரையைக் காண்பதற்கு தேவன் அதற்கேற்ற அமைப்பை அதற்களித்திருக்கிறார். அது புதிய மன்னாவை பெறுகிறது. செத்த மாமிசத்தையல்ல. 146. இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தின் வழியாய் பிரயாணம் செய்தபோது, பழைய மன்னாவைத் தின்ன முயன்றனர். ஆனால் அது புழுத்துப்போய் இருந்தது. அது கெட்டு, அழுகி, புழுக்கள் நிறைந்ததாயிருந்தது. 147. அநேக ஆண்டுகளுக்கு முன்பு செத்து அழுகிப்போன மாமிசத்தை நான் ஏன் புசிக்க வேண்டும்-? அதன் அமைப்பெல்லாம் சரியாகத் தான் இருக்கும். ஆனால் அது புதியதல்ல. ஒவ்வொரு சந்ததியும் புதிய ஆகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எனவே நாம் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு சந்ததியிலும் கழுகு அந்த புதிய ஆகாரத்தை தேடுகிறது. 148. இப்பொழுது சில பேர்களை நாம் பார்ப்போம். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளை நாம் எடுத்துக்கொண்டு, அவர்கள் என்ன செய்தனர் என்று பார்ப்போம். அதற்கு முன்பு நாம் ஸ்தேவானை எடுத்துக் கொள்வோம். ஸ்தேவான், சனகரீம் சங்கத்திற்கு முன்பாக நின்றான்.... அந்த சங்கம் அவனை அங்கு கொண்டு வந்து நிறுத்தினது. அது விசுவாசிகளின் மகத்தான சங்கம். அவர்கள் விசுவாசிகள் என்று கருதப்பட்டனர். அவன் மேல் குற்றஞ் சாட்டுவதற்காக அவனை அவர்கள் அங்கு கொண்டு வந்த போது, அவன், "வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவியிலும் விருத்த சேதனம் பெறாதவர்களே, நீங்கள் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள்" என்றான் (அப்.7:51). (அது தான் அந்த நித்திய ஜீவன்). "உங்கள் பிதாக்கள் தீர்க்கதரிசிகளை முன் காலத்தில் துன்பப்படுத்தினது போல, நீங்கள் இப்பொழுது துன்பப்படுத்துகிறீர்கள்'' என்றான். அவர்கள் அவனைப் பார்த்து பல்லைக் கடித்தார்கள். 149. அவர்கள் அதை கேட்க விரும்பவில்லை, அது அவர்களுடைய கோட்பாடுகளுக்கு விரோதமாயிருந்தது. அது அவர்களுடைய ஸ்தாபனத்துக்கு விரோதமாயிருந்தது. அவர்கள் அவனைக் கல்லெறிந்து கொன்றனர். அவன் வானத்துக்கு நேராக தன் கைகளையுயர்த்தி, "அதோ வானங்கள் திறந்து இருக்கிறதையும் இயேசு வலது பாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்" என்றான். ஏன்? அவனுக்குள் உயிர்ப்பிக்கும் வல்லமை இருந்தபடியால், அது அவனை இயேசுவின் மடிக்குக் கொண்டு சென்றது. 150. பிலிப்புவைப் பாருங்கள். அங்கு பெரிய எழுப்புதல் கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. எந்த மனிதனுக்கும் துணிவில்லை... எல்லா சபைகளும் ஒத்துழைத்து, அங்கு மகத்தான எழுப்புதல் கூட்டம் ஒன்று நடந்து கொண்டு இருந்தது. அப்பொழுது தேவனின் உயிர்ப்பிக்கும் வல்லமை, 'பிலிப்புவே' என்று அவனை அழைத்தது. ஒருக்கால் அது இவ்வாறு அவனிடம் கூறியிருக்கும்: "இங்கு ஒரு பெரிய எழுப்புதல் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறாய். ஆனால் தனிப்பட்ட ஒரு மனிதன் இருக்கிறான். அவனிடம் நீ பேச வேண்டும் என்று விரும்புகிறேன். என்ன நேர்ந்தாலும், எவ்வளவு குற்றம் கண்டு பிடித்தல் இருந்தாலும், பிலிப்பு' "எப்பொழுதும் தேவனுக்குக் கீழ்ப்படிபவன். மற்றவர், ''பிலிப்புவே, நீ போகக் கூடாது' என்றனர். 151. "நான் போகத் தான் வேண்டும். தேவன் அவ்வாறு கட்டளையிட்டுள்ளார்'' என்றான் பிலிப்பு. அவன் வனாந்தரத்துக்கு சென்று அங்கு அந்த மந்திரியைக் கண்டான். என்ன நேர்ந்தது? பிலிப்பு அவனிடம், ''நீர் முழு இருதயத்தோடும் இயேசுவே தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்தால், உமக்கு ஞான ஸ்நானம் கொடுப்பேன் என்றான். பாருங்கள், அவன் அவனுக்கு ஞான ஸ்நானம் கொடுத்தான். அவன் ஆயிரக்கணக்கான ஜனங்களை எழுப்புதல் கூட்டத்தில் விட்டு விட்டு, ஒரு மனிதனுக்காக வனாந்தரத்துக்கு செல்ல, அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் உயிர்ப்பிக்கப்பட்டான். 152. அது எல்லா யோசனைகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு செயல். பத்தாயிரம் பேருக்கு அவன் தேவையாயிருந்த போது, ஒரு மனிதனுக்கு அவன் அங்கு தேவைப்பட்டான். உயிர்ப்பிக்கும் வல்லமை தேவனால் அருளப்பட்ட ஸ்தலத்துக்கு அவனை கொண்டு சென்றது. அல்லேலூயா! 153. மனிதர்களே, ஸ்திரீகளே, அது உங்களை எழுந்து நிற்கச் செய்யும். நீங்கள் செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புவதை அது உங்களை செய்யத் தூண்டும். மற்றவர்கள் அதை குறித்து என்ன கூறினாலும் எனக்கு கவலை இல்லை. அடுத்த வீட்டார், "ஓ, அவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. அவன் இரவு முழுவதும் ஜெபம் செய்கிறான், வேதம் வாசிக்கிறான்.'' அவர்கள் என்ன கூறினாலும் எனக்கு கவலையில்லை. அதை செய்வதற்காக தேவன் உங்களை அழைத்துள்ளார். அது உண்மை. "ஒ இந்த பழமை நாகரீகம் கொண்ட பெந்தெகொஸ்தே எழுப்புதல் நமக்கு வேண்டாம்" என்று அவர்கள் கூறலாம். நீங்கள் அந்த எழுப்புதலை உங்களுக்குள் பெற்றுக்கொள்ளுங்கள். மற்றவர் என்ன நினைத்தாலும், நீங்கள் தேவனுக்குள் பெரும்பான்மையோராய் இருக்கின்றீர்கள். 154. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். பிலிப்பு தேவனுக்கு கீழ்ப்படிந்து அவருடைய கட்டளையை நிறைவேற்றி முடித்த பின்பு, பெந்தெகொஸ்தே நாளன்று அவன் பெற்றுக் கொண்ட அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை அவனை எடுத்துக் கொண்டு சென்றது - அவனுடைய சரீரத்தை உயிர்ப்பித்தது. அவன் அநேக மைல்கள் தூரத்துக்கு ஆவியானவரால் தூக்கிக் கொண்டு செல்லப் பட்டு, வேறொரு தேசத்தில் காணப்பட்டான். தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமை-! நாம் பெந்தெகொஸ்தே அனுபவத்தைப் பெற்றிருப்போமானால், இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் வாசமாயிருந்தால்..... 155. இந்த உயிர்ப்பிக்கும் வல்லமையைக் கொண்டிருந்த வேறொரு மனிதனை நாம் பார்ப்போம். அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஏனோக்கு என்னும் பெயர் கொண்ட ஒருவன் இருந்தான். ஏதோ ஒன்று அவனிடம், "நாம் வேதாகமப் பள்ளிக்குச் செல்ல வேண்டும்'' என்று கூறினது. அவனோ தேவனுடன் சஞ்சரித்தான். தேவன் செய்யச் சொன்ன அனைத்தையும் அவன் ஒரு வார்த்தைகூட பிசகாமல் செய்தான். அவன் தேவனோடு சஞ்சரித்தான்: 156. அவன் யார்? அவன் தேவனுடைய புத்திரன். அவன் காலத்தில் அவன் அழைக்கப்பட்ட கழுகாக இருந்தான். அவனுடைய நேரம் வந்த போது, அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்தவனாய்... அவன் தேவனோடு 500-ஆண்டு காலமாக அல்லது அதற்கதிகமான காலமாக நடந்து கொண்டு இருந்தான். ஒரு சமயம் கூட அவருடைய வார்த்தையில் ஒன்றையாகிலும் அவன் பிசகவில்லை. அவன் ஒருமுறை கூட தவறாக நடந்து கொள்ள-வில்லை. அவன் தன் சாட்சியை காத்துக்கொண்டான். அவனிடம் தேவன் செய்யக் கூறின அனைத்தும் அவன் அப்படியே செய்து முடித்தான். அதைக் குறித்து அவன் தர்க்கம் செய்யவில்லை. அவன் அதை செய்து நிறை-வேற்றினான். மற்றவர் என்ன நினைத்தபோதிலும், அவன் கவலைப்படாமல் அப்படியே செய்து முடித்தான். ஏன்-? அவன் உயிர்ப்பிக்கும் ஆவியால் நிறைந்து இருந்தான். 157. அந்த வயோதிபன் மரிக்க வேண்டிய தருணம் வந்தபோது, தேவன் ஒரு ஏணியை இறக்கினார். அவன் ஏறி வீடு சென்றான். அவர் அவனை உயிர்ப்பித்து, சாவுக்கேதுவான. அவன் சரீரத்தை எடுத்துக் கொள்ளப்படுதலில் கொண்டு சென்றார். ஆமென்-! அது தான் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை. 158. எலியாவைப் பாருங்கள். அவனுடைய வேலை பூமியில் முடிவடைந்த பின்பு, அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்தான். அவனுடைய காலத்திலிருந்த 'ஜாக்கி-கென்னடி மயிர் கத்தரிப்பு அலங்காரத்திற்கு அவன் கண்டனம் தெரிவித்தான். யேசபேலைக் குறித்து அவன் கொண்டிருந்த கருத்தை அவளிடம் தைரியமாய் கூறினான். அக்காலத்திலிருந்த போதகர்கள் இடமும் குருவானவர்களிடமும், எது சரி, எது தவறென்று திட்டவட்டமாக எடுத்துரைத்தான். அவர்களோ அவனை நம்பவில்லை. முகத்தில் வர்ணம் தீட்டிய பெண்களை அவன் மிகவும் கண்டித்து உணர்த்தினான். அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தபடியால், யாரும் அவனுக்கு தீங்கிழைக்க முடியவில்லை. 159. தேவன் பரலோகத்திலிருந்து அவனைப் போஷித்தார் அவனைத் தன்னந்தனியாக ஓரிடத்திற்கு அழைத்து சென்றார். அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தபடியால், அவன் மரிக்க வேண்டிய தருணம் வந்த போது, யோர்தான் பிளவுண்டது. அவன் அதன் வழியாக கடந்து சென்றான். கர்த்தர் ஒரு ரதத்தை கீழே அனுப்பி, அவனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டார். அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்த- வனாய், உண்மையான தேவனுடைய புத்திரனாயிருந்தான். 160. கவனியுங்கள், அவன் ஸ்தானத்தில் வேறொருவன் நியமிக்கப்பட்டான். அவன் பெயர் எலிசா. எலிசாவுக்கு உயிர்ப்பிக்கும் வல்லமை இரட்டிப்பாக இருந்தது. பாருங்கள்? அவனுக்கு இரட்டிப்பான வல்லமை இருந்தது. அவன் 80-ஆண்டு காலமாக பிரசங்கம் செய்தான். இல்லை, அவன் 80-வயது வரை பிரசங்கம் செய்தான். அவன் வியாதிப்பட்டு மரித்தான். எலியாவைப் போல் அவன் உயிரோடு வீடு செல்லவில்லை. 161. பாருங்கள், இருவரும் சபைக்கு எடுத்துக்காட்டாயிருக்கின்றனர். சில பரிசுத்தவான்கள் மரணமில்லாமலே எடுத்துக்கொள்ளப்படுகின்றனர்; சிலர் மரித்து இளைப்பாறிக் கொண்டிருக்கின்றனர். எலியா உயிரோடு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு எலிசா உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்தவ-னாய், தேவனுக்குள் நித்திரையடையச் சென்றான். 162. அவன் மரிக்கும் முன்பு உரைத்த தீர்க்கதரிசனத்தைக் கவனியுங்கள். உங்களுக்கு இதை காண்பிக்க விரும்புகிறேன். நீங்கள் மரித்தாலும், எங்கிருந்தாலும் எனக்குக் கவலையில்லை; அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை உங்களை விட்டுப் போகவே போகாது. அவன் மரித்து அநேக ஆண்டுகள் கழித்து... (அவனுடைய மாமிசம் அழுகி விட்டது. புழுக்கள் அதை அரித்து விட்டன). ஒரு நாள் அவர்கள் மரித்துப் போன ஒருவனை அடக்கம் செய்ய வந்தனர். அவன் உடலை எலிசாவின் எலும்புகளின் மேல் எறிந்தனர். அந்த எலும்புகளில் உயிர்ப்பிக்கும் வல்லமை அதிகமாக இருந்த காரணத்தால், மரித்தவன் மீண்டும் உயிரோடெழும்பினான். அல்லேலுயா-! அது அவனை உயிரோடெழுப்பினது. ஏனெனில் தேவனுடைய பரிசுத்தவானின் மேல் தங்கி இருந்த அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை அவனை விட்டுச் செல்லவேயில்லை. அது எலும்புகளில் தங்கியிருந்தது. 163. ஓ, நாம் அவருடைய மாமிசத்தில் மாமிசமும், அவருடைய எலும்பில் எலும்புமாய் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் - நாம் அவருடைய மணவாட்டியாய் இருப்போமானால், "இந்த என் தோல் முதலானவை அழுகிப் போன பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்'' (யோபு.19:26). தேவனுக்கு மகிமை! எடுத்துக் கொள்ளப்படுதல். இதை நான் கூற விரும்பவில்லை. 164. என்னைப் போன்ற கிழவனுக்கு அது எத்தகைய நம்பிக்கையாயுள்ளது! எனது முடிவு வெகு சீக்கிரம் உள்ளது என்பதை அறிந்தவனாய், அந்த முடிவை என்னால் காண முடிகிறது. 56-வயதான நான். 165. நான் சிறு பையனாக இருந்த முதற்கே, இதை நான் அறிவிக்க முயன்று வருகிறேன்.... நன்மையானது ஒன்றும் என்னிடத்தில் இல்லை, நான் ஒன்றுமே செய்யவில்லை, ஆயினும் எனக்குள் உயிர்ப்பிக்கும் வல்லமை உள்ளது. 166. நான் வாலிபனாயிருந்த போது, ஒரு நாள் அது என்னை உலக காரியங்களிலிருந்து நித்திய ஜீவனுக்கு உயிர்ப்பித்தது. இது வரை நிகழ்ந்த எல்லாமே; நான் தரிசனங்களைக் கண்டிருக்கிறேன், சம்பவங்களை முன் அறிவித்திருக்கிறேன் - ஒரு முறையாகிலும் அது. தவறாயிருக்க அவர் அனுமதித்ததில்லை. நான் அந்நிய பாஷை பேசியிருக்கிறேன், தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறேன். இவையனைத்தையும் எனக்குள் வாசமாயிருக்கும் தேவனுடைய ஆவியைக் கொண்டு நான் செய்து வந்திருக்கிறேன். அது தான் உயிர்ப்பிக்கும் வல்லமை. 167. ஒரு நாளில்; எனக்குத்தெரியும். என் மீட்பர் உயிரோடிருக்கிறார், என்றாவது ஒரு நாளில் அவர் வரும்போது, இந்த எலும்புகள் உயிரோடெழுந்து அவரை ஆகாயத்தில் சந்திக்கும். நீங்கள் என்னை ஆழத்தில் புதைக்கலாம், எரிக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை நித்தியமானது. 168. இப்பொழுது நான் ஈஸ்டர் உணர்ச்சியைப் பெறுகிறேன். ஆம், ஐயா, அதை நான் அநேக ஆண்டுகளாக பெற்றிருக்கிறேன். அது எனக்குள் இருக்கிறது. அது உங்களுக்குள் இருக்கிறது. இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களில் வாசமாயுள்ளது. அது உங்களை உலகக் காரியங்களிலிருந்து தேவனுடைய வார்த்தைக்கு உயிர்ப்பித்துள்ளது. அது உங்களை இந்த ஜீவனிலிருந்து நித்திய ஜீவனுக்கு உயிர்ப்பித்துள்ளது. 169. முன்னே அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த நீங்கள், இப்பொழுது ஒருமித்து உயிர்ப்பிக்கப்பட்டு, கிறிஸ்து இயேசுவுடன் கூட உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டு பரலோகத்தில் இருந்து வரும் மன்னா-வினால் போஷிக்கப்பட்டு, தேவனுடைய கரம் வெளிப்பட்டு இந்நாட்களுக்குரிய வாக்குத்தத்தத்தை நிருபிப்பதைக் காண்கிறீர்கள். ''நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்.'' 170. நோவாவின் நாட்களில் அவர்கள் புசித்துக் குடித்தார்கள், பெண் கொண்டு கொடுத்தார்கள். லோத்தின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் பூமியில் வெளிப்படும் நாட்களிலும் நடக்கும். தேவனுடைய குமாரனாய் அல்ல - மனுஷகுமாரனாய் கடைசி நாட்களின் தீர்க்கதரிசன செய்தியாய் அவர் திரும்ப வருவார். அப்பொழுது கழுகு பறந்து கொண்டிருக்கும்-சிங்கம் அல்ல, பலியின் காலத்தின் காளையல்ல. 171. பாருங்கள். ஒவ்வொரு முறையும் உலகின் அரசியல் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட மதசம்பந்தமான ஆதிக்கம் ஒன்று புறப்பட்டு சென்றது. ரோம ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட, சிங்கம் மதசம்பந்தமான ஆதிக்கமாக எழுப்பப்பட்டது. பின்பு பலியின் காலம் வந்த போது, காளை புறப்பட்டுச் சென்றது. ஏனெனில் காளை தேவனுக்கு பலியாக செலுத்தப்படும் மிருகம் ஆகும். அதன் பின் சபைக்காலங்களில் சீர்திருத்தக்காரர் தோன்றினர். மனிதன் முகம் எழும்பினது. சீர்திருத்தக்காரர் அனுப்பப்பட்டனர். லுத்தர், வெஸ்லி, கால்வின் போன்றவர்கள். பெந்தெகொஸ்தே காலம் வரைக்கும். ஆனால் கடைசியாக புறப்பட்டுச் சென்ற செய்தியில், பறக்கும் கழுகு தோன்றியது. இது கழுகின்-காலம் வெளிப்பட வேண்டிய சமயம். தேவனுடைய வார்த்தை வெளிப்படுதல், தேவனுடைய வார்த்தை நிருபிக்கப்படுதல். 172. ஓ, பிள்ளைகளே, பரிசுத்தாவியின் அபிஷேகத்திற்குள் நடவுங்கள். உள்ளே வந்து முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். அப்பொழுது தேவன் உங்களை நிறைப்பார். 173. இங்கு கவனியுங்கள். நாம் அவருடைய மாமிசத்தில் மாமிசமும், எலும்பில் எலும்புமாய் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசுவின் எலும்புகளையும் மாமிசத்தையும் தேவன் கல்லறையிலிருந்து எழுப்பினது போல, மறைந்துள்ள வல்லமையைப் பெற்றுள்ள மனிதனை அவர்கள் மறைக்க முடியாது. மரணம் அவனை மேற்கொள்ள முடியாது. 174. "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும் கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்'' என்றார் இயேசு (யோவான் 6:37,44). ஓ, என்னே! ஈஸ்டர். நாம் இப்பொழுதே ஈஸ்டருக்குள் இருக்கிறோம். அவர் உயிரோடெழுந்த போது, நாமும் அவரோடு கூட உயிரோடெழுந்தோம். அவர் உரிமை பத்திரத்தை திரும்ப அனுப்பினார். அதை நாம் வைத்து இருக்கிறோம். அதுதான் பரிசுத்தாவியின் அபிஷேகம். அவர் சதா காலங்களி-லும் உயிரோடிருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். அவர் மாறாதவராயிருக்கிறார் என்று எபி.13:8 நிருபிக்கின்றது. 175. அவர் மேசியா. அபிஷேகம் பெற்றவர்கள் அதை விசுவாசிக்கின்றனர். மேசியா என்றால் என்ன? 'மேசியா, என்றால்,'அபிஷேகம் பண்ணப்பட்டவர்' என்று பொருள், 176. அவர் மேசியாவானால் அவருடைய காலத்தில் தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றுவதற்கெனவும், மீட்பராய் இருப்பதற்கும் அவர் அபிஷேகம் பண்ணப்பட்டவராய் இருந்தார். தேவன் அவருடைய சரீரத்தை உயிரோடு எழுப்பினார். அவருடைய மணவாட்டியும் இக்காலத்திற்கென அபிஷேகம் பண்ணப்பட்டவளாய், மறைமுகமாக உயிர்த்தெழுந்து அவருடன் கூட எழுந்து விட்டாள். ஏனெனில் இவ்விருவரும் ஒன்றாயிருக்கின்றனர். ஆமென்! 177. நான் புரிந்து கொண்ட விதமாக இதை விவரிக்க முடிந்தால் நலமாய் இருக்கும்-! நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் தாமே இறங்கி வந்து நான் என்ன கூறுகிறேன் என்பதை உங்கள் இருதயங்களில் விளக்கித் தருவாரென நம்புகிறேன். 178. அது உயிர்த்தெழுதல். நாம் இப்பொழுது உயிர்த்தெழுதலில் இருக்கிறோம். உயிர்த்தெழுதலில் நாம் அவருடன் கூட உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். ஜீவனைப் பெற்றுள்ளவர் மாத்திரமே. ஜீவனைப் பெறாதவர் அப்படி செய்ய முடியாது. அவர்கள் அதை அறியவே மாட்டனர். அவர்கள் ஒருக்காலும் அதை அறிந்து கொள்வதில்லை. அவர்கள் பரிசுத்தாவியைப் பெற்று விட்டதாகவும், இரட்சிக்கப்பட்டதாகவும் எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் எடுத்துக்கொள்ளப்படுதலோ ஏற்கனவே நிகழ்ந்திருக்கும். அவர், "எலியா ஏற்கனவே வந்து இவைகளைச் செய்தான்... நீங்களோ அதை அறியவில்லை'' என்றார். 179. தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையை மரணம் தடுத்து நிறுத்த முடியாது. மரணம் அதை நிறுத்தவே முடியாது. நீங்கள், “என் தாய் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்தாள். என் தந்தையைப் போல் பரிசுத்தாவி நிறைந்த ஒருவரை நான் கண்டதேயில்லை. சகோ.பிரன்ஹாமே, அவர் மரித்துப் போனாரே,” எனலாம். இருப்பினும், அது உயிர்ப்பிக்கும் வல்லமையைப் போக்கி விடவில்லை. 180. மோசேக்கு உயிர்ப்பிக்கும் வல்லமை இருந்தது. அதை நீங்கள் நம்புகின்றீர்களா? இயேசு தோன்றும் வரைக்கும், மோசேயைப் போல் ஒருவன் இப்பூமியில் இருந்ததில்லை (உபா.34:12). அவன் தரிசனம் கண்டது மாத்திரம் அல்ல, தேவனுடன் அவன் முகமுகமாய் பேசினான். மிரியாம் ஒரு தீர்க்க தரிசினி. ஒரு நாள் அவன் வார்த்தையில், அவள் குற்றம் கண்டு பிடித்தாள். அப்பொழுது கர்த்தர், "நீங்கள் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? என் தாசனாகிய மோசேயைப்போல் யாரும் இதுவரை இவ்வுலகில் இருந்தது இல்லை. நான் மோசேயிடம் பேசுகின்றேன். தவறான ஒன்றை அவன் இது வரை உரைத்திருக்கின்றானா? நான் மோசேயிடம் பேசுகின்றேன். நீங்கள் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா-? அவனுக்கு விரோதமாக நீங்கள் ஒரு வார்த்தையும் பேசக் கூடாது'' என்றார். மிரியாமுக்கு உடனே குஷ்டரோகம் பிடித்தது. அதற்கு பின்பு அவள் அதிக நாட்கள் வாழவில்லை. 181. மோசே அவளுக்காக விண்ணப்பம் பண்ணினான். 120-ஆண்டுகள் அவன் ஊழியம் செய்த பிறகு - இல்லை 80 ஆண்டுகள் அவன் ஊழியம் செய்த பிறகு, அவனுடைய 120-ம் வயதில் அவன் மலையின் மேலேறி, அங்கு மரித்து, பள்ளத்தாக்கில் அடக்கம் பண்ணப்பட்டான். ஆயினும் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை அவன் மேல் தங்கியிருந்தது. ஏறக்குறைய 800-ஆண்டுகள் கழித்து, அவன் மறுரூபமலையின் மேல் நின்றுகொண்டிருந்தான். அவன் யார்? அவன் உயிர்த்தெழுதலில் சேர்த்துக் கொள்ளப்பட்டான் நிச்சயமாக, தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையை அவன் பெற்றிருந்தான். அவன் மறுரூபமலை மேல் நின்று கொண்டிருந்தான். 182. யோபு, ஆபிரகாம், ஈசாக்கு இவர்களைப் பாருங்கள் உயிர்த்தெழுதலின் காலையில் பங்கு கொண்ட பரிசுத்தவான்கள். உயிர்த்தெழுதல் வரப்போகிறது என்று யோபு அறிந்தவனாய், "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிவேன்" என்றான் அது கிறிஸ்து தோன்றுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, யோபின் புத்தகம், ஆதியாகமம் புத்தகத்திற்கு முன்பாகவே எழுதப்பட்டதென்று கூறுகின்றனர் வேதாகமத்திலே மிகவும் பழமையான புத்தகம். 183. அவனுடைய சோதனைகளில்... நாம் இப்பொழுது சோதனைகளின் வழியாக கடந்து செல்லும் விதமாக... அவனுக்கு மிகவும் நெருங்கின அவன் மனைவியும் கூட, ''தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்'' என்றாள். 184. அவனோ, ''நீ பைத்தியக்காரி பேசுகிறது போல் பேசுகிறாய். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்' என்றான். தேவனுடைய ஆவி அவன் மேல் வந்தபோது, அவன் தீர்க்கதரிசனம் உரைக்கத் தொடங்கினான். அவன், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்து இருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப் போன பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்'' என்றான். அவனை அடக்கம் செய்வதற்காக அவன் ஒரு நிலத்தை வாங்கினான். அங்கே அவன் அடக்கம் பண்ணப்பட்டான். 185. பின்னர் ஆபிரகாம் என்னும் பெயர் கொண்ட ஒருவன் தோன்றினான். (சபையானது வளர்ந்து வருகிறது). ஆபிரகாமும் மறைந்துள்ள தேவனுடைய வல்லமையை பெற்றிருந்தான். நித்திய ஜீவன். ஏனெனில் தேவன் அவனை அழைத்தார். கவனியுங்கள், அவன் மனைவி சாராள் மரித்த போது, அவன் பாலஸ்தீனாவில் யோபுவின் கல்லறையினருகே ஒரு நிலத்தை வாங்கி, அங்கே அவளை அடக்கம் பண்ணினான். ஆபிரகாம் மரித்து, சாராளுடன் அடக்கம் பண்ணப்பட்டான். 186. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான். ஈசாக்கு மரித்த போது, அவனும் அதே நிலத்தில் நித்திரை பண்ணினான். 187. ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான். யாக்கோபு எகிப்தில் மரணமடைந்தான். அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையைக் கொண்ட தீர்க்கதரிசியானதால், அவன் யோசேப்பிடம், "என் தீர்க்கதரிசி மகனே, இங்கு என்னை அடக்கம் பண்ண வேண்டாம். தேவன் ஊனமாக்கின இந்த இடுப்பின் மேல் உன் கையை வைத்து இங்கு என்னை அடக்கம் பண்ணுவதில்லை என்று பரலோகத்தின் தேவன் பேரில் ஆணையிட்டுக் கொடு'' என்றான். அந்த மனிதனுக்குள் என்ன இருந்தது? எகிப்து ஏன் மற்ற இடத்தைப் போல் நன்மையாக இல்லை? அவன் ஒரு தீர்க்கதரிசி. உயிர்த்தெழுதல் எங்கு நிகழும் என்பதை அவன் அறிந்து இருந்தான். அது எகிப்தில் அல்ல, பாலஸ்தீனாவில் நிகழும். எனவே அவன், "ஊனமாக்கப்பட்ட என் இடுப்பின் மேல் உன் கையை வைத்து, இங்கு என் எலும்புகளை அடக்கம் பண்ணுவதில்லையென்று நான் ஆராதிக்கும் பரலோகத்தின் தேவன் மேல் ஆணையிட்டுக் கொடு. நீ, என் தீர்க்கதரிசி மகன். என்னை அங்கு அடக்கம் செய்'' என்றான். 188. யோசேப்பும் ஒரு தீர்க்கதரிசி. அவன் அவ்வாறே ஊனமுற்ற, தன் தந்தையின் மேல் கையை வைத்து, ''ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவன் மேல் நான் ஆணையிடுகிறேன். உம்மை இங்கு அடக்கம் பண்ணமாட்டேன்'' என்று ஆணையிட்டுக் கொடுத்தான். யாக்கோபு மரித்த போது, அவனுடைய உடலை. கொண்டுபோய் அந்த நிலத்தில் அடக்கம் பண்ணினார்கள்.. ஏன்? ஏன்? 189. யோசேப்பும், ''இங்கு என்னை அடக்கம் பண்ண வேண்டாம், அங்கு அடக்கம் பண்ணுங்கள்'' என்றான். ஏன்? தேவன் எல்லாவிடங்களிலும் தேவனாய் இருக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு திட்டமுண்டு. யோசேப்பு ஒரு தீர்கதரிசி, அவன் கூறின வார்த்தைகளை கவனியுங்கள்: "ஒரு நாளில் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சந்தித்து, உங்களை இந்த தேசத்தை விட்டு கொண்டு போவார். அப்பொழுது என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுப் போவீர்களாக'' என்று ஆணையிடுவித்துக் கொண்டான். அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை, அவனுடைய எலும்புகளில் இருந்தது. 190. ஒ, கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களை உயிர்ப்பிப்பார். 191. "இங்கு என் எலும்புகளை அடக்கம் செய்ய வேண்டாம். அங்கு அடக்கம் செய்யுங்கள். அவை வாக்குத்தத்தங்களாயுள்ளன. இயேசு வரும்போது...." 192. இங்கு ஒரு வேத வாக்கியத்தை குறித்து வைத்துள்ளேன். மத் 27:51. இயேசு மரித்தோரிலிருந்து எழுந்ததை யோபு முன் கூட்டியே கண்டு, 'என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போன பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நான் கண்டேன்” என்றான். 193. அவன் தீர்க்கதரிசியென்று அவர்கள் அறிந்திருந்தனர். ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசி, ஈசாக்கு ஒரு தீர்க்கதரிசி, யாக்கோபு ஒரு தீர்க்கதரிசி, யோசேப்பு ஒரு தீர்க்கதரிசி. அவருடைய வார்த்தையின்படி, அவர்கள் தேவனுடைய வெளிப்பாட்டை மாத்திரமே பெற்றிருந்தனர். 194. ஈஸ்டர் காலையன்று இயேசு உயிரோடெழுந்து, அவர் மேல் விசுவாசம் வைத்திருந்தவர்கள் அனைவரையும் மீட்டுக்கொண்டார். அவர்கள் உயிரோடு எழுந்ததாக வேதம் கூறுகின்றது. அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை யோபுவின் கல்லறைக்குள் சென்றது. அங்கு அவனுடைய எலும்புகளில் ஒரு கரண்டி தூளும் கூட காணப்படவில்லை. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவனுடைய எலும்புகள் அழுகிக் கொண்டே வந்து, பூமியின் வாயுக்களாக மாறின. அங்கு சாம்பல் தூள் மாத்திரமே இருந்தது. ஆயினும், தேவனுடைய வார்த்தை அளித்த வாக்குத்தத்தத்தின் விளைவாக, அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்து வந்த போது, அது யோபு, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு அனைவரையும் அவருடனே கூட கல்லறையிலிருந்து உயிரோடெழச் செய்தது. 195. வேதம் அவ்வாறு மத்.27:51ல் கூறுகின்றது. பூமியின் தூளில் நித்திரை பண்ணிக் கொண்டிருந்த அநேக பரிசுத்தவான்கள். ஈஸ்டர் காலையில் அவர் உயிரோடெழுந்தபோது, அவர்களும் உயிரோடெழுந்து கல்லறைகளை விட்டு புறப்பட்டு வந்தனர். 196. ஏன்? அவர்களிடம் மறைந்துள்ள வல்லமை இருந்தது. அவர்களிடம் உயிர்ப்பிக்கும் வல்லமை இருந்தது. அவர்கள் மரித்தோரிலிருந்து எழுந்து, உயிர்த்தெழுதலில் அவருடன் கூட சென்றனர். அவருடன் அவர்கள் உயிர்த்து எழுதலை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தனர். 197. அவர்கள் உண்மையான ஈஸ்டர் முத்திரையைப் பெற்றிருந்தனர். 'நான் பழைய ஏற்பாட்டின் காலத்தில் வாழ்ந்திருந்தால், நலமாயிருக்கும்'' என்று நீங்கள் கூறலாம். ஒரு நிமிடம் பொறுங்கள். நீங்கள் 1-தெச.4:14 படிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ''அன்றியும், சகோதரரே, நித்திரை அடைந்தவர்கள் நிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்-களைப்போலத் துக்கித்து அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு (மூன்றாம் நாளில்) எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே (பாவனை விசுவாசமல்ல, உண்மையாகவே விசுவாசிக்கிறோம்). அப்படியே இயேசுவுக்குள் நித்திரை அடைந்தவர்-களையும் தேவன் அவரோடே கூடக் கொண்டு வருவார். 198. பழைய ஏற்பாட்டின் விசுவாசிகள், தங்கள் எலும்புகளில் உயிர்ப்பிக்கும் வல்லமையைக் கொண்டவர்களாய் உயிரோடெழுந்தது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக உயிர்ப்பிக்கும் வல்லமையைக் கொண்டுள்ள புதிய ஏற்பாட்டின் பரிசுத்தவான்களும் அவருடைய வருகையின் போது உயிரோடெழுவார்கள். தேவனுடைய வார்த்தை அவர்களிடம் வந்த பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள், அந்த உயிர்த்தெழுதலின் காலையில் அவரோடு கூட உயிரோடெழுந்தனர். 199. கிறிஸ்து-இயேசுவுக்குள் இருக்கும் ஒவ்வொருவரையும் தேவன் உயிர்த் -தெழுதலின் போது அவரோடுகூடக் கொண்டு வருவாரென்பதே தேவனுடைய வாக்குத்தத்தமாயுள்ளது, அந்த எலும்புகளில் உயிர்ப்பிக்கும் வல்லமை. 200. எனவே நாம் வியாதியஸ்தரின் மேல் கைகளை வைப்பதில் வியப்பு ஓன்றுமில்லை. நாம் ஒருவரிலொருவர் அன்பு கூருவதில் வியப்பொன்றும் இல்லை. நாம் சகோதரரும் சகோதரிகளுமாயிருக்கிறோம். நாம் ஒருவரை ஓருவர் பகைக்கக்கூடாது. ஏனெனில் நாம் தேவனுடைய வார்த்தையினால் திருத்தப்பட்டிருக்கிறோம். நாம் ஒருவரிலொருவர் அன்பு கூர்ந்து, ஒருவரை ஓருவர் மதிக்க வேண்டும். அப்படி செய்யாவிடில், நமக்கு எவ்வித உபயோகமுமிராது. 201. இங்கு ஒரு பையன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். சில நாட்களுக்கு முன்பு அவனுடைய காதில் புற்று நோய் தோன்றியது. அவன் யாரிடமும் கூறவில்லை. அவன் அந்த வீட்டில் பணி புரிந்து கொண்டிருந்தான். நான் அவனுடனும் மாஸ்லி சகோதரர்களுடனும், சகோ.தாசனுடனும் வேட்டைக்குச் சென்றிருந்தேன். நாங்கள் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, சகோ. வில்லியம்ஸின் மகனான அந்த பையனின் காதைக் காண நேர்ந்தது. அது வீங்கியிருந்தது. நான் அவனிடம், “டானவன், காதில் என்ன கோளாறு?” என்று கேட்டேன். 202. அவன், ''சகோ.பிரன்ஹாமே, அது வெகு நாட்களாய் உள்ளது, அது என்ன என்றே எனக்குத் தெரியவில்லை'' என்றான். 203. நான் அவனுடைய கையைப் பிடித்துப் பார்த்தேன். காதில் தோன்றி உள்ளது புற்றுநோய் என்று அறிந்து கொண்டேன். நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவன் காதை என் கையில் பிடித்தேன். சகோதரனே, அது மறைந்து விட்டது. ஓரிரண்டு நாட்களுக்குப் பிறகு வடுவும் கூட காணப்படவில்லை. அதை தேவன் கெளரவித்தார். பரலோகத்தின் தேவன் தமது உயிர்ப்பிக்கும் வல்லமையினால் அந்த புற்றுநோயைக் கொன்று, டானவன்-வெர்ட்ஸ் என்னும் பையனின் உயிரைப்பாதுகாத்தார். அது உண்மை , 204. இவையெல்லாம் என்ன? பீனிக்ஸிலுள்ள ஜனங்களே, இங்கு கவனியுங்கள். இதை விசுவாசிக்கும் ஜனங்களைப் பாருங்கள். இதைப் பெற்றுக் கொண்டு உள்ளவர்கள் உங்கள் மேல் கைகளை வைக்கின்றனர். அப்பொழுது என்ன நேரிடுகிறது என்பதைக் கவனியுங்கள். அது தான் உயிர்ப்பிக்கும் வல்லமை. 'விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள்.....' அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை. ஒரு கழுகிலிருந்து மற்றொரு கழுகுக்கு - அப்பொழுது ஏதோ ஒன்று சம்பவிக்கும். 205. ஒரு கழுகுக்கும் பருந்துக்கும் தொடர்பு ஏற்பட்டால் ஒன்றும் நடக்காது. ஆனால் கழுகு மற்ற கழுகுடன் தொடர்பு கொள்ளும் போது, அது தானியக் களஞ்சிய முற்றத்தை விட்டு சென்று, ஆகாயத்தில் உயர பறக்கிறது. ''விசுவாசிக்கிறவர்களால் இன்னின்ன அடையாளங்கள் நடக்கும்''- இருவரும் விசுவாசிக்கும் போது. 206. பாருங்கள், அதே உயிர்ப்பிக்கும் வல்லமை எலியா, எலிசா இவ்விரு தீர்க்கதரிசிகளிலும் இருந்தது.... ஒருவன் மரிக்காமலேயே எடுத்துக் கொள்ளப்-படுகிறான். மற்றவன் மரித்து உயிரோடெழுப்பப்பட்டு எடுத்துக் கொள்ளப்-படுகிறான். அவரோடு கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதல். 207. ஒரு பறவை சரியாக பறக்க வேண்டுமானால், அதற்கு இரு செட்டைகள் அவசியம். அது சரியா? எலியா மரணமில்லாமல் மறுரூபமாக்கப்பட்ட செட்டை. எலிசா உயிர்த்தெழுந்த செட்டை. பாருங்கள், இவ்விருவரும் முறையே உயிரோடுள்ள பரிசுத்தவான்களுக்கும் மரித்த பரிசுத்தவான்களுக்-கும் எடுத்துக்காட்டாயுள்ளனர். 208. திரைக்குப் பின்னால் காண உயிர்ப்பிக்கப்படுகின்றனர். பாருங்கள், அவர்கள் திரைக்குப் பின்னால் நோக்கி, இக்காலத்தைக் காண உயிர்ப்பிக்கப்படுகின்றனர். அந்த தீர்க்கதரிசிகள்.... பவுலைப் பாருங்கள், கடைசி நாட்களில், கிறிஸ்தவர்கள் என தங்களை அழைத்துக் கொள்பவர்கள் எவ்விதம் நடந்து கொள்வார்கள் என்று அவன் முன்னுரைத்துள்ளான். அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தான். இவை நடப்பதை அவன் முன்கூட்டியே கண்டான். அதை நாம் விசுவாசிக்கிறோம் அல்லவா? அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையை பெற்றுக் கொண்டான், 209. ஒரு பிழையுமின்றி உயிர்ப்பிக்கும் வல்லமை இன்று சம்பவங்களை முன்கூட்டி அறிவிப்பதைப் பாருங்கள். ஒரு முறையும்கூட அது தவறியது இல்லை. உயிர்ப்பிக்கும் வல்லமை - மனிதனின் வல்லமை அல்ல, தேவனின் வல்லமை. அந்த வல்லமை ஈஸ்டரின் உரிமைப் பத்திரம், உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து, நாம் ஏற்கனவே அவருக்குள் உயிர்ப்பிக்கப்பட்டோம் என்பதை உத்தரவாதப்படுத்த, உரிமைப் பத்திரத்தை திரும்ப அனுப்பினார். 210. வர்த்தகர்கள் எழுதியுள்ள, ''காலத்தின் திரைக்குப் பின்னால் நோக்குதல் என்னும் அந்த சிறிய புத்தகத்தில்... எனக்கும். வயதாகிக் கொண்டே போகின்றது. எனது காலம் குறுகிக் கொண்டே போகிறது என்றறிவேன். இந்த பெண்கள் சற்று முன்பு பாடின. "ஆண்டவரே, உம்முடன் பேசி தீர்மானிக்க: விரும்புகிறேன்' என்னும் பாட்டை நான் 18 அல்லது 20 ஆண்டுகளாக வைத்து இருக்கிறேன். அந்த இசைத்தட்டை நான் போட்டு' கேட்பேன். நான் ஜெபம் பண்ணத் தொடங்கும் போது, அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை வரும். அப்பொழுது எனக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். நான் மேல் நோக்கி, ''அங்கு பார்'' என்றேன். 211. அன்று காலை நான் எடுத்துக்கொள்ளப்பட்டதை நினைவு கூருகிறேன், என் மனைவி என்னுடன் கட்டிலில் படுத்திருந்தாள். நான் எழுந்து பார்த்த போது அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். நான், "நீ ஆண்டவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று தீர்மானித்திருந்தால், அதை துரிதமாக செய், ஏனெனில் உனக்கு 50 வயது கடந்து விட்டது" என்று என் மனதில் எண்ணினேன், பரிசுத்த ஆவியானவர் என்னை எடுத்து சென்றார். நான் அங்கு சென்று பார்த்தபோது, அந்த பரிசுத்தவான்களைக் கண்டேன். நான் சுவிசேஷத்தின் ஊழியன் என்னும் நிலையில், இந்த புனித புத்தகம் எனக்கு முன்னால் வைக்கப்பட்டு, உங்கள் முன்னிலையில் நான் இப்பொழுது நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அந்த பரிசுத்தவான்களைக் கண்டேன். 212. நான் கர்த்தருடைய நாமத்தில் உரைத்தது ஏதாகிலும் நிறைவேறாமல் இருந்ததுண்டா-? எனக்குத் தெரியப்படுத்துங்கள். ஒவ்வொரு முறையும் மேடையின் மேல் அது பிழையின்றி இருந்ததல்லவா-? அவர் கூறின விதமாகவே ஒவ்வொரு முறையும் அது நிகழ்ந்ததல்லவா? அது ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதாக இருந்து வந்துள்ளது. 213. நான் அங்கு நின்று கொண்டு, காலத்தை நோக்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஆயிரக்கணக்கான வாலிபரும், வாலிபப் பெண்களும் ஓடிவந்து, தங்கள் கைகளை என் தோள்மேல் போட்டு ஆரவாரம் செய்வதைக் கண்டேன். நான் கீழே பார்த்த போது, என் உடல் கட்டிலின் மேல் படுத்திருந்தது. காலம் என்னும் திரைக்கு பின்னால் நான் காண தேவன் என்னை அனுமதித்தார். ஓ, ஆண்டவரே, காலம் என்னும் திரைக்கு பின்னால் காண அனுமதியளியும். 214. அது என்ன? நம்மை எடுத்துக் கொண்டு செல்லவிருக்கும் உயிர்ப்பிக்கும் வல்லமை - அந்த மகத்தான உயிர்ப்பிக்கும் வல்லமை, 215. இந்த கடைசி நாட்களிலும் உயிர்ப்பிக்கும் வல்லமை வந்துள்ளது. அதற்காகத் தான் நான் இப்பொழுது அரிசோனாவில் இருக்கிறேன். "கர்த்தர் உரைக்கிறதாவது'', ஏதோ ஒன்று நிகழவிருக்கிறது என்று நான் பீனிக்ஸிலுள்ள இந்த மேடையிலிருந்து கூறினதைக் கேட்ட அநேகர் இப்பொழுது இங்கு அமர்ந்து உள்ளனர் (எத்தனை பேருக்கு அது ஞாபகமுள்ளது?) 216. ஏழு தூதர்கள் இறங்கி வருவதை நான் கண்டேன்' 'லைஃப்' பத்திரிகை அதை, 27-மைல் உயரம் 30-மைல் விட்டமுள்ள மிதந்து கொண்டிருக்கும் மேகமாக வெளியிட்டது. ஃபிரட் சாத்மனும், பின்னால் அமர்ந்துள்ள ஜீன் நார்மனும். மலையின் மேல் அந்த ஏழு தூதர்கள் தோன்றின போது அங்கு இருந்தார்கள் அல்லவா-? அநேக மைல்கள் சுற்றிலும் அது மலையைக் குலுங்கச் செய்தது. அங்கு ஏழு தூதர்கள் (கையில் வெள்ளிப் பட்டயத்துடன்) என்னிடம், 'நீ வீடு திரும்பி ஏழு முத்திரைகளைத் திற'' என்றனர். அதன் மூலம், 'விவாகமும் விவாகரத்தும்' என்பதைக் குறித்த உண்மையான இரகசியம், 'சர்ப்பத்தின் வித்து', இன்னும் முரணான கருத்துக்களைக் கொண்டு இருந்த அநேக காரியங்கள் வெளிப்படுத்தப்பட்டன. அது "கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதாம். 217. அது என்ன? உயிர்ப்பிக்கும் வல்லமை சபைக்கு வந்து, நாம் அணுகிக் கொண்டிருக்கும் அந்த நேரத்திற்காக அவளை ஆயத்தப்படுத்துகின்றது-உயிர்ப்பிக்கும் வல்லமை. ஓ தேவனே, அதைப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு உதவி புரியும். அதை விசுவாசிக்க எங்களுக்கு உதவிபுரியும். 218. பாருங்கள்? அது உங்களுக்கு நன்மை பயக்குமா இல்லையா என்னும் விஷயத்தில், நீங்கள் எத்தகைய மனப்பான்மை கொண்டுள்ளீர்கள் என்பதை அது பொறுத்தது. நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். நீங்கள் விசுவாசிக்காவிடில், உங்களுக்கு எவ்வித நன்மையும் பயக்காது. சாமுவேல் ஜனங்களுக்கு முன்பாக நின்று கொண்டு, "கர்த்தருடைய நாமத்தில் நான் உரைத்த ஏதாகிலும் ஒன்று நிறைவேறாமல் போனதுண்டா? உங்களிடம் நான் எப்பொழுதாவது பணம் கேட்டிருக்கிறேனா?'' என்று கேட்டான். "இல்லை, ஆயினும் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும்'' 219. சபையும் இன்று அதே நிலையில் உள்ளது. அவர்களுக்கு தங்கள் சொந்த கருத்துக்கள் மாத்திரமே வேண்டும்: நீங்கள் கூறுவதில் அவர்கள் சிறிதேனும் கவனம் செலுத்துவதில்லை: அவர்கள் இவ்விதம் நடந்து கொள்கின்றனர். உயிர்ப்பிக்கும் வல்லமை அங்கில்லை என்பதை அது காண்பிக்கிறது: 220. “ஆ, நாங்கள் அந்நிய பாஷை பேசுகிறோம். நாங்கள் குதித்து ஆரவாரம் செய்தோம்'' என்று நீங்கள் கூறலாம். அதெல்லாம் சரி தான், ஆனால் உயிர்ப்பிக்கும் வல்லமை அங்கு இருக்குமானால், நீங்கள் அடையாளம் கண்டு கொள்வீர்கள். அந்த கழுகுக்குஞ்சு தன் தாயை அடையாளம் கண்டு கொண்ட விதமாக. அதுவே வார்த்தை. அதுவே "கர்த்தர் உரைக்கிறதாவது'' அதை தான் கர்த்தர் வாக்குத்தத்தம் செய்துள்ளார். அது தான் முன்னுரைக்கப்-பட்டிருந்தது. அது முன்னுரைத்தபடியே நிறைவேறினது. 221. நாம் மறைவான உயிர்த்தெழுதலில் இருக்கிறோம் என்பதற்கு சிறிதேனும் சந்தேகமில்லை' பரிசுத்தவான்கள் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு ஆயத்தப்படுகின்றனர். 222. இயேசு உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தபடியால் அவர், “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்" என்றார் (யோவான் 2: 19). 223. ஏன்? இயேசு ஏன் அப்படி கூறினாரென்று உங்களைக் கேட்க விரும்புகிறேன். அவர் யாரென்பதை அவர் அறிந்திருந்தார். ஆமென்-! அதை உங்கள் மனதில் பதிய வைக்க விரும்புகிறேன். அவர் யாரென்பதை அவர் அறிந்திருந்தார். அவரைக் குறித்து எழுதப்பட்டிருந்த தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றையும் அவர் நிறைவேற்றினார் என்பதை அவர் அறிந்திருந்தார். தாவீது அவரைக் குறித்து உரைத்திருந்தான் என்று அவருக்குத் தெரியும். 224. வேதம் உங்களைக் குறித்தும் உரைத்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? கிறிஸ்துவுக்குள் உங்கள் ஸ்தானத்தை நீங்கள் அறிந்து இருக்கிறீர்களா? நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாய் இருப்பீர்கள். இந்த தேவனுடைய வார்த்தை தினந்தோறும் உங்களுக்கு ஜீவன் உள்ளதாய் அமைந்துள்ளது. நிச்சயமாக அது உங்களுடையது. நீங்கள் கழுகு: இது உங்களுடைய ஆகாரம். 225. தேவனுடைய வல்லமையினால், தம்மால் அப்படி செய்ய முடியும் என்று இயேசு அறிந்திருந்தார். ஏனெனில் அவர் அப்படி செய்வார் என்று தீர்க்க தரிசனம் உரைக்கப்பட்டிருந்தது. எனவே, ''இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்'' என்று கூற அவர் பயப்படவில்லை. தாவீது, ''அவருடைய ஆத்துமாவை பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்" என்றான் (சங்.16:10). அவருடைய சரீரத்தில் ஒரு அணு (cell) கூட அழியாது என்று அவருக்குத் தெரியும். ஏனெனில் 72 மணி நேரத்துக்குப் பின்பே சரீரம் அழியத் தொடங்குகிறது. 226. அவர், 'இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்” என்றார். ஏன் அவ்வாறு கூறினார்? அவர் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தார். அது ஒவ்வொரு வார்த்தையையும் உயிர்ப்பித்தது, அவர் பின் நோக்கி, தம்மைக் குறித்து தேவன் தீர்க்கதரிசிகளின் மூலமாய் உரைத்து வேதாகமத்தில் எழுதி வைத்துள்ள ஒவ்வொரு வார்த்தையையும் அவர் நிறைவேற்றினதை கண்டார். அவை அனைத்தும் நிறைவேறுமென்று அவர் அறிந்திருந்தார். 227. தேவன் கூறியுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் உங்கள் ஆவி "ஆமென்'' என்று கூறி, அது விசுவாசிகளாகிய உங்கள் வாழ்க்கையில் நிறைவேறி உள்ளதா-? அல்லது நீங்கள் ஏதோ ஒன்றின் மேல் சார்ந்து கொண்டு, ''என் சபை வேறு விதமாகப் போதிக்கின்றது" என்று கூறுகின்றீர்களா-? அப்படியானால் பருந்தே, ஜாக்கிரதையாயிரு. 228. கவனியுங்கள், கழுகுகள் விசுவாசிக்கின்றன. அவர்களுக்கு எந்த கேள்வியும் கிடையாது. அவர்கள் அப்படியே விசுவாசிக்கின்றனர். 229. அது நிறைவேறும் என்று இயேசு அறிந்திருந்தார். ஏனெனில் தேவனுடைய வார்த்தை அதை முன்னுரைத்துள்ளது. அவரைக் குறித்து எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறுமென்று இயேசு அறிந்திருந்தார். தேவனுடைய வல்லமையினால் பரிசுத்த தீர்க்கதரிசிகள், அவர் செய்யப் போகிறவைகளை, உரைத்தவைகளை வேதாகமத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்றும், தீர்க்கதரிசனம் ஒருபோதும் தவறாது என்றும் அவர் அறிந்திருந்தார். அது தவறவே முடியாது. தேவனுடைய வார்த்தை ஒரு போதும் தவற முடியாது. ஏனெனில் அது ஆவியானவரால் எழுதப்பட்டது. 230. இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்கள் சரீரங்களில் வாசமாயிருந்தால் சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களை அது உயிர்ப்பிக்கும். நீங்கள் துப்பாக்கியால் அதை சுடலாம், எரிக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நீங்கள் பரியாசம் பண்ணலாம், அதை கிழித்து எறியலாம். ஆனால் தேவன் அதை எழுப்புவார். ஏனெனில் அவர் அவ்வாறு வாக்களித்துள்ளார். 231. இந்த வாக்குத்தத்தத்தை தனக்குள் கொண்டுள்ள பரிசுத்தவான் ஒவ்வொருவனும் அது உண்மையென்று அறிவான். எனவே, சகோதரனே, பயப்பட வேண்டாம். நாம் ஏற்கனவே ஈஸ்டரில் இருக்கிறோம். 232. நாம் முடிக்கும் முன்பு, இயேசு மறுரூபமடைந்ததைக் குறித்து பார்ப்போம். நாமனைவரும் அந்த மறுரூப காட்சியில் பங்காளிகளாக இருக்கிறோம். நாம் இப்பொழுது என்ன காண்கிறோம் என்பதைக் கவனியுங்கள்- தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமை. நாமனைவரும் அப்பொழுது அங்கிருந்தோம். 233. மரித்த பரிசுத்தவான்களுக்கு மோசே எடுத்துக்காட்டாயிருந்தான். அங்கு உயிர்த்தெழுதல் நிகழ்ந்தது. இயேசு கிறிஸ்து மகிமையடைந்தார். மோசே, எலியா, இயேசு இம்மூவரும் மறுரூபமலையின் மேல் நின்று கொண்டு இருந்தனர். மரித்த பரிசுத்தவான்கள், உயிரோடு எடுத்துக் கொள்ளப்படும் பரிசுத்தவான்கள், மகிமையடைந்த இயேசு. 234. ஓ, என்னே! ஒருவன், "உங்களிடம் அத்தகைய வல்லமை இருக்குமானால், நீங்கள் வெளியே போய் உங்களால் என்ன செய்ய முடியுமென்று ஜனங்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்'' என்று சொல்லக் கேட்டேன். உண்மையான கிறிஸ்தவன் தனக்கு வல்லமை உள்ளதென்று உரிமை கோர மாட்டான். நமக்கு வல்லமை உள்ளதாக நாம் உரிமை பாராட்டுவதில்லை... ஆனால் ஒன்று மாத்திரம் செய்கின்றோம். 235. அவர்கள் மேல் அந்த வல்லமை தங்கியிருந்தது. அவர்கள் சுற்றிலும் பார்த்த போது, இயேசுவை மாத்திரம் கண்டார்கள். உண்மையான விசுவாசி எவனும், அவன் ஸ்தாபனத்தை ஆதரிக்கின்றானா என்பதைக் குறித்து கவலை கொள்ளமாட்டான். நீங்கள் ஒன்றை மாத்திரம் காண வேண்டுமென்று அவன் விரும்புவான் அது தான் மகிமையடைந்துள்ள இயேசு. உண்மையான மறுரூப மலையின் அனுபவம் மாத்திரமே இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்தும். 236. தேவன் மோசேயை மகிமைப்படுத்தவில்லை. எலியாவை மகிமைப் படுத்தவில்லை வேறொன்றையும் மகிமைப்படுத்தவில்லை. ஆனால் மகிமை அடைந்திருந்த இயேசுவை மாத்திரம் அவர்கள் கண்டனர். ஒவ்வொரு உண்மையான விசுவாசிக்கும் இயேசுவை மகிமைப்படுத்த வேண்டுமெனும் எண்ணம் மாத்திரமே அவன் இருதயத்தில் குடி கொண்டிருக்கும். அதை தான் அவன் ஜனங்களுக்குக் காண்பிக்க முயல்கிறான். ''எங்கள் குழுவில் நீங்கள் சேர்ந்து கொண்டால்,” என்றோ, அல்லது, “நீங்கள் எங்களை சேர்ந்து கொண்டு இதை செய்தால், அதை செய்தால்.," என்றோ அவன் கூறுவது கிடையாது. ஓ, அப்படி செய்யாதீர்கள்-! அப்படி செய்யாதீர்கள்-! தேவனுடைய வார்த்தையைப் பாருங்கள். அது மகிமையடைந்துள்ள கிறிஸ்துவாக அமைந்திருந்து, உயிர்த்-தெழுதல் நிகழவிருக்கும் இம்மகத்தான நாட்களுக்குரிய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிறது. நாம் அவருடன், அவருடைய மாமிசத்தின் மாமிசமும், எலும்பின் எலும்பாயும் இருக்கிறோம் என்பது ஒவ்வொரு விசுவாசிக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. 237. அந்த ஒன்றைக் குறித்து தான் உண்மையான விசுவாசி அக்கறை கொள்கிறான். அவர்கள் ஸ்தாபனத்தைக் குறித்து கவலை கொள்வதில்லை. மற்ற பெண்கள் என்ன நினைக்கிறார்களோ என்று இந்த பெண்கள் கவலை கொள்வதில்லை. நிச்சயமாக அவர்கள் அதைக் குறித்து கவலை கொள்வதே இல்லை. 238. மற்ற பெண்கள் செய்வதை இந்த பெண்கள் செய்யமாட்டார்கள். மற்ற மனிதர் செய்வதை இந்த மனிதர் செய்ய மாட்டார்கள், அவர்கள் ஏதாவதொரு ஸ்தாபனத்தை சேர்ந்து கொண்டு, அதிலிருந்து தங்களை விலக்கி விட்டால் தங்களுடைய ஆகாரச்சீட்டு போய்விடுமே என்று அஞ்ச மாட்டார்கள். இவைகளைக் குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை. இவை யாவும் அவர்களுக்கு அர்த்தமற்றவைகளாய் தென்படும். அவர்களுடைய இருதயத்தில் ஒரே ஒரு விருப்பம் மாத்திரமே இருக்கும். அதாவது இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்த வேண்டுமெனும் விருப்பம். 239. அவர்களுடைய நடை தேவனுடன் இருக்க வேண்டும், இயேசு கிறிஸ்துவின் மகிமையைத் தவிர வேறெந்த கருத்தும் அவர்களிடம் இருக்கக் கூடாது. இயேசு யார்? வார்த்தை. அது சரியா? அவருடைய அதே உறுதிப் படுத்தும் முறைமைகள் அவருடைய உயிர்த்தெழுதலை நிரூபிக்கின்றன என்பதை நாம் காணும் போது-! 240. அது என்ன? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்னும் வாக்குத்தத்தத்தின் மூலம்; உன் ஜீவியத்தை பார்த்து, அவர் இன்னும் உயிரோடிருக்கிறார் என்பதை நிரூபித்தலாகும். இத்தேசத்திலுள்ள ஒவ்வொரு கதவும் அவருக்கு மூடப்பட்டாலும், அதைக் குறித்து எனக்கு கவலையில்லை. சில நாட்களுக்கு முன்பு தான் எனக்கு 56 வயது பூர்த்தியானது. நான் இவ்வுலகை விட்டு எடுக்கப்படலாம். மாரடைப்பு ஏற்படும் வயதில் நான் இருக்கிறேன். இத்தனை வயதை நான் கடந்து வந்தேன். அதனால் என்ன வித்தியாசம்-? நான் குழந்தையாயிருந்த போதும், அது எவ்வித வித்தியாசத்தையும் உண்டாக்கவில்லை. எந்த நேரத்தில் நான் பரம வீட்டிற்கு அழைக்கப்பட்டாலும்... இவ்வுலகில் நான் வாழ்ந்தேன் என்று மற்றவர் அறியாமல் போனாலும் எனக்குக் கவலையில்லை. அதனால் ஒன்றும் இல்லை. இவ்வுலகில் நான் வாழ்ந்தேன் என்பதன் அறிகுறியாக ஒரு பெரிய ஞாபகச் சின்னமோ அல்லது பெரிய கட்டிடமோ எனக்கு அவசியம் இல்லை. ஆனால் ஒன்று மாத்திரம் நீங்கள் எல்லோரும் அறிய வேண்டும் என்று விரும்புகிறேன் அதாவது, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றும், என் இருதயத்தில் அவருடைய உரிமைப் பத்திரத்தை நான் பெற்றுள்ளேன் என்றும். 241. என்றாவது ஒரு நாளில்- நான் கடலில் மூழ்கி மரிக்கலாம், அல்லது ஆப்பிரிக்காவில் கொல்லப்படலாம். எனக்கு என்ன நேரிடுமென்று எனக்கு தெரியாது, ஆனால் ஒன்று மாத்திரம் நான் அறிவேன்: அந்த உரிமைப் பத்திரத்தை நான் வைத்திருக்கிறேன். அல்லேலுயா-! எல்லா கதவுகளும் அடைபடலாம். அதனால் எனக்கு ஒன்றுமில்லை. நாம் எந்த மனிதனையோ ஸ்தாபனத்தையோ, என்னையோ அல்லது வேறெந்த குழுவையோ மகிமைப் படுத்த முயலவில்லை. இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்திருந்தார் என்றும், அவருடைய ஆவி ஜீவிக்கிறது என்றும் ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத-வராயிருக்கிறார். 242. "பயப்படாதே, மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” என்று இயேசு கூறினதில் வியப்பொன்றுமில்லை. நாம் அவரால் மீட்கப்பட்டு, அவருடன் எழுப்பப்பட்டிருக்கிறோம். நாம் இப்பொழுது; இனி மேல் அல்ல, அவருடனேகூட உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். "இந்த ஆவியை உரிமைப்பத்திரத்தை நமக்குள்" நாம் கொண்டிருந்தால், நமது சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டன என்பதை அது காண்பிக்கிறது. ஆனால், கிறிஸ்து எனக்குள் பிழைத்திருக்கிறார். நீங்கள் பிழைக்கவில்லை, கிறிஸ்து உங்களுக்குள் பிழைத்திருக்கிறார். ஏனெனில் அவருடைய ஜீவிக்கும் வார்த்தை உங்களுக்குள் பிழைத்திருந்து, இயேசு கிறிஸ்துவின் மூலமாய் மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பெந்தேகொஸ்தேயினராகிய நீங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களிலிருந்து அகற்றப்படுகின்றது. 243. மறுரூபமலையின் மேல் நிகழ்ந்தது போன்று.... தீர்க்கதரிசிகள்' மற்றெல்லாம் அங்கு முடிவுற்றன. லூத்தரன், மெதோடிஸ்டு, பிரஸ்பிடேரியன் இவர்களின் நாட்கள்..... அவை சரிதான். ஆனால் ''இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவி கொடுங்கள்,''- இந்நேரத்துக்குரிய வார்த்தை. முத்திரைகள் உடைக்கப்பட வேண்டிய நேரம். அப்பொழுது இத்தனை ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த இரகசியம் வெளிப்பட்டு, தலைக்கல் அற்ற அந்த மகத்தான கூர்நுனிக் கோபுரம் இப்பொழுது கூர்மையாக்கப்பட்டு, தாவீதின் நட்சத்திரம் அதன் மேல் அதன் ஸ்தானத்தில் தங்கி, ஜீவனுள்ள தேவனின் மகத்தான சபை கழுகுகளைப் போல் உயரப் பறந்து மகிமைக்குள் செல்லும். ஆம், இப்பொழுது நாம் சரீரத்தில் இருந்து கொண்டு அந்நிய பாஷை பேசுகிறோம், தீர்க்கதரிசனம் உரைக்கிறோம், தரிசனம் காண்கிறோம். வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கிறோம்; அவர்கள் சொஸ்தம் ஆகின்றனர். உலகமும் உலகிலுள்ள அனைத்தும் நமக்கு மரித்ததாய் உள்ளது. நாம் மரணத்தினின்று ஜீவனுக்குள் பிரவேசித்து, இப்பொழுது நாம் வல்லமையைப் பெற்றிருக்கிறோம். அல்லேலுயா! 244. அந்த உயிர்த்தெழுதலின் காலையில் மரண முத்திரைகள் உடைக்கப்படும். நாம் உயிர்த்தெழுவோம். அல்லேலுயா-! நாம் எழுந்திருப்போம். ஆமென். 245. அதை தடுக்க நரகத்தில் போதிய பிசாசுகள் இல்லை. இந்த நேரத்திற்காக நாம் தேவனால் முன்குறிக்கப்பட்டிருக்கிறோம். நமது மத்தியில் தேவனுடைய வார்த்தை தன்னை வெளிப்படுத்திக்கொண்டு வருகிறது. தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மூலம் நாம் தேவனுடைய சமுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், 246. நான் உயிர்த்தெழுவதை தடைசெய்ய நரகத்தில் எந்த பிசாசும் கிடையாது. அந்த காலையில், நான் உள்ளே நுழையாதபடிக்கு அவன் அடைக்கக் கூடிய கதவு எதுவுமில்லை. முத்திரைகள் உடைக்கப்பட்டு விட்டன. அல்லேலுயா-! நான் விடுதலையானேன். நான் ஒரு கழுகு. நான் கூட்டில் அடைபட்டு கிடக்கவில்லை. நான் விடுதலையானேன். நான் மரித்தோரிலிருந்து எழுந்து, இயேசு கிறிஸ்துவின் புதிய ஜீவனுக்குள் பிரவேசிக்கிறேன். நான் மட்டுமல்ல, பரிசுத்தாவியினால் நிறைந்து இங்கு அமர்ந்துள்ள ஒவ்வொரு மனிதனும், ஸ்திரீயும், பையனும், பெண்ணும், கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாய் இருக்கின்றனர். நீ ஒரு கழுகு. 247. நாம் இன்று பிழைத்திருந்து, சதாகாலமும் உயிர்த்தெழுதலை அனுபவித்துக் கொண்டிருப்போம். அவர் பிழைத்திருக்கிறது போல நாமும் பிழைத்திருக்கிறோம். அவர் நமக்குள் வாசம் செய்து, நம்மை பிழைத்திருக்கச் செய்கிறார். அவரை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவி நமக்குள் வாசம் செய்து, அந்த மகத்தான நித்திய ஈஸ்டர் அன்று சாவுக்கேதுவான நமது சரீரங்களை உயிர்ப்பிக்கும். தேவனுக்கு மகிமை! 248. ஓ, நீங்கள் உலகத்தை எடுத்துக்கொள்ளுங்கள், என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் இயேசுவை மாத்திரம் எனக்குத் தந்து விடுங்கள். ஆமென். அவரை நான் நேசிக்கிறேன். எனக்கு உலகிலுள்ள எல்லாமே அவர் தான். நீங்கள் அவரில் ஒரு பாகமாக இருக்கிறீர்கள். நான் உங்களில் ஒரு பாகமாக இருக்கிறேன். நீங்கள் என்னில் ஒரு பாகமாக இருக்கிறீர்கள். நாம் ஒருமித்து அவரில் ஒரு பாகமாக இருக்கிறோம். 249. ஓ, கிறிஸ்தவர்களே, நமக்கு என்னே ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது-! பரி.பவுல் கனவிலும் கூட காணாத ஒரு வாய்ப்பு நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏனோக்கு, எலியா மற்றவர் பெற்றிராத ஒரு வாய்ப்பை நாம் இப்பொழுது பெற்றுள்ளோம். 250. ஒரு சிறு ஆடு எங்கோ உள்ளது. அது மந்தைக்குள் வரும் வரைக்கும் அவர் திருப்தி கொள்ளமாட்டார். தேவனுடைய உதவியினாலும், தரிசனத்தின் மூலமாகவும், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதனாலும், நான் கடல் கடந்து செல்கிறேன். அந்த கடைசி சிறு ஆடு ஒருக்கால் கறுப்பு இனத்தை சேர்ந்து இருக்கலாம். எனக்குத் தெரிந்தமட்டில், அது அங்கிருக்க வகையுண்டு. அங்கு உள்ளவர்கள், அவர்களுக்கு ஆத்துமா உண்டு என்பதையும்கூட அறியாமல் இருக்கின்றனர். ஆனால் தேவனோ வித்தியாசமாக அறிந்திருக்கிறார். அது எங்கிருப்பினும் என் வாழ்க்கையின் கடைசி நாள் வரைக்கும் அதை தேடிக் கண்டுபிடிப்பேன். 251. இந்த கண்டிப்பான காரியங்களைக் கூறினதால் நான் சகோதரர் எவரையும் புண்படுத்தவில்லை என்று நம்புகிறேன். நீங்கள் சபைக்கு போகவேண்டாம் என்று நான் சொல்லவில்லை. நீங்கள் போய்க் கொண்டிருக்கும் சபைக்குச் செல்லுங்கள். ஆனால் "நான் இதை சேர்ந்தவன், அதை சேர்ந்தவன்" என்று கூறி, அது மாத்திரம் உங்கள் நம்பிக்கையாக இருக்க விட்டுக் கொடுக்காதீர்கள். ஓ சகோதரனே, சகோதரியே, கிறிஸ்துவைச் சார்ந்து அவருக்கே சொந்தமாயிரு. சபைக்குச் செல். ஆனால் கிறிஸ்துவைச் சார்ந்து அவருக்கு மாத்திரம் சொந்தமாயிரு. ஆமென்! 252. அந்த மறைந்துள்ள வல்லமை... உங்களுக்குள் இல்லை என்றால், இப்பொழுதே ஜீவனுக்கு உங்களை உயிர்ப்பித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அதை பெற்றுக் கொள்வீர்களா-? இந்த அறை அதனால் நிரம்பியுள்ளது. அதை என் மேல் முழுவதும் உணருகிறேன். தேவனுடைய வல்லமை இங்குள்ளது என்று நானறிவேன் - தரிசனங்களைக் காண்பிக்கும் அந்த மகத்தானவர், ஒரு முறை கூட தவறாத காரியங்களை முன்னறிவிக்கும் அந்த மகத்தானவர், ஒன்றை அவர் பேசி, அது இல்லை என்று எந்த மனிதனும் மறுக்க முடியாத அந்த மகத்தானவர், ஒருவரும் பூட்டக் கூடாதபடிக்கு திறக்கிறவர், மரித்து இப்பொழுது உயிரோடிருக்கிறவர், இன்றைக்கும் அவர் பீனிக்ஸில் உயிரோடு இருந்து, புதிதாக பூத்த பூக்களின் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறார். 253. ஈஸ்டர் காலை அன்று ஒவ்வொரு லீலி புஷ்பத்தின் கன்னத்திலும், ஒவ்வொரு ரோஜாவின் மேலும், சிறு கண்ணீர் துளிகளாகிய பனி காணப்பட்டதில் வியப்பொன்றுமில்லை. ஏன்? அது பூமியிலிருந்து முளைத்-தெழும்பினது என்றும், எங்கோ ஒரு நித்திய பூ பூத்துக் கொண்டிருக்கிறது என்றும் அதற்கு தெரியும். அதன் ஸ்தானத்தை அது ஒரு நாளில் பெற்றுக் கொள்ளும். அது உண்மை. 254. நமது கன்னங்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தோடுவதில் வியப்பு ஓன்றுமில்லை. அதே மறுரூபமாக்கும் வல்லமை நமது வாழ்க்கையில் நுழைந்து நம்மை நிரப்புவதை உணர்ந்து, பரலோக பாஷையில் நம்மை பேச வைப்பதைக் காணும் போது, நமது இருதயங்கள் துடிப்பதில் வியப்பு ஓன்றும் இல்லை. 255. அவருடைய பிரசன்னத்தில் நாம் அதிகமாக உயிர்ப்பிக்கப்பட்டு, நாம் தீர்க்கதரிசனம் உரைக்கிறோம், முன் கூட்டி சம்பவங்களைக் காண்கிறோம், முன்னறிவிக்கிறோம். இவையனைத்தும் தேவனுடைய வார்த்தையுடன் பிழையின்றி இணைகின்றன. தேவனுடைய வார்த்தைக்கு முரணாக தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டால், அதை நம்பாதீர்கள். அது வார்த்தையுடன் இணைந்திருந்தால், அது “கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதாய் இருக்கும். ''பயப்படாதே, மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன். அது தான் தேவனுடைய ஈஸ்டர் முத்திரை. 256. அது தேவனுடைய வார்த்தையின் அட்சரங்களை (alphabets) உன் இருதயத்தில் முத்தரித்து விடுகின்றது. முத்திரை என்பது என்ன? நீங்கள் சகல மனிதராலும் வாசிக்கப்படும் எழுதப்பட்ட நிருபமாயிருக்கிறீர்கள் (2 கொரி.3:2). அதை நீங்கள் அறிவீர்கள் - தேவன் உங்களை மீட்கும் போது, அவர் உங்களை ஈஸ்டர் முத்திரையால் முத்தரித்து விடுகிறார். நீங்கள் கிறிஸ்து-வோடு எழுந்து விட்டீர்கள் என்றும், நீங்கள் புது சிருஷ்டிகள் என்றும் அது காண்பிக்கிறது. இன்று காலை நீங்கள் முத்திரிக்கப்படாமலிருந்தால், நாம் தலைவணங்கும் போது, முத்தரிக்கப்படுங்கள். (சபையிலுள்ள ஒருவர் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்-ஆசி). 257. அதைக் கேட்டீர்களா? நீங்கள் தலை வணங்கினவர்களாய், சிந்தித்துப் பாருங்கள். ரோமர்.8:11, "கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், அது சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களை உயிர்ப்பிக்கும்.'' 258. ஜனங்களே, நாம் எதை எதிர்பார்க்க வேண்டும்? இனி வேறு எது விடப்பட்டுள்ளது? பார்மோசாவையும், உலகம் முழுவதையும் பாருங்கள். அனுசக்தி ஏவுகணைகள் போன்றவை உலகத்தை தாக்க ஆயத்தமாயுள்ளன. எங்குமே திகில், பயம். எல்லோரும் பயத்தினால் கூச்சலிடுகின்றனர். சினிமா நகைச்சுவை நடிகர்கள் எல்லாவிதமான நகைச்சுவை துணுக்களையும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இரவில் கல்லறை தோட்டத்தின் வழியாய் கடந்து செல்லும் ஒரு சிறுவன் விசில் அடித்துக் கொண்டு சென்று, தனக்கு பயம் இல்லை என்று ஜனங்களை நம்பச் செய்வது போன்று இது உள்ளது. நீங்கள் ஏமாந்து போக வேண்டாம். கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளது. 259. அன்றொரு நாள் நான் விரிகுடாவில் உட்கார்ந்து கொண்டிருந்த போது, மீன் பிடிப்பவன் ஒருவன் என்னிடம் வந்து கிரேக்க நாட்டில் பூமியதிர்ச்சி உண்டாவதற்கு பல நாட்களுக்கு முன்பே, காலையில் வழக்கமாக தீனி உண்ண வரும் மீன்கள் வராமல் போயின என்று கூறினான். அது என்ன? அவை ஆழத்திலிருந்து தண்ணீர் மட்டத்துக்கு வரவில்லை. இரண்டாம் முறை பூமியதிர்ச்சி உண்டான போதும், அவ்வாறே சம்பவித்தது. மீன்கள் ஏற்ற சமயத்தில் தீனி உண்ண வராததன் காரணத்தால் ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகிறதென்று அவன் அறிந்து கொண்டான். 260. மீனை உணவாகக் கொண்டிருக்கும் கடல் பறவைகளுக்கு (Sea gulls) உணவு கிடைக்கவில்லை. வழக்கமாக அதிகாலையில் தான் அவை மீன்களைப் பிடித்துத் தின்னும். அவை பாறைகளிலிருந்து பறந்து வந்து கரையில் அமர்ந்திருந்தன. அப்பொழுது சில நிமிடங்களுக்குள் கடற்பாசி கடலிலிருந்து கொதித்து மேலே எழும்பத் தொடங்கினது. அது நிகழும் முன்பே மீன்கள் அறிந்து கொண்டன. 261. இந்தியாவுக்கு நான் சென்றிருந்தபோது, "பூமியதிர்ச்சி இப்பொழுது முடிந்து இருக்கும்" என்னும் செய்தியை செய்தி தாளில் படித்தேன். அநேக நாட்கள் பறவைகள் பாறைகளிலுள்ள தங்கள் கூடுகளுக்குத் திரும்பவில்லை, வெயிலின் உஷ்ணத்தில் மாடுகள் நிழலில் தங்கவில்லை. ஆடுகள் நிலத்தின் நடுவில் நின்று கொண்டு ஒன்றின் மேல் ஒன்று சாய்ந்து கொண்டிருந்தன, பூமியதிர்ச்சி உண்டாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பிலிருந்தே அவை பாறைகளிடம் செல்லவில்லை. ஏன்-? அந்த ஆடுகள் அதை முன் கூட்டியே அறிந்திருந்தன. அந்த பறவைகளும் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதை அறிந்திருந்தன. கடற்பறவைகளும் அவ்வாறே ஏதோவோன்று நடக்கப் போகிறது என்பதை அறிந்திருந்தன. மீன்களும் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்பதை அறிந்திருந்தன. பேழைக்குள் மிருகங்களை வழிநடத்திய அதே தேவன் 262. ஆவியின் நிறைவைப் பெற்ற 'ஜனங்களே, ஏதோவோன்று நிகழ இருக்கின்றது என்பதை உங்களால் காண முடியவில்லையா-? உலகம் முழுவதிலும் ஒரு மகத்தான எழுப்புதல் உண்டாகும் என்று நீங்கள் எதிர் பார்க்க வேண்டாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையைத் தவிர இனி நடக்கப் போவது வேறொன்றுமில்லை. கர்த்தரின் வாக்குத்தத்தத்தையும் நினைவு கூருங்கள். நீங்கள் வேகமாக உள்ளே வரமாட்டீர்களா? அந்த பெரிய சுவர்களை விட்டு விலகி வாருங்கள். உயிர்த்தெழுதல் மிகவும் சமீபமாய் உள்ளது. 263. இங்குள்ளவர் யாராகிலும் உயிர்த்தெழுதலில் செல்லும் நிச்சயத்தை பெறாமல் இருந்தால்; உயிர்த்தெழுதலின் வல்லமை அவர்களுடைய எலும்பு-களில் தங்கியுள்ளது என்னும் நிச்சயம் இல்லாமலிருந்தால்.. இந்த தோல் முதலானவை அழுகிப் போனாலும், அணுகுண்டு உங்கள் மத்தியில் வெடித்தாலும், நீங்கள் பெற்றுள்ள உயிர்த்தெழுதலின் வல்லமையை அது அழித்துப் போடாது. இல்லை, சகோதரனே, சகோதரியே, உன் விலையுயர்ந்த பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில், பரத்தில் எழுதப்பட்டு விட்டது. அதை எந்த மனிதனும் புத்தகத்திலிருந்து அழித்து விட முடியாது. அவருடைய இரத்தத்தினால் சம்பாதிக்கப்பட்ட அந்த புத்தகத்தில் எழுதப்பட்டு உள்ள அந்த பெயரை அழித்துப்போட எவ்வித 'ரப்பரும் இவ்வுலகில் கிடையாது. அதைக் குறித்து நீ நிச்சயமில்லாதவனாயிருந்தால், அதை தற்செயலாக எடுத்துக் கொள்ளாதே. 264. ஒருக்கால் இராணுவ பாதுகாப்பு வேலியின் (barricade) வழியாக ஓடும் துணிச்சலைக் கொண்டவனாய் நீ அதற்குள் பாய்ந்து, கொல்லப்படாமல் இருக்க வகையுண்டு. ஆனால் அவ்விதமாக இந்த பாதுகாப்பு வேலியின் வழியாக நீ ஓடக்கூடாது, இல்லை, இல்லை, அதை நீ பெற்றுக் கொள்ளத்தான் போகிறாய். அங்கு ஒரு சிகப்பு விளக்கு விட்டு விட்டு பிரகாசித்து உன்னை எச்சரிக்கிறது. உன் சொந்த கருத்துக்களை விட்டுவிடு. உலக காரியங்களை விட்டுவிலகு. இப்பொழுதே வா. நாம் ஈஸ்டரைக் கொண்டாடும் இந்நேரத்தில் அம்மகத்தான உயிர்த்தெழுதலின் நாளில் நாம் ஒருமித்து உயிர்த்தெழு-வோமாக-! 265. இவ்வாரம் ஈஸ்டரை உன் இருதயத்தில் கொண்டாட உன்னால் முடியுமா-? உன்னால் முடியாதென்றால், இப்பொழுதே உன் கையை தேவனிடம் உயர்த்தி, ''தேவனே, அதைக் குறித்த நிச்சயம் எனக்கில்லை. அப்படி என்னால் செய்ய முடியுமோ இல்லையோவென்று எனக்கு தெரியவில்லை. எனக்குதவி செய்வீரா-? ஆண்டவரே, என் கையை உம்மிடம் உயர்த்துகிறேன். எனக்குதவி செய்யும்" என்று கூறுவீர்களா-? 266. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக-! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக-! அது நல்லது. ''ஆண்டவரே, நீர் எனக்கு சேவை. எனக்குதவி செய்யும். நான் எழுப்பப்பட விரும்புகிறேன். இப்பொழுதே நான் மறைவான வல்லமையை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். ஆண்டவரே, அது சரியென்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்," என்று ஜெபியுங்கள். நான் தவறு செய்ய முடியாது. நான் தவறு செய்ய விரும்பவில்லை. ஏனெனில் காலதாமதமாகி விடும். இன்றே அந்த நாள், இன்றே அந்த நாள் தாமதிக்க வேண்டாம். 267. அண்மையில் நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது கறுப்பு நிறத்தவர் ஒருவர் கட்டிடத்திற்குப் பின்னால் வந்து என்னை சந்தித்தார். அவர், ''சங்கை போதகரே, உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நீர் கூறினது சரியே'' என்று கூறிவிட்டு "அநேக நாட்களுக்கு முன்பே நான் ஆண்டவரிடம், என் கையில் பயணச்சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டேன். சேரவேண்டிய இடம் அதில் சரியாக அச்சடிக்கப்பட்டு உள்ளதா என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் நதியின் கரையில் அநேக தொந்தரவுகள் ஏற்படும். நானும் அந்த நதியை அடைந்து கொண்டிருக்கிறேன். அங்கு எனக்கு எவ்வித தொந்தரவும் இருக்கக் கூடாது. அதை இப்பொழுதே சரிபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்" என்றார். 268. அது உண்மை. உன்னிடம் தேசத்தினுள் நுழையும் அனுமதிச் சீட்டு (Visa) உள்ளதா-? அது இல்லாமற் போனால்... உன்னிடம் 'பாஸ்போர்ட் (Pass port) இருக்கலாம். ஆனால் அனுமதிச் சீட்டை நீ வைத்திராமற் போனால், அந்த தேசத்தில் பிரவேசிக்க முடியாது. அது உனக்குத் தெரியும். எல்லாம் கைவசம் உள்ளதா? இல்லையேல், அதை பெற்றுக் கொள்ள இதுவே தருணம். 269. சற்று யோசியுங்கள். நீங்கள் இப்பொழுது பயந்து போயிருந்தால்... ஏறக் குறைய 100 கைகள் இப்பொழுது உயர்த்தப்பட்டன. எனவே நீங்கள் பயமுற்று இருந்தால், இப்பொழுதே சரி செய்து கொள்ளுங்கள். 270. நாம் வெவ்வேறு முறைகளை கடைபிடித்து வருகிறோமென்று நான் அறிவேன். சிலர், "வாருங்கள், உங்கள் கைகளை நான் குலுக்கட்டும்” என்கின்றனர். வேறு சிலர், "பீடத்தினருகில் வந்து முழங்கால்படியுங்கள்' என்கின்றனர். இவையெல்லாம் நல்லது தான். அதற்கு விரோதமாக நான் ஒரு வார்த்தையும் கூறப்போவதில்லை. ஆனால் நான் கடைபிடிக்கும் முறையை உங்களிடம் கூறட்டும்: ''விசுவாசித்தவர்கள் எல்லாரும்......" பீடத்தினருகில் வருதல் உங்களை விசுவாசிக்கச் செய்யாது. போதகருடன் கைகுலுக்குதல் உங்களை விசுவாசிக்கச் செய்யாது. ஆனால் நீ தேவனால் அழைக்கப்பட்டு, தொடக்கத்திலேயே கழுகாய் இருப்பாயானால், ஒரு சிறு சத்தத்தை நீ கேட்கும் போது, நீ யாரென்பதை அறிந்து கொள்வாய். நீ விசுவாசிக்கிறாயா? நீ உண்மையாக விசுவாசிப்பாயானால், உன்னுடன் நான் ஜெபம் செய்யப் போகிறேன். 271. அந்த சத்தத்தைக் கேட்ட பின்பு, அந்த கழுகுக் குஞ்சு தானியக் களஞ்சிய முற்றத்தில் இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள். இல்லை-! இல்லை-! நண்பனே, அங்கு இன்னும் தங்கியிருக்க வேண்டாம். இப்பொழுதே நாம் எடுத்துக்கொள்ளப்படுவோமாக-! கர்த்தரின் கிருபை இங்குள்ளது. 272. பரலோகப் பிதாவே, நாங்கள் கூட்டத்தை முடிக்கும் தருணத்தில் வந்திருக்கிறோம் என்பதை உணருகிறோம். இன்னும் அதிக காலம் நாங்கள் இங்கிருக்கப் போவதில்லை. எங்கள் வயதை அது சார்ந்ததல்ல. அந்த நேரத்தை அது சார்ந்துள்ளது. அது நிகழும் போது, இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் அநேக வாலிபர்கள் அதைக் காண உயிரோடிருப்பார்கள். ஒருக்கால் அது இன்றும் கூட நிகழலாம். அந்த நிமிடத்தையும், மணி நேரத்தையும் நாங்கள் அறியோம், ஆனால் ஆண்டவர், 'இவைகளெல்லாம் சம்பவிப்பதை நீங்கள் காணும் போது...'' என்று கூறியுள்ளார். இவை நீண்ட நாட்களாய் சம்பவித்துக் கொண்டு வருகின்றன. 273. விஞ்ஞானிகளின் பிரகாரம், நாங்கள் அங்கு வந்து விட்டோம். ஆறு அல்லது ஏழு ஆண்டுகட்கு முன்பே, நாங்கள் நள்ளிரவுக்கு 3 நிமிடங்கள் என்னும் நிலையில் இருந்தோம். அதன் பின்பு கடிகாரத்தில் எவ்வளவு நேரமாகி விட்டது என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அதனருகில் நாங்கள் வந்து விட்டோம் என்று மாத்திரம் நாங்கள் அறிவோம். ஓ, தேவனே, அந்த உறுதியை நாங்கள் பெற்றுள்ளதை காணும் போது-! தேவனுடைய ஒவ்வொரு வாக்குத்தத்தத்திற்கும் எங்கள் இருதயம் 'ஆமென், என்று கூறி ஆமோதிப்பதைக் காணும் போது-! ஆவியானவர் தாமே எங்களுக்குள் வந்து எங்களை உயிர்ப்பித்துள்ளதை உணரும்போது-! 274. தேவனே, இக்காலையில் இந்த சகோதரர்கள் இதை புரிந்து கொள்வார்-களாக. என் சகோதரர்கள் அதை காணட்டும் - ஆவியானவர் உள்ளே வந்து தேவனுடைய வார்த்தைக்கு நம்மை உயிர்ப்பிக்கிறார் என்பதை. ஆண்டவரே, என் சகோதரிகளும் அதை காணட்டும். அவர்களை வார்த்தைக்கு உயிர்ப்பிக்காத ஒன்றை அவர்கள் காண்பார்களானால், ஓ, தேவனே, அவர்கள் அதை உடனடியாக அகற்றி விடட்டும். பிதாவே, இதை அருளும். இவை அனைத்தும் உமது கரங்களில் உள்ளன. 275. நான் எத்தனையோ காரியங்களில் தவறியிருக்கிறேன் என்றும், இன்னும் தவறிக் கொண்டிருக்கிறேன் என்றும் நான் அறிகிறேன். ஆனால் ஆண்டவரே, எனக்குத் தெரிந்த வரை, இவைகளை நான் செய்து கொண்டு வந்திருக்கிறேன். இப்பொழுது அது உமது கரங்களில் உள்ளது. அவர்கள் இயேசுவின் நாமத்தில் உம்முடையவர்கள். பிதாவே, அவர்களை ஏற்றுக்கொள்வீராக! இங்கு வந்திருப்பவர்களில் சரீர சுகம் தேவைப்படுவோர்..... 276. இங்கு எத்தனை விசுவாசிகள் உள்ளனர்-? கைகளை உயர்த்துங்கள். "எனக்குத் தெரிந்தவரை, நான் ஒரு விசுவாசி” என்று சொல்லக் கூடியவர்கள்! உங்களில் எத்தனை பேர், எவ்வித சந்தேகமுமின்றி, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டிருக்கிறீர்கள் என்னும் நிச்சயத்தை உங்கள் இருதயங்களில் கொண்டவர்களாயிருக்கின்றீர்கள்? ஓ, என்னே! அப்படியானால் இக்கூட்டத்தில் என்னவெல்லாம் நிகழக்கூடும்! 277. நான் தாமதப்படுத்தி விட்டேன் என்று அறிவேன். ஆனால் இப்பொழுது என்ன நிகழக்கூடும்-? அதை சற்று சிந்தித்துப்பாருங்கள். மறைவான வல்லமை உங்களுக்குள் தங்கியுள்ளது. நீங்கள் தலைகளையுயர்த்தி தேவனிடம், "எனக்கு ஏதோ ஒன்று நேர்ந்துள்ளது என்று அறிகிறேன். நான் சரியாக இருக்க வேண்டியதில் சரியாக இல்லாமல் இருக்கலாம்'' என்று அறிக்கையிடுங்கள். நானும் அந்நிலையில் தான் இருக்கிறேன். ஆம், ஐயா. நான் இருக்க வேண்டிய இடத்திற்கு தொலை தூரத்தில் இருக்கிறேன். ஆனால் ஒன்று மாத்திரம் நானறிவேன். நான் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கிறேன். ஏதோ ஒன்று எனக்கு நேர்ந்துள்ளது என்று நானறிவேன். 278. இப்பொழுது நான் வயோதிபன். ஆனால் அது அநேக ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. நான் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அந்த நாளில், எனக்கு நேர்ந்த அந்த பெரும் போராட்டத்தில்... என் மனைவி மரிப்பதை நான் கண்டேன். அவளுடைய உயிருக்காக நான் தேவனிடம் மன்றாடினேன். ''தெருக்களின் மூலையில் நின்று பிரசங்கித்து, வியாதியஸ்தர்களுக்காக ஜெபம் செய்வதைத் தவிர, வேறென்ன நான் செய்தேன்?'' என்று ஆண்டவரிடம் முறையிட்டேன். அப்பொழுது சாத்தான், "உன் ஜெபத்திற்கு அவர் பதில் அளிக்கமாட்டார்' என்றான். அவள் மரிப்பதை நான் கண்டேன். ஆனால் அவளுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை இருந்தது என்று நானறிவேன். அந்த எலும்புகள் மறுபடியும் உயிர்த்தெழும். 279. என் சிறு குழந்தை கட்டிலில் படுத்துக் கிடந்தது. அதன் மேல் என் கைகளை வைத்து, ""தேவனே, அதை எடுத்துக் கொள்ளாதேயும்" என்று மன்றாடினேன். அவர் திரையினால் தம்மை மறைத்துக் கொண்டு, "இனி ஒரு போதும் உனக்கு செவி கொடுக்க மாட்டேன்'' என்று கூறினது போல் காணப்பட்டது. சாத்தானும், "பார்த்தாயா-?'' என்றான். தேவன் இல்லையென்று அவனால் என்னிடம் கூறமுடியவில்லை. ஏனெனில் அவர் இருக்கிறார் என்று எனக்குத்தெரியும். அனால் அவன், 'அவர் உன்னை நேசிக்கவில்லை, உனக்காக கவலை கொள்ளவில்லை'' என்று சொல்லி, அதற்கான காரணங்களைக் காட்டினான். அவன், ''நீ வாலிபன், உனக்கு 20 வயது தான் ஆகிறது. உன் மனைவி மரித்து -சவக்கிடங்கில் கிடக்கிறாள். உன் குழந்தையும் மரிக்கப் போகின்றது, அப்படியிருக்க நீ என்னமோ அவர் மகத்தான சுகமளிப்பவர் என்று கூறுகிறாய். அவர் என்ன செய்கிறார் என்று பார்த்தாயா-? அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும். அவர் பேச வேண்டிய அவசியமும் கூட கிடையாது. அவர் கீழே நோக்கிப் பார்த்து தலையசைத்தால் மாத்திரம் போதும். அப்பொழுது குழந்தை சுகமடையும். ஆனால் பார், அவர் உன்னை நேசிக்கவில்லை, உன் மேல் அக்கறை கொள்ளவில்லை, உன் குழந்தை சாகும்படி செய்கிறார். இந்த அந்தகார நேரத்தில்" உன் விண்ணப்பத்திற்கு செவி கொடுக்க மறுக்கிறார்.' என்றான். 280. அவன் கூறின அனைத்தும் முற்றிலும் உண்மையே. அவன், " நீ என்ன தவறு செய்தாய்-? நாள் முழுவதும் நீ. அவருக்காக. வேலை செய்து, உன்னால் நிற்கவும் கூட சக்தியில்லாமல் களைத்துப் போகிறாய். பிறகு இரவு பன்னிரண்டு, ஒரு மணி வரைக்கும் தெரு மூலைகளில் நின்று பிரசங்கம் செய்து. ஆஸ்பத்திரியில் வியாதியஸ்தர்களை சந்திக்கிறாய். நீ திரும்பி வந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டு, ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் தூங்கி விட்டு, பின்பு வேலைக்குச் சென்று விடுகிறாய். அடுத்த இரவும் அதையே செய்கிறாய். ஒவ்வொரு நண்பனும் வாலிபனும், வாலிபப்பெண்ணும், உன்னைப் பைத்தியக்காரன் என்கின்றனர். உன்னையே நீ முட்டாளாக்கிக் கொள்கிறாய் என்பதை உன்னால் அறிந்து கொள்ள முடியவில்லையா?' என்றான். 281. அவன் கூறினதை ஆமோதிக்க நான் ஆயத்தமானபோது, எனக்குள் இருந்த உயிர்ப்பிக்கும் வல்லமை, "கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்' என்றுரைத்தது. என் நம்பிக்கை எல்லாம் போன பின்பும் அவரே என் நம்பிக்கையும் உறைவிடமுமாய் இருக்கிறார் கிறிஸ்து என்னும் திடமான பாறையின் மேல் நிற்கிறேன் வேறெந்த அஸ்திபாரமும் அமிழ்ந்து போகும் மணலே அவர் எக்காள தொனியுடன் வரும்போது அவருக்குள் இருப்பதாக அப்பொழுது காணப்படுவேனாக. 282. அவருடைய நீதியின் வஸ்திரத்தினால் நான் சுற்றப்பட்டிருக்கிறேன், என் சொந்த வஸ்திரத்தினாலல்ல. என்னிடம் ஒன்றுமில்லை. என் வஸ்திரம் அழுக்கான கந்தையாயிருக்கிறது. 283. நான் பிரசங்கம் செய்தேன் என்னும் காரணத்தால் பரலோகத்திற்கு செல்ல முயல்வதை நான் விரும்பவில்லை. தரிசனங்கள் கண்டேன் என்பதனால் பரலோகம் செல்ல முயல்வதை நான் விரும்பவில்லை. அவருடைய கிருபையை என் இருதயத்தில் கொண்டு உள்ளபடியால் நான் பரலோகம் செல்கிறேன். அவர் என் மேல் பாராட்டும் கிருபை. அதன் காரணமாகத் தான் நான் அங்கு செல்கிறேன். நாம் எல்லோருமே அப்படித்தான் அங்கு செல்கிறோம். 284. ஓ, நண்பனே, நீ இந்த சரீரத்தின் ஒரு பாகமாயிருக்கிறாய். நீங்கள் தேவனுடைய சிறு பிள்ளைகளாயிருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்த இதை கூறுகிறேன். உங்களிடம் எனக்கு தயை கிடைத்தது, உங்களுக்கு நான் சத்தியத்தை எடுத்துக் கூறியிருந்தால், நான் கூறினவை.... அநேக ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கதரிசி கூறின விதமாக, என்னை நான் தீர்க்கதரிசியாக்கிக் கொள்ளவில்லை. இல்லை. ஐயா. நான் உங்களிடம் உண்மையைக் கூறுகிறேன். அவர் கூறின ஏதாவதொன்று நிறைவேறாமல் போனதுண்டா-? நான் பீனிக்ஸிலுள்ள உங்களை 20 ஆண்டு காலமாக அறிவேன். சகோ.அவுட்லா சபையில் “அவருடன் பேசி தீர்மானிக்க விரும்புகிறேன்'' என்னும் பாட்டை கேட்ட முதற்கொண்டு; அல்லது சகோ.கிராசியா சபையிலா-? நான் கர்த்தரின் நாமத்தினால் உரைத்த ஏதாகிலும் நிறைவேறாமல் போனதுண்டா-? 285. ஒரே ஒரு நம்பிக்கை மாத்திரமே உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றுக் கொள்ளுங்கள். மற்றெல்லாம் உங்களை விட்டுப் போனாலும், அது உங்களை பிடித்துக் கொண்டிருக்கும். 286. சிலர், "சகோ. பிரன்ஹாமே, உங்கள் மார்க்கத்தை நீங்கள் காத்து கொண்டு வருகிறீர்களா?' என்று கேட்டனர். 287. நான், "அல்ல, அது தான் என்னைக் காத்து வருகிறது. நான் அதை காப்பதில்லை. நான் அவரைப் பிடித்திருக்கிறேனா இல்லையா என்பது அல்ல. அவர் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறாரா இல்லையா என்பது தான் முக்கியம். எனக்காக அவர் பிடித்துக் கொண்டார். அவர் அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை'' என்றேன். 288. தேவதூதர்கள் எல்லா மரங்களிலும் உட்கார்ந்திருந்தனர். 'உன் விரல்களை தளர்த்தி சுட்டிக்காட்டு. அதை சிலுவையின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டுமெனும் அவசியமில்லை. உன் விரலை சுட்டிக்காட்டி என்ன நடக்கிறதென்று பார். ''கேலி, செய்யும். அந்த கூட்டத்தினரைப் பாருங்கள். அவர் மாத்திரம் அப்படி செய்திருப்பாரானால் எனக்கு இன்று இந்த சாட்சி இருந்திருக்காது. உனக்கும் அது இருக்க முடியாது. ஆனால் அவர் சிலுவையில் நிலை கொண்டதால், நானும் அவருடன் பிடித்துக் கொண்டு இருக்கிறேன். கிறிஸ்து என்னும் திடமான பாறையின் மேல் நிற்கிறேன் வேறெந்த அஸ்திபாரமும் அமிழ்ந்து போகும் மணலே 289. நீங்கள் வியாதிப்பட்டிருந்தால், உங்கள் கைகளை ஒருவர் மேல் ஒருவர் வைப்பீர்களா-? ஜெபம் செய்வோம். உங்கள் அருகிலுள்ள ஒருவர் மேல் கைகளை வையுங்கள். உங்களுக்கு என்ன கோளாறு இருந்தாலும், இப்பொழுது விசுவாசியுங்கள். நான் எப்பொழுதாவது உங்களுக்கு சத்தியத்தை உரைத்து இருந்தால், இப்பொழுது அதை உரைக்கிறேன். "விசுவாசிக்கிறவர்களால் இன்னின்ன அடையாளங்கள் நடக்கும்'' என்று இயேசு கூறினார். நீங்கள் விசுவாசிகள். உங்கள் கைகளை உயர்த்துங்கள். சந்தேகப்பட வேண்டாம். மிகவும் அவதியுறும் ஒரு நபரின் மேல் உங்கள் கைகளை வைத்து இருக்கிறீர்கள். யாரோ ஒருவர் - தன் கையை உன் மேல் வைத்திருக்கிறார். 290. அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையை நினைவில் கொள்ளுங்கள் இயேசுவை கல்லறையிலிருந்து எழுப்பின அந்த வல்லமை. உங்கள் சரீரத்தில் அந்த வல்லமை தங்கியுள்ளது என்று விசுவாசியுங்கள். அது நீங்கள் கைகளை வைத்துள்ள அந்த நபருக்கு உதவி செய்யப் போகின்றது. அது உங்களுக்குள் வாசமாயிருந்தால், சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் அது உயிர்ப்பிக்கும். 291. அன்புள்ள தேவனே, பகல் வேளையில் இங்கு நான் நின்று கொண்டு இருக்கிறேன். ஏறக்குறைய இந்த வேளையில் தான் இயேசு, "என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கை விட்டீர்?'' என்று உரத்த சத்தமிட்டார்... "தாகமாயிருக்கிறேன்” என்றார் அவர். அதை தீர்க்கதரிசி முன்கூட்டி கண்டு, "அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் கைகளையும் கால்களையும் உருவக் குத்தினார்கள்” என்று கூறினதில் வியப்பு ஓன்றுமில்லை. "அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப் பட்டார். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்கள் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது, அவருடைய தழும்பு-களால் குணமாகிறோம்." தேவனே, இதை இன்று காலை நாங்கள் உரிமை கோருகிறோம். 292. இந்த உயிர்த்தெழுந்த நாளின் காலையிலே, தேவனே, உம்முடைய சமுகத்திற்கு முன்பாக, உம்முடைய வார்த்தையிலிருந்து, உறுதிப்படுத்தப்பட்ட சத்தியத்தை நான் எடுத்துக் கூறினேன் என்பதை கவனிப்பீராக-! அவரே நியாயாதிபதி. அவர் நம்மை மீட்டார் என்பதற்கும், தேவனுடைய கிருபையினால் நமக்குள் அந்த உயிர்த்தெழுதலின் வல்லமை தங்கியுள்ளது என்பதற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். 293. எங்கள் நண்பர்கள் வியாதிப்பட்டு உள்ளனர். அவர்கள் மேல் கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஓ, தேவனே, இன்று காலை நாங்கள் பெற்றுள்ள எங்கள் விசுவாசத்தின் மத்தியில், பிசாசுக்கு நாங்கள் சவால் விடுகின்றோம். ஜனங்கள் மேல் கைகள் வைக்கப்பட்டு, என்னுடைய கைகள் ஜனங்கள் மேல் நீட்டப் பட்டிருக்கும் இவ்வேளையில், உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த சத்தியத்தின் முன்னிலையில், ஜனங்களை பீடித்திருக்கும் எல்லா வியாதிகளும், இன்னல்களும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்களை விட்டு வெளி வருவதாக-! இன்று இந்த ஜனங்கள் விடுவிக்கப்படுவார்களாக! 294. வேதாகமம் - தேவனுடைய வார்த்தை - "வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்றுரைத்துள்ளது. தேவனே, எங்கள் கரங்கள் உம்மை நோக்கி உயர்த்தப்பட்டுள்ளன. பூமியிலுள்ள ஒவ்வொரு செடியும் உம்முடைய ஊற்றிலிருந்து தண்ணீர் குடித்து, வளரத் தொடங்குகிறது. தானியம், பூக்கள், எதுவாயிருந்தாலும், உம்முடைய ஊற்றில் இருந்து நீரைப்பருகி, உம்மை நோக்கி வளருகின்றது. ஆண்டவரே, நாங்களும் இன்று காலை சில அங்குலங்கள் வளர்ந்திருக்கிறோம். நாங்கள் சற்று உயர்த்தி இருக்கிறோம். உம்முடைய ஊற்றிலிருந்து நாங்கள் பருகுகிறோம். நாங்கள் உமது சிருஷ்டிகள். ஆண்டவரே, உம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை எங்களுக்குள் கொண்டவர்களாய் எங்கள் சகோதரருக்காகவும், சகோதரிகளுக்காகவும் ஏறெடுக்கும் விண்ணப்பத்திற்கு செவி சாய்க்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறோம். ஆண்டவரே, இந்த வல்லமையைக் கொண்டுள்ள இந்த அருமையான ஜனங்களை துன்புறுத்திக் கொண்டிருக்கும் எல்லா வியாதிகளையும் அவர்களை விட்டு விலக்கி, அவர்கள் உம்மை சேவிக்க அருள் புரியும். ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்கள் சுகமடைவார்களாக. ஆமென். 295. அவரை விசுவாசிக்கின்றீர்களா? இப்படிப்பட்ட ஒன்றை நீங்கள் விட்டுவிடப் போகின்றீர்களா-? உங்களால் எப்படி முடியும்-? அது உங்களை இழுத்துக் கொள்வதால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு அப்படிப்பட்ட உணர்ச்சி ஏற்படுகின்றதா-? ஒருக்கால் எனக்கு.... நீங்கள் இப்படி உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தின் மத்தியில் நான் வரும் போதெல்லாம் எனக்கு ஒரு வினோதமான உணர்ச்சி ஏற்படுகின்றது. இந்த அறையில் காணக் கூடாத ஏதோ ஒன்று, வானொலி, தொலைக்காட்சியைப் போன்று, கடந்து சென்று கொண்டிருக்கிறது என்று நானறிவேன். கிறிஸ்து இந்த அறைக்குள் இருக்கிறார். சற்று சிந்தித்துப் பாருங்கள் - நமது மீட்பர் இங்கிருக்கிறார் என்பதை. டோனி-! அவர் இங்கிருக்கிறார். ஆமென்-! தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றும் வெளிப்படுகின்றது என்னும் வேத அத்தாட்சியுடைய ஜனங்களாகிய நம்மைவிட வேறு யார் அதிக சந்தோஷமாக இருக்கமுடியும்-? இவைகளை நாம் கண்கூடாகக் காண்கிறோம் காலா காலங்களில் தேவதூதர்களுக்கும் கூட அது வெளிப்படவில்லை. தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த யாவும் அப்படியே நிறைவேறி வருகின்றன. அவருடைய வருகைக்கு சற்று முன்னால் நாம் இருக்கிறோம். ஓ, என்ன அற்புதமான நேரம்! 296. அவரை நாம் காண்போம். என்றாவது ஒரு நாளில் அவர் இங்கிருப்பார். அவர் வரும் வரைக்கும், எனக்காக ஜெபிப்பீர்களா? 297. எனக்கு முன்னால் பயங்கர ஆபத்துகள் இருக்கின்றன. அது எனக்குத் தெரியும். நான் அஞ்ஞானிகளை சந்திக்கிறேன். தண்ணீர் குடிப்பது போல் அவ்வளவு சாதாரணமாக அவர்கள் நம்மை சுட்டு கொன்று விடுவார்கள். அவர்களுடைய ஆதிக்கத்தில் நாம் வரும்போது, நமது உயிரையே கிரயமாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும். பிசாசுகள் சர்வ சாதாரணமாக வேதத்தைக் குறித்து நமக்கு சவால் விடுகின்றன. ஆனால் தேவன் வெற்றி சிறக்காத ஒரு நேரத்தையும் நான் கண்டதில்லை. நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செல்கிறேன். அவரே, நித்திய ஜீவனின் நம்பிக்கையும், உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறார். ''உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றக்கும் மரியாமலும் இருப்பான்.(யோவான்.11:26). அது தேவனுடைய நித்திய வார்த்தையாயுள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்களும் அவ்வாறு ஜெபிப்பீர்களா-? உங்களுக்காக நான் ஜெபிப்பேன். 298. நாம் மறுபடியும் சந்திக்கும் வரை தேவன் நம்மைக் காத்துக் கொள்வாராக. இப்பொழுது நாம் சற்று நேரம் எழுந்து நிற்போம். நாம் தலைவணங்குவோம். இச்சிறிய பாடலைப் பாடாமலிருப்பது சரியல்ல. அல்லவா-? ''நான் அவரை நேசிக்கிறேன்'' என்னும் நமது பாடல் உங்களுக்கு ஞாபகமுள்ளதா-? இப்பொழுது நாம் அதைப் பாடுவோம். அருமை சகோதரியே, நீங்கள் பியானோ வாசிப்பீர்களா-? சகோதரியே, நீங்கள் பியானோ வாசிப்பதை நான் பாராட்டுகிறேன் என்று கூற விரும்புகிறேன். 299. நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முதலில் அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். 300. இப்பொழுது நாம் வேறொரு பாடலைப் பாடப் போகின்றோம் என் விசுவாசம் உம்மை மேலே நோக்குகிறது கல்வாரியின் ஆட்டுக்குட்டியே தெய்வீக இரட்சகரே இப்பொழுது நான் ஜெபிக்கும் போது கேளும் என் குற்றங்களையெல்லாம் போக்கி விடும் இன்று முதல் நான் முற்றிலும் உம்முடையவனாயிருக்கட்டும். 301. அது உங்களுக்கு ஏதோ ஒன்றை செய்கின்றதல்லவா-? அது உங்கள் எத்தனை பேருக்கு பிரியம்? எனக்கு யூபிலி பாட்டுகள் பிரியம். ஆனால் நாம் ஆராதனையின் ஆவிக்குள் இருக்கும் போது, இப்பழைய பாடல்கள் உங்களுக்குப் பிரியமல்லவா? பரிசுத்தாவியானவர் எட்டி, ப்ரூயிட் போன்றவர் மேல் அசைவாடி இந்த அருமையான பழைய பாடல்களை எழுதச் செய்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். அப்படி நீங்களும் விசுவாசிக்கின்றீர்கள் அல்லவா-? ஃபானி கிராஸ்பி இவ்விதம் எழுதினாள். 302. ஓ, மிருதுவான இரட்சகரே என்னை கடந்து செல்லாதேயும் என் தாழ்மையான கூக்குரலைக்கேளும் மற்றவர்களை நீர் சந்திக்கும் போது என்னை மாத்திரம் கடந்து செல்லாதேயும் நீரே என் ஆறுதலின் ஓடை நீர் ஜீவனை விட எனக்கு மேலானவர் இவ்வுலகில் உம்மைத் தவிர எனக்கு யாருண்டு? பரலோகத்திலும் நீரேயன்றி வேறு யார் எனக்குண்டு-? 303. அது மிகவும் அற்புதமல்லவா? அது “ நான் அவரை நேசிக்கிறேன்' என்னும் பாடலை பாடத் தூண்டுகிறது. இல்லையா? நாம் இப்பொழுது " நான் அவரை நேசிக்கிறேன்'' என்னும் பாடலைப் பாடும் போது... நாம் ஒருவரையொருவர் நேசிக்கிறோம். நாம் அவ்வாறு ஒருவரையொருவர் நேசிக்காவிட்டால், அவரை நாம் நேசிக்க முடியாது. நாம் எழுந்து நின்று ஒருவரோடொருவர் கை குலுக்குவோம். மேசையின் மறுபுறம் வரை கைநீட்டி, ஒருவரோடொருவர் கை குலுக்குவோம்: நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முதலில் அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 304. இப்பொழுது நாம் தலைவணங்குவோம் இப்பொழுது. வாலிப சகோ. வில்லியம்ஸை இங்கு ஒரு நிமிடம் வரும்படியாக அழைக்கப் போகிறேன். ஜெபம் செய்து கூட்டத்தை முடிக்க அவரைக் கேட்டுக் கொள்ள போகிறேன், 305. நான் சகோ.வில்லியம்ஸை நேசிக்கிறேன். அவர் ஒரு வாலிப கிறிஸ்தவர். அவர் உண்மையாகவே தேவனுடைய ஊழியன் - அவருடைய சிறு குடும்பமும். நான் இவர்களுடனும், மாஸ்லி பையன்களுடனும், மற்றவர்களு-டனும் மிகுந்த ஐக்கியம் கொண்டிருக்கிறேன். நாங்கள் ஒன்றாக இருந்து இருக்கின்றோம். என் முழு இருதயத்தோடு நான் நேசிக்கும் அநேக நண்பர்கள் பீனிக்ஸில் எனக்குள்ளனர். அன்று காலை நான் கண்ட தரிசனத்தில், "நீ நேசிப்பவர்கள் அனைவரையும், உன்னை நேசிப்பவர்கள் அனைவரையும் தேவன் உனக்குத் தந்தருளினார்'' என்று அவர் கூறினார். 306. இங்கு யாராகிலும் தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டுக் கொண்டு இருக்கலாம். அங்கு தரையில், ஒரு வாலிபப்பெண் அழுது கொண்டிருக்கிறாள். அவளுக்காக நாம் 'சற்று தலைவணங்குவோம்.